Published:Updated:

வைஜித்துக்கு ஏன் இந்த நிலைமை! #SaveVyjith

வைஜித்துக்கு ஏன் இந்த நிலைமை! #SaveVyjith
வைஜித்துக்கு ஏன் இந்த நிலைமை! #SaveVyjith

UNICEF - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் 2015 அறிக்கையின்படி இந்தியாவில் குணப்படுத்தக்கூடிய வியாதிகளினால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அந்தாண்டு மட்டும் 12 இலட்சமாகும். துரிதமாக வளர்ந்துவரும் உலகநாடுகளில் ஒன்றான இந்தியாவில்தான் ஐந்து வயதைத் தாண்டாமல் பச்சிளங் குழந்தைகள் வருடந்தோறும் இலட்சக்கணக்கில் இறந்துவருகின்றன என அதிரவைக்கிறது இந்த ஆய்வறிக்கை. இதில் கணக்கில் வராதவை எத்தனையோ!

வைஜித்துக்கு ஏன் இந்த நிலைமை! #SaveVyjith

வைஜித்தின் கதை...

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள கக்கநாடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 வயதுக் குழந்தை வைஜித். பிறந்து 5 மாதங்கள் வரை வைஜித்தின் உடல்நிலை சீராகவே இருந்தது, அதன்பிறகு குழந்தையின் உடல் எங்கும் தொற்று ஏற்பட்டு இரணங்கள் ஏற்பட ஆரம்பித்தன. ஆரம்பத்தில், எதாவது அலர்ஜியாக இருக்கக்கூடும் எனப் பெற்றோர் எண்ணியதால் பொது மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்தான் வைஜித். அதன்பிறகு பலவகையான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இப்போது வைஜித்தின் வயது 2, இதுவரை அவனது சிகிச்சைக்கு. இதுவரை 15 இலட்ச ரூபாய் பணத்தை தங்களது சக்திக்கு மீறி, கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளனர் அவன் பெற்றோர். வைஜித்தின் உடல் சற்று தேறினாலும், எப்போதும் உடலில் கடும் எரிச்சலும் வலியும் இருப்பதால், வைஜித் இப்போதெல்லாம் விளையாடுவதுகூட இல்லை. ஒரே இடத்தில் சோர்ந்துபோய் உட்கார்ந்துகொண்டு அழுவதே குழந்தையின் வாழ்க்கையாக மாறிவிட்டது. சதா சர்வகாலமும் உடலில் நமைச்சல் இருப்பதால்  அவனின் தூக்கமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வைஜித்தின் நிலைமை மாற்றப்படக்கூடியது...

குழந்தைக்கு வந்திருப்பது மிகவும் அரிதான நோய்களில் ஒன்றான ஆஸ்டீயோபெட்ரோஸிஸ் (Osteometrosis) எனும் மரபியல் சார்ந்த எலும்பு நோயாகும். இந்த நோய் உள்ளவர்களின் எலும்பு மிகவும் கெட்டித்தன்மையோடு இருப்பதால், எலும்பு முறிவு, வளர்ச்சியில் குறைபாடு, ஒவ்வாமை, பார்வை மற்றும் கேட்பதில் கோளாறு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது, இவற்றில் வைஜித் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளான். இவ்வியாதிக்கு தீர்வு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையாகும். தொடர்்ந்து சிகிச்சை எடுக்காமல் விட்டால் வைஜித்தின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஜித்தின் மேற்சிகிச்சைக்கு ரூ. 3 இலட்சம் தேவைப்படுவதால் அவனின் பெற்றோர் செய்வதறியாது தவித்துவருகின்றனர். தினசரி கூலியாக வேலைப்பார்த்து வரும் அவனின் தந்தை மற்றும் தாய்க்கு இந்தத்தொகை மிகப் பெரியதாகும். இவர்களுக்கு உதவ Edudharma.com மூலம் நிதி திரட்டும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குணப்படுத்தக்கூடிய வியாதிக்கு பணமின்மையால் சிகிச்சை தடைபடக்கூடாது. குழந்தையின்  உயிரைக்காக்க நம்மால் ஆன நிதியுதவியை https://www.edudharma.com/fundraiser/help-vyjith-bone-marrow லிங்கிற்குச் சென்று செய்யலாம்... சேய் உயிர் காப்போம்!

வைஜித்துக்கு ஏன் இந்த நிலைமை! #SaveVyjith

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.