Published:Updated:

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!
உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

இந்த இதழ் டாக்டர் விகடன்: https://bit.ly/2QLJUZc

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

இருபது வருடங்களுக்கு முன்புவரை பெரும்பாலான வீடுகளில் சுவர் முழுக்க, புகைப்படங்களும் ஃபிரேம்களும் நிறைந்திருக்கும். வீட்டிலிருக்கும் நபர்களின் சிறு வயது புகைப்படம், திருமணப் புகைப்படம், வீட்டின் சுட்டிகளின் குறும்புகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள், விழா நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் என சுவர் நிறைய குடும்பத்தினரின் புகைப்படங்களால் நிறைந்திருக்கும்.  கூட்டுக் குடும்பங்கள் அதிகமிருந்த காலகட்டத்தில், தாத்தா - பாட்டி  தொடங்கி வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள்வரை எல்லோரையும் ஒன்றிணைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இன்று இந்தப் பழக்கம் குறைந்துவிட்டது. 

'வீட்டில் புகைப்படங்களை வைக்காமலிருப்பதால் என்ன மாறிவிடப் போகிறது?' என நினைக்கும் பெற்றோர் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். புகைப்படங்கள், வெறும் ஒரு நிமிட 'க்ளிக்' அல்ல. ஒவ்வொரு புகைப்படமும், ஒரு கதைசொல்லி. உறவுகளுடன் நாம் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், உறவுகளைப் பற்றிய கதைகளைச் சொல்லும்...

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

- 'ஒருவரின் ஏக்கத்தையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்துவது குடும்பத்தினருடனும் உறவுகளுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்தாம்' என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். பெரியவர்களைவிட, சின்னக் குழந்தைகள்தாம் குடும்பப் புகைப்படங்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களாம். இது குறித்த விரிவான உளவியல் பார்வையை முன்வைக்கிறது 'குடும்பப் புகைப்படம் - நம் நலம் காக்கும் நல்ல படம்!' எனும் கவர் ஸ்டோரி.

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!


இன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது `இயன்முறை மருத்துவம்' எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy). `பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை' போன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்' முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும். 

- பிசியோதெரபி பிரிவுகள் முதல் சிகிச்சை முறைகள் வரை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து அடிப்படை விஷயங்களை நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது 'பிசியோதெரபி - ஏன் எதற்கு எப்படி?' எனும் தலைப்பிலான பாக்கெட் டாக்டர் இணைப்புப் பகுதி.

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!


'குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வராதது, அதிக நாள்கள் ரத்தப்போக்கு இருப்பது, அளவுக்கதிகமான அல்லது மிகக்குறைவான அளவே ரத்தப்போக்கு, மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி ஏற்படுவது என்று பெண்களுக்கு மாதவிடாயில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இப்படியான சிக்கல்கள் நமக்குச் சொல்லவரும் செய்தி, 'குறிப்பிட்ட அந்த உடலில் ஹார்மோன் குறைபாடுகள் இருக்கின்றன' என்பதுதான். சினைப்பை நீர்க்கட்டி (பி.சி.ஓ.எஸ் - Polycystic Ovary Syndrome) பிரச்னையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

ஒரு வகையில், இது எச்சரிக்கையும்கூட. ஆனால், `அலட்சியமாகப் பிரச்னையை கவனிக்காமல் விட்டுவிட்டால், வருங்காலத்தில் கருத்தரித்தலில் தொடங்கி, புற்றுநோய்வரையிலான பல பாதிப்புகள் ஏற்படலாம்' என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து, போதிய விழிப்புஉணர்வு  இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை செல்லாமல், உரிய சிகிச்சையும் பெறாமல் தங்களுடைய உடல்நிலையை, மேலும் மேலும் கெடுத்துக்கொள்கிறார்கள். 

சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன, எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதை கவனிக்காமல்விடும்பட்சத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது 'சின்ன பிரச்னையல்ல - சினைப்பை நீர்க்கட்டி!' எனும் சிறப்புக் கட்டுரை.

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

"உடலில் வாய்வு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாகும் வாய்வு. மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு வீங்கி உப்புசம் ஏற்படுகிறது. 

- வயிறு நிறைய சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி நிகழும் பிரச்னை. சிலருக்கு, கடுமையான வயிற்றுவலியும் சேர்ந்து படுத்தி எடுத்துவிடும். வயிற்று உப்புசம் ஏற்பட என்ன காரணம், அது என்ன மாதிரியான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், அதற்கான தீர்வுகள் என்னென்ன என்று விவரிக்கிறது 'வயிற்று உப்புசம் தவிர்ப்பது எப்படி?' எனும் ஆர்ட்டிகிள்.

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

``ஏழு வயசுவரைக்கும் என்னால சுயமாக நடக்க முடியாமப் போனதால சோர்ந்துபோன எங்கம்மாவும் அப்பாவும் எத்தனையோ டாக்டர்ஸ், ஹாஸ்பிடல்ஸ்னு என்னைக் கூட்டிட்டுப் போயிட்டு இருந்தாங்க. அப்படித்தான் ஒருமுறை சென்னையில இருக்குற அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்தோம். பெருசா எந்த முன்னேற்றமும் இல்லைனு கிளம்பினப்போ, ஒரு அம்மா வந்து, 'ஒரு டாக்டர் இருக்காங்க... அவங்களை மட்டும் பார்த்துட்டுப் போங்க. நிச்சயம் நல்லது நடக்கும்'னு சொன்னாங்க. அவங்க ரொம்ப வலியுறுத்திச் சொன்னதால அம்மாவும் அப்பாவும் என்னை அவங்க சொன்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அந்தச்  சந்திப்புதான், என் வாழ்க்கையில பெரிய திருப்புமுனை!'' 

இந்த இதழ் டாக்டர் விகடன்: https://bit.ly/2QLJUZc

- தன் வாழ்க்கையை, ஒரு கதைபோலச் சொல்ல ஆரம்பிக்கிறார் சுந்தரி சிவசுப்பு. செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்டவர். தன் குறைபாட்டைக் கடந்து பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, வேலை என்று வெற்றிகரமாக முன்னேறியவர், அந்த வாழ்க்கைப் பயணத்தை 'A Bumblebee's Balcony' என்ற ஆங்கிலப் புத்தகமாக எழுதி, வெளியிட்டிருக்கிறார். விட்ட கண்ணியிலிருந்து சுவாரஸ்யம் கோத்துத் தொடர்ந்த சுந்தரியின் தன்னம்பிக்கைப் பயணத்தைச் சொல்கிறது 'வாழ்க்கை எனக்குச் சொன்ன சீக்ரெட்!' எனும் சிறப்பு ஆர்ட்டிகிள். 

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

விளையாடும் இடங்களில் ஊஞ்சல், சறுக்கு மரம், சீசா போன்றவற்றில் கூர்மையான முனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் இறுக்கமாகப் பிடித்துக்கொள்வதற்கு ஏதுவாக இரும்பில் கைப்பிடிகள் இருக்க வேண்டும். விளையாட்டுப் பொருள்கள் அனைத்தும் மரத்தில் செய்யப்பட்டதாக (Fibre Wood) இருந்தால், விழுந்தால்கூட பெரிய அளவில் காயம் ஏற்படாது. விளையாட்டுப் பொருள்கள் குழந்தைகளுக்குக் கால் எட்டுகிற உயரத்தில்தான் இருக்க வேண்டும்...

- மொபைல் மோகத்திலிருந்து மீட்டு குழந்தைகளை விளையாட்டு மைதானங்களுக்குத் திருப்ப வேண்டியது பெற்றோருக்கான அவசரகால ஆலோசனை. அதே நேரம் பிள்ளைகள் விளையாடும் இடமும் சூழலும் பாதுகாப்பானதாக இருப்பதையும் பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும். அதற்கான 7 முக்கிய ஆலோசனைக் குறிப்புகளை வழங்குகிறது 'பாதுகாப்புடன் விளையாடுகிறார்களா குழந்தைகள்?' எனும் ஆர்ட்டிகிள்.

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

டி.பேகுர், கர்நாடக மாநிலத்தின் ஒரு சாதாரண கிராமம். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையிலிருந்தே அந்தக் கிராமத்தில் கூட்டம் சேர ஆரம்பித்துவிடும். சுமார் 200 கி.மீ தொலைவிலிருந்துகூடக் கிளம்பி வருகிறார்கள். சனிக்கிழமை இரவில் அந்த இடத்திலிருக்கும் கொட்டகைகளிலேயே தங்கிவிடுகிறார்கள். அப்போதுதான் ஞாயிறு காலையில் சீக்கிரமாக அவரைச் சந்திக்க முடியும். அவர் என்றால், டாக்டர் ரமணா ராவ். 1974, ஆகஸ்ட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. டாக்டர் ரமணா, தன் ஸ்டெதாஸ்கோப்புடனும், சில மருந்து மாத்திரைகளுடனும் டி.பேகுருக்கு வந்தார். அங்கே தன் நிலத்தில் ஒரு மேசை, நாற்காலி போட்டு உட்கார்ந்தார். 'இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும்' என்று ஊர் மக்களிடம் அறிவித்தார். அன்றைக்குக் காலை முதல் மாலைவரை ஐந்து பேர் வந்தார்கள். அவர்களுக்கு வைத்தியம் பார்த்தார். இலவசமாக மருந்து கொடுத்தார். மனதுக்கு நிறைவாக இருந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் வந்தார். சுமார் 46 வருடங்களாக இதைத் தவறாமல் செய்துவருகிறார்...

- மைசூர் மகாராஜாவும் அவர் குடும்பத்தினரும் டாக்டர் ரமணாவிடம் சிகிச்சை பெற்றவர்கள். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் போன்றோருக்கும் ரமணா சிகிச்சையளித்திருக்கிறார். இந்தப் புகழெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், டாக்டர் ரமணாவை நம்பி ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கிறது. இதன் பின்னணியை விவரிக்கிறது 'மாண்புமிகு மருத்துவர்கள் - ரமணா ராவ்' பகுதி.

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

சுய இன்பம் அனுபவிக்காதவருக்குத்தான் உறக்கத்தில் விந்து வெளியேறும். உடலில் ரத்தம் உற்பத்தியாவதுபோலத்தான் விந்தணுக்கள் உற்பத்தியும்.  ரத்தத்தை, உடலுக்குள்ளேயே பணிசெய்ய பணித்துவைத்திருக்கிறது இயற்கை. எனவே, அது வெளியாவதற்கு வேலை இல்லை. விந்தணுக்கள் வெளியேறவேண்டிய நிர்பந்தம் இருப்பதே, உயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரம். ஆகவே, நாம் வெளியேற்றாதபோது, தானாக வெளியேறி விரகம் தீர்த்துக்கொள்கிறது உடல். கண்ணால் கண்ட காட்சி, படித்த புத்தகம், பிடித்த பெண், ஆழ்மன ஏக்கம்... எல்லாமுமாகச் சேர்ந்து, கனவாகி விந்து வெளியேற்றம் காண்கிறது. தொடர்ந்து மனஅழுத்தம் (Stress), உறக்கமின்மையால் (Insomnia) அவதிப்படுவோருக்குத் தீர்வு சுய இன்பத்திலிருக்கிறது. அப்போது உற்பத்தியாகும் ஹார்மோன்களால், நல்ல உணர்வும் மன அமைதியும் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்குச் சற்றும் குறைவில்லாத இன்பத்தைத் தரும் இந்தப் பழக்கம்...

- சுய இன்பம் அனுபவித்தல் குறித்த விழிப்புஉணர்வு நம்மிடம் பெரிதாக இல்லை; அதைப் பற்றிக் கற்றுத் தரவும் ஆளில்லை. இணையத்தில் தேடினால், `சுய இன்பம் தவறானது' என்றே தகவல் கிடைக்கும் சூழலில், இதுகுறித்து மிக எளிதாகத் தெளிவுபடுத்தியிருக்கிறது 'கூடற்கலை - காமமும் கற்று மற!' பகுதி. 

உடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்!

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடனம் ஆடுபவர்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஏற்படும். எனக்கும் கால் மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டது. மூட்டிலிருக்கும் ஜவ்வுகள் கிழிந்துபோனதால், சில ஆண்டுகளாக  ஆடுவதை நிறுத்திவிட்டு நடன இயக்கம் மட்டுமே செய்துவருகிறேன். 

மாதவிடாய் நாள்களில் சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அப்போது தொடர்ந்து நடனம் ஆடுவது சிரமமே. ஆனால், என் மாணவர்களை மாதவிடாய் காலத்தில் தொடர்ந்து ஆடச் சொல்லி அறிவுறுத்துவேன். உட்கார்ந்து எழுவதால், மாதவிடாய் வலி குறையும். 

ஒரு நடனக் கலைஞர் தன் உடலைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். நடனப்பயிற்சி முடிந்ததும், வியர்வையுடன் சென்று குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. வியர்வை உலர்ந்த பிறகே குளிக்க வேண்டும்...

- நாட்டியக் கலைஞர்கள் ஆரோக்கியம் காக்கவேண்டியதன் அவசியம், அதற்கு என்னென்ன செய்யலாம் என்பதையெல்லாம் 'உடலுக்கும் தொழிலுக்கும்' தொடர் பகுதியில் விரிவாகப் பேசியிருக்கிறார் நடனக் கலைஞர் ராதிகா சூரஜித்.

இந்த வார டாக்டர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2ssW8fr

அடுத்த கட்டுரைக்கு