Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

தகவல்

அதிக ஒலியில் இசை; செவித்திறனை பாதிக்கும்!

லகெங்கும் 12 முதல் 35 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கானோர் செவித்திறன் குறைபாட்டுக்கு ஆளாகும் ஆபத்தில் இருப்பதாக எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். `நெடு நேரம் தொடர்ந்து அதிக ஒலியைக் கேட்பதே இதற்குக் காரணம்’ என்று சொல்லப்படுகிறது. `காதில் ஹெட்போன் அணிந்துகொண்டு சத்தமாக இசை கேட்பது அபாயகரமானது’ என்று சுட்டிக்காட்டுகிறது. செல்போனின் பரவல் அதிகமாகிவிட்ட இன்றையச் சூழலில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொடர்ச்சியாக இசை கேட்கிறார்கள். அதுவும் காதுக்குள் நேரடியாக வந்து வழியும் இசை. அதன் ஒலி அளவுக்கு நாம் கட்டுப்பாடு விதிக்காவிட்டால், செவித்திறனுக்கு பல பிரச்னைகள் ஏற்படக்கூடும்.  

டாக்டர் நியூஸ்!

உலக சுகாதார நிறுவனமும், சர்வதேசத் தொலைத்தொடர்புக் கூட்டமைப்பும் சேர்ந்து, தனிப்பட்ட ஒலிக்கருவிகளை உருவாக்குவது, பயன்படுத்துவதற்கான புதிய தர அளவுகளை சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றன. அதன்படி, `எந்த ஒலிக் கருவியையும் தொடர்ந்து பயன்படுத்தினால், செவித்திறனில் உண்டாகும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்; அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். ஹெட்போன், மொபைல்போன் மற்றும் பிற ஒலிக் கருவிகளைத் தயாரிப்பவர்களும், அரசாங்கமும் இதனை உடனடியாகக் கவனிக்க வேண்டும்’ என்று அந்த அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இசையை அதிக ஒலியளவில் கேட்காமல், மிதமாகக் கேட்டால் செவிகளுக்கு நல்லது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விரதமிருந்தால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகரிக்கும்!

டாக்டர் நியூஸ்!ம் ஊரில் பக்தியையும் விரதத்தையும் ஒன்றுடன் ஒன்று இணைத்திருக்கிறார்கள். இறைவனை வழிபட்டு, குறிப்பிட்ட நாளில் சாப்பிடாமலிருப்பது, நீர் மட்டும் அருந்துவது, குறிப்பிட்ட உணவைச் சாப்பிடுவது, சிலவற்றைச் சாப்பிடாமல் இருப்பது என விதவிதமான விரதங்கள் இருக்கின்றன. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் விரதமிருப்பார்கள். `குறிப்பிட்ட முறையில் விரதமிருந்தால், இவ்வளவு எடை குறையும்’ என்று கணக்குப்போட்டுச் சாப்பிடாமல் இருப்பவர்களும் உண்டு. சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வறிக்கையின்படி, விரதமிருப்பதால் மனிதர்களின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் மேம்படக்கூடும். ஆன்டிஆக்ஸிடன்ட்களின் உருவாக்கம் அதிகரிக்கக்கூடும். வயது அதிகரிப்பதன் விளைவுகள்கூட இதனால் மாறக்கூடும். விரதமிருப்பவர்களின் ரத்தம், பிளாஸ்மா, சிவப்பணுக்களை ஆராய்ந்து பார்த்தபோது இந்தச் சாத்தியக்கூறுகள் தெரியவந்திருக்கின்றன.

டாக்டர் நியூஸ்!

குடிநீரில் ஃபுளோரைடைக் கண்டறியும் கருவி!

கு
டிநீரில் ஃபுளோரைடு சேர்க்கும் வழக்கம் பல நாடுகளில் உள்ளது. ஆனால், அதன் அளவு லிட்டருக்கு 1.5 மி.கிவரைதான் இருக்க வேண்டும். அதிக ஃபுளோரைடு உள்ள நீரை அருந்துபவர்களுக்கு பற்கள், எலும்புகளில் நோய்கள் வரலாம். ஆனால், குடிநீரில் எவ்வளவு ஃபுளோரைடு இருக்கிறது என்பதை எப்படிக் கண்டறிவது, குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் குடிநீர் பாதுகாப்பானதுதானா என்று எப்படி உறுதிசெய்வது என்ற சந்தேகம் எழலாம். நீரை ஆய்வகத்துக்குக் கொண்டு சென்று ஆராய்ந்தால், ஃபுளோரைடு அளவைக் கண்டறியலாம். ஆனால், அதற்கு நிறைய நேரமாகும், செலவும் அதிகம்.

இந்தப் பிரச்னையைத் தீர்க்க, `சியான்-105’ (SION-105) என்ற எளிய கருவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம், யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தி, நீரிலிருக்கும் ஃபுளோரைடின் அளவைக் கண்டறியலாம்; இந்தக் கருவி சில நீர்த்துளிகளைக்கொண்டே ஃபுளோரைடு அளவைக் கண்டுபிடித்துவிடும். முன்கூட்டி அறிந்தால் பற்கள், எலும்புகளில் நோய் வராமல் பாதுகாக்கலாம்.

டாக்டர் நியூஸ்!

உணவுக்கு முன்னர் இனிப்பு சாப்பிட்டால் கலோரி குறையும்!

டை குறைக்க வேண்டுமென்றால், இனிப்பு உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்பது தெரியும். ஆனால் பாயசம், கேக், ஐஸ்க்ரீம், அல்வா ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடுகிறோம். `இவற்றைச் சாப்பிடாமலிருக்க முடியாவிட்டால், ஒரு சிறு மாற்றத்தைச் செய்து பாருங்கள்’ என்கிறது சமீபத்திய ஆய்வு.  உணவுக்குப் பின்னர் இனிப்பு சாப்பிடாமல், முன்னரே சாப்பிட்டுவிடுங்கள். இது ஒரு வகை மனித உளவியல். ஆரம்பத்திலேயே இனிப்பு சாப்பிட்ட ஒருவர், பிறகு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவாராம். அதாவது, அவரது மனம் இனிப்பால் ஏற்கெனவே உடலில் சேர்ந்துவிட்ட கலோரிகளை எண்ணிப் பார்த்து, மற்ற உணவுகளைச் சரியாகத் தேர்ந்தெடுக்கிறது. இதைப் பரிசோதிக்க, ஒரு கல்லூரி உணவகத்தில் எல்லோருக்கும் ஒரு கேக் அல்லது ஒரு பழம் பரிமாறப்பட்டது. பிறகு, யார் எவ்வளவு உணவை உட்கொள்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டது. முதலில் கேக் சாப்பிட்டவர்கள், பழம் சாப்பிட்டவர்களைவிட 30 சதவிகிதம் குறைவான கலோரிகளையே உட்கொண்டார்களாம்.

இனிப்பு சாப்பிடாமலிருந்தால் இன்னும் நல்லது, அது வேறு விஷயம்!  

என்.ராஜேஷ்வர் 

டாக்டர் நியூஸ்!

உதட்டுக் காயம் ஆற்றும் விளக்கெண்ணெய்

சி
லருக்கு அடிக்கடி உதடுகள் வறண்டு, வெடித்துப் புண்ணாகிவிடும். விளக்கெண்ணெய் மற்றும் கிளிசரின் தலா ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். தூங்கச்செல்வதற்கு முன் இதை உதடுகளில் தடவவும். காலையில் வெதுவெதுப்பான நீரில் நனைத்த பஞ்சினால் உதடுகளைத் துடைத்துச் சுத்தப்படுத்தவும். காயம் ஆறும்வரை இதைத் தொடரவும்.