Published:Updated:

தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி டீன்கள் திடீர் இடமாற்றம்!

தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி டீன்கள் திடீர் இடமாற்றம்!
தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி டீன்கள் திடீர் இடமாற்றம்!

மதுரை, திருச்சி,  புதுக்கோட்டை, பெரம்பலூர், தூத்துக்குடி ஆகிய 5 மருத்துவக்கல்லூரிகளின் முதல்வர்களை  இடம் மாற்றம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை, திருச்சி  ஆகிய மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் ஓய்வு பெற்றதையடுத்து அந்த இடத்திற்குப் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர்களை நியமித்தும், புதுக்கோட்டை, பெரம்பலூர், தூத்துக்குடி  ஆகிய 3 மாவட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர்களை இடமாற்றம் செய்தும் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, மதுரை மருத்துவக்கல்லூரி டீன் மருதுபாண்டியன் ஓய்வு பெறுவதால், அந்த இடத்திற்குச் சிவகங்கை மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் கே.வனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வராக இருந்த டாக்டர் அனிதா ஓய்வு பெறுவதால், அந்த இடத்திற்குப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் சாரதா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சாரதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த இடத்திற்குப் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக  டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த இடத்திற்குத் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் வசந்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் வசந்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அந்த இடத்திற்குக் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.