அவசர சிகிச்சை தவிர, பிற மருத்துவத் தேவைகளுக்கு மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிய பிறகே சந்திக்கச் செல்வோம். ஆனால், மருத்துவரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய பிறகு, `அய்யோ... முக்கியமான விஷயத்தை டாக்டர்கிட்ட கேட்காம விட்டுட்டேனே’ என்று அங்கலாய்ப்பவர்கள் அதிகம். எனவே, மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் 8 விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

பட்டியலிடுங்கள்!

மருத்துவரைச் சந்திக்கச் செல்வதற்கு முன், அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள், தீர்த்துக்கொள்ளவேண்டிய சந்தேகங்களைப் பட்டியலிட்டு எழுதி, எடுத்துச் செல்லுங்கள்.

துணைக்கு ஆள் தேவை

உங்களுக்குத் துணையாக குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை உடன் அழைத்துச் செல்வது நல்லது. இதனால், மருத்துவர் உங்களிடம் கூறும் முக்கியமான விஷயங்களைத் தவறவிடாமல் இருக்கலாம்.

மருத்துவப் பதிவுகள் அவசியம்

மருத்துவரிடம் செல்லும்போது பரிசோதனை முடிவுகள் அல்லது முந்தைய சந்திப்பின்போது எழுதப்பட்ட பரிந்துரைச் சீட்டு ஆகியவற்றைத் தவறாமல் கொண்டுசெல்ல வேண்டும்.

மாத்திரைப் பட்டியல் தேவை

அதிக மாத்திரைகளை எடுத்துக்கொள்பவராக இருந்தால், அந்த மாத்திரைகளின் பட்டியல் அல்லது மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்லலாம்.

தாமதம் வேண்டாம்!

மருத்துவரிடம் நீண்ட நேரம் பேசி, ஆலோசனைகளைப் பெற்று அறையிலிருந்து வெளியேறும்போதுதான் சிலர் முக்கியப் பிரச்னைகளைச் சொல்வார்கள். அப்படியல்லாமல் மருத்துவரைச் சந்தித்ததும் தாமதிக்காமல், முக்கிய விஷயங்களை உடனே சொல்லிவிட வேண்டும்.

மருத்துவராக மாறாதீர்கள்!

நீங்களே மருத்துவராக மாறி உங்களுக்கு இந்த நோய்தான் ஏற்பட்டிருக்கிறது என்ற ரீதியில் மருத்துவரிடம் பேசாதீர்கள். உங்கள் உடலிலிருக்கும் பிரச்னைகளை மட்டும் தெரிவியுங்கள். மீதியை மருத்துவர் முடிவு செய்துகொள்வார்.

வளவளவெனப் பேசாதீர்கள்!

மருத்துவரிடம் தேவையில்லாமல் பேசி அவரது நேரத்தை வீணாக்காமல், உங்கள் பிரச்னைகளை மட்டும் தெரிவியுங்கள். உதாரணமாக, மூட்டுவலி என்றால், ‘எந்த இடத்தில் வலிக்கிறது’, ‘எப்போதிருந்து வலி எடுக்கிறது’, ‘வலியின் தன்மை’ என உங்கள் பிரச்னையின் தீவிரத்தை மட்டும் சொல்லுங்கள்.

சரிபார்த்தல்

மருத்துவர் அறையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், அவர் அளித்த ஆலோசனைகள், மருந்து, மாத்திரைகள் மற்றும் முக்கிய விவரங்களை அவரிடம் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இது மருத்துவரின் ஆலோசனையை சரியாகப் பின்பற்ற உதவும்.

ஜெனி ஃப்ரீடா