Published:Updated:

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்
காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

இந்த இதழ் டாக்டர் விகடன்: https://bit.ly/2MTVaCE

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

'தேவதையைக் கண்டேன்... காதலில் விழுந்தேன்...' என்று கரன்ட் ஷாக் அடித்ததுபோல, பார்த்தவுடனே வரும் காதல்தான் காதலின் முதல்நிலை. பசி, தூக்கம் மறந்து காதல் ஒன்றே குறிக்கோளாக வாழும் போதை மூளைக்குள் ஏறிவிடும். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஓர் உருண்டை உருள்வதும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதும் காதலோ, காதலியோ செய்யும் செயல் அல்ல. மூளைக்குள் சுரக்கும் நியூரோட்ரான்ஸ்மிட்டரான 'டோபமைன்' என்ற நரம்பூக்கியின் செயல்பாடு அது. ஆக, 'கண்டேன் காதலை' என்று கவிதையில் சொல்லப்படுவது உண்மையில் 'டோபமைன் காதல்' என்கிறார்கள் அறிவியல்பூர்வமாக. டோபமைன், கண்டவுடன் தோன்றும் காதலுக்கு மட்டும் சுரப்பதில்லை. அதற்கெல்லாம் முன்பே உடல் அசைவு, ஞாபகத்திறன், கவன ஈர்ப்பு, கற்கும் ஆற்றல், பேச்சுத் திறமை என அனைத்திலும் முன்னின்று வழிநடத்துவதும் இந்த 'மோட்டிவேஷன் மாலிக்யூல்'தான்...

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

-  'உண்மையில் காதல் என்பது கவிதையல்ல; அது இருபாலரிடையே தோன்றும் பல்வேறு வகையான ரசாயனங்களின் கலவைதான்' என்று உறுதிசெய்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள். அந்த ரீதியில் காதலை அணுகுகிறது 'ஆதலினால் காதல் செய்வோம்! - கெமிஸ்ட்ரி அறிவோம்!' எனும் கவர் ஸ்டோரி. 

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

* பேருந்து, ரயிலில் உட்கார இடமில்லாமல் தோள்களில் பையைத் தொங்கவிட்டபடி, நின்றுகொண்டே பயணிப்பவர்கள் தோளில் ஒருபக்கமாகச் சுமந்து செல்வது ஆபத்தானது. வருடக்கணக்கில் இப்படிச் சுமைகளுடன் பயணப்பட்டால், தசைகளில் பிரச்னை ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வலி எடுக்கத் தொடங்கும். இதனால் காலப்போக்கில் தசைப்பிடிப்பு, பின்முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுத் தேய்மானம், குடலிறக்கம், டிஸ்க் தேய்மானம் போன்றவை ஏற்படக்கூடும். தீவிரமான தலைவலி ஏற்படுவது இவற்றின் முதல்நிலை. அதைத் தொடர்ந்து, தேவையில்லாத மனஉளைச்சல் ஏற்படக்கூடும். 25, 30 வயதைத் தொடும் இளம்பெண்கள்கூட தாங்க முடியாத கழுத்துவலியால் அவதிப்பட இதுவும் ஒரு காரணம். 

- அதிக எடையுள்ள பையைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், தோள்பட்டைவலி தொடங்கி, முதுகுத்தண்டுவட பாதிப்புவரை எக்கச்சக்க பிரச்னைகள் ஏற்படலாம்' என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஹேண்ட்பேக் நிர்வாகம் குறித்த தகவல்களுடன் கவனத்துக்குரிய அம்சங்களுடன் விரிவாக வழிகாட்டுகிறது 'அதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே!' எனும் சிறப்புக் கட்டுரை. 

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

தலையில் வலி ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. பார்வைக் குறைபாடு, சைனஸ் பிரச்னை, மன அழுத்தத்தால் ஏற்படுவது, 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படுவது போன்றவை பொதுவான காரணங்கள்.பார்வைக் குறைபாட்டால் ஏற்படும் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள், பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகளே. 40 வயதுக்கு மேற்பட்ட சிலரும் இதனால் பாதிக்கப்படுவதுண்டு. பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு மாலைப் பொழுதில் ஏற்படும் தலைவலி, பின்னிரவுவரை நீளும். காலையில் உறங்கி எழுந்திருக்கும்போது நீங்கியிருக்கும். இதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர் கண்ணாடியைப் பரிந்துரைத்தால், கண்டிப்பாக அணிந்துகொள்ள வேண்டும். அது ஒன்றுதான் இதற்குத் தீர்வு.

- மக்கள் மத்தியில் நோய்கள் குறித்தும், மருத்துவம் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகளும் தவறான கருத்துகளும் நிலவிவருகின்றன. இன்றையச் சூழலில் சமூக வலைதளங்கள், வாய்மொழி மூலமாகப் பல தவறான தகவல்கள் வேகமாகப் பரவிவருகின்றன. அவற்றில் தலைவலியும் ஒன்று. எனவே, நாம் தலைவலி குறித்துத் தெளிவு பெறவேண்டியது அவசியம். அந்தத் தெளிவைத் தருகிறது 'தலைவலிக்கு டாட்டா காட்டலாமா?' எனும் கட்டுரை.

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்


 
வயதுக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளுக்கும் தொடர்பிருப்பது உண்மைதான். ஆனால், எல்லா நேரத்திலும் அப்படியிருக்காது. சில பிரச்னைகளுக்கு, நீண்டகாலமாக நாம் கடைப்பிடித்துவரும் சில பழக்கங்களும் காரணமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பிரச்னைதான்  கழுத்துவலி. கழுத்தின் மூட்டுப் பகுதி மற்றும் பின்முதுகுவரை பாதிக்கும் 'செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் (Cervical Spondylosis) பிரச்னை, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்...

* ஸ்பாண்டிலோசிஸ், ஒரு வகை தொழில் சார்ந்த பிரச்னை. ஆசிரியப் பணியில் இருப்பவர்கள், கட்டடத் தொழில் செய்பவர்கள், பேருந்து நடத்துநர்கள், வாகன ஓட்டுநர்கள், தொலைதூரத்துக்கு இருசக்கர வாகனத்தில் அடிக்கடி செல்பவர்கள், கணினியில் அமர்ந்து பல ஆண்டுகளாக வேலை பார்ப்பவர்கள், பணி நேரத்தில் கழுத்தை அசௌகர்யமான பொசிஷனில் வைத்திருப்பவர்களுக்கு இது ஏற்படுவது இயல்பு. ஒரே பொசிஷனில், ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் நிற்பதும் இதற்குக் காரணம். பணி நிமித்தமாக ஸ்பாண்டிலோசிஸ் ஏற்பட்டிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பணியைத் தொடர வேண்டாம். மீறித் தொடர்ந்தால், பிரச்னை இன்னும் அதிகமாகும்.

- செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் பிரச்னையின் அறிகுறிகள், கவனிக்க வேண்டியவை, நோயை உறுதிசெய்யும் முறை மற்றும் சிகிச்சைகளை விரிவாக விளக்குகிறது 'இளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்!' எனும் கட்டுரை. 

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

'மனித உடலில் ஏறத்தாழ 50 வகை ஹார்மோன்கள் உற்பத்தியாகும்' என்பது மருத்துவம் கூறும் உண்மை. ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலுக்கேற்ப ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அதற்கேற்றாற்போல அறிகுறிகளும் தெரியும். அவற்றை அடிப்படையாகவைத்து, சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, பிரச்னைக்குரிய ஹார்மோன் எதுவெனக் கண்டறியப்படும். அதற்கேற்ப சிகிச்சைகள் அளிக்கப்படும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதன் அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்படும். ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்களுக்கு, அதைச் சரிசெய்வதற்கான சிகிச்சை; கர்ப்பமாவதில் சிக்கல் நீடித்தால் அதற்கான சிகிச்சை; கர்ப்ப காலத்தில் சர்க்கரைநோய் தெரியவந்தால், அதற்கான சிகிச்சை; வளரிளம் பருவத்தில், உடலில் முடி வளர்ச்சி தெரிந்தால், அதற்கான சிகிச்சை என அளிக்கப்படும்...

- வாழ்க்கைமுறை மாற்றங்கள், பரிசோதனைகள், கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுவதன் காரணம், தவிர்க்கவேண்டியவை, தவிர்க்கக் கூடாதவை என சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புகள் குறித்து முழுமையான பார்வையைப் பதிவு செய்திருக்கிறது 'சின்ன பிரச்னையல்ல - சினைப்பை நீர்க்கட்டி!' எனும் கட்டுரை. 

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

அட்ரீனல் சுரப்பி (Adrenal Gland): சிறுநீரகத்துக்கு அருகே மிகச் சிறிய அளவிலிருக்கும் சுரப்பிகளே அட்ரீனல் சுரப்பிகள். இந்தச் சுரப்பிகளிலிருந்து 'கார்டிசால்' என்னும் ஹார்மோன் சுரக்கும். இது ரத்த அழுத்தம், ரத்தத்தில் உப்புச் சமநிலை ஆகியவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இந்த ஹார்மோனும் தேவையான அளவுதான் சுரக்க வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ சுரந்தால் உடலில் பாதிப்புகள் ஏற்படும்.

விந்தகச் சுரப்பி (Testes): பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதுபோல, ஆண்களுக்கு விதைப்பையிலிருந்து 'டெஸ்டோஸ்டீரான்' என்னும் ஹார்மோன் சுரக்கும். பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாவதுபோல ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியாகும். பெண்களுக்கு ஏற்படுவதுபோல, மிகப் பெரிய பாதிப்புகள் எதுவும் ஆண்களுக்கு  ஏற்படுவதில்லை. அதே நேரத்தில், உடல் பருமன் காரணமாக டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி குறையும்போது, விந்தணு உற்பத்தி குறைந்து ஆண் மலட்டுத்தன்மை உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் ஆண்களும் உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

- ஹார்மோன்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன, நம் உடலில் ஹார்மோன்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் என்னென்ன என்பதை விரிவாக விளக்குகிறது 'உணவு முதல் உறக்கம்வரை - ஹார்மோன்களின் மாயாஜாலம்' இணைப்புப் பகுதி. 

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

தொற்று பாதிப்புகள்: பொதுவாக, காய்ச்சலோடு தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புகள், அதிக வியர்வைக்குக் காரணமாக இருக்கும். தொற்று பாதிப்புகள் ஏற்படும்போது உடல் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்.  இயல்பைவிட, இரவில்தான் அது அதிகமாக இருக்கும். காசநோய், எலும்பு அழற்சி போன்றவை இருந்தால், தூக்கத்தின்போது அதிகம் வியர்க்கும்.  

நெஞ்செரிச்சல்: உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் உண்டாகும். அதோடு தூங்கச் சென்றால், எரிச்சல் அதிகரித்து வியர்க்க ஆரம்பிக்கும்.

-  உடல் உழைப்பில்லாமல் ஓய்வில் இருக்கும்போது வியர்வை அதிகரிக்கிறதென்றால், அது இயல்பானதல்ல. குறிப்பாக, சிலருக்கு இரவில் உறங்கும்போது அதிகமாக வியர்வை வெளியேறும். இப்படி, தவறான நேரத்தில் உடல் வெப்பம் அதிகரிப்பது, ஆரோக்கியமின்மையின் அறிகுறி. உறங்கும்போது வியர்ப்பது ஏன்... உடலில் என்னென்ன பாதிப்புகளால் இது நிகழ்கிறது? என்பதை விவரிக்கிறது 'தூங்கும்போது வியர்ப்பது ஏன்?' எனும் முக்கியக் கட்டுரை. 

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

"ரத்தப் புற்றுநோயால், அவதிப்பட்டு வந்த யுபின் அம்மா, எட்டு வருடங்களுக்கு முன்னர் திடீரென ஒருநாள் இறந்துவிட்டார். என் வாழ்க்கையில் தாங்க முடியாத பேரிழப்பு அது. நாள்கள் பல கடந்தும் மீள முடியாத அந்தத் துயரிலிருந்து என் மனதைப் பக்குவப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டு வந்தது, 'இதுவும் கடந்து போகும்' என்ற வார்த்தைகள் மட்டும்தான்..."

- ''இன்றையச் சூழலில், மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை என்பது இங்கே யாருக்கும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, மனஅழுத்தம் தரக்கூடிய எந்த விஷயத்தையும் எனக்குள் ஏற்றிக்கொண்டது கிடையாது. அதே நேரம் சூழ்நிலைகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸைப் போக்கிக்கொள்ள நான் பின்பற்றுகிற ஒரே விஷயம்... 'இதுவும் கடந்து போகும்' என்ற ஒற்றைவரி மந்திரம் மட்டும்தான்! வாழ்வின் கடினமான சூழ்நிலைகளின்போது, 'இதுவும் கடந்து போகும்' என்ற இயல்பான மனப்பான்மை மட்டும்தான் என்னை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறது!'' சீரியஸாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகை குஷ்பு. வாழ்க்கையில் தனக்கு உச்சக்கட்ட ஸ்ட்ரெஸ்ஸைக் கொடுத்த வலி நிறைந்த அனுபவத்தையும் அதைக் கடந்துவந்த கதையையும் 'இதுவும் கடந்து போகும்!' பகுதியில் பகிர்ந்திருக்கிறார். 

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

”முன்பெல்லாம் ஓர் ஆசிரியரிடம் படித்த மாணவர்கள் 15, 20 வருடங்களுக்குப் பிறகும் அதே அன்போடு ஆசிரியரிடம் ஓடி வந்து பேசுவதைப் பார்க்க முடியும். இன்று நாங்களே அந்த அன்பை வளர்த்துக்கொள்ள விரும்புவதில்லை. அன்பை வளர்த்துக்கொள்ளும் சூழலும் இல்லை. 'யாரிடம் பேசினால் என்ன வம்பு வருமோ' என்ற பயத்தில், மாணவர்களிடமிருந்து விலகிப் போகிறோம். வகுப்புக்குச் சென்றால் பாடம் நடத்திவிட்டு வரும் கருவிபோல்தான் செயல்படுகிறோம். இதனால், ஆசிரியருக்கான பணி நிறைவு என்ற ஒன்று இப்போது கிடைப்பதேயில்லை. என்னுடைய 28 ஆண்டுகால ஆசிரியர் அனுபவத்தில், முதல் 15 ஆண்டுகள் கிடைத்த பணி நிறைவு, இப்போதெல்லாம் கிடைப்பதே இல்லை.”

- கவிஞர், பெண்ணியவாதி, நாவலாசிரியர்  எனப் பல முகங்கள் அ.வெண்ணிலாவுக்கு உண்டு... கூடவே ஆசிரியர் என்ற முகமும். 28 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் அனுபவமுள்ளவர். தற்போது வந்தவாசி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். 2007-ம் ஆண்டு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தற்போதைய இளைஞர்கள் பணி விருப்பங்களில் தங்களது இறுதித் தேர்வாகத்தான் ஆசிரியர் தொழிலை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் பள்ளிக்குள் நுழைந்தவர் வெண்ணிலா. அவர் தன் அனுபவத்தை 'உடலுக்கும் தொழிலுக்கும்' தொடர் பகுதியில் ”ஆசிரியர் பணி இப்போதெல்லாம் நிறைவைத் தருவதில்லை!!” என்ற தலைப்பில் பகிர்கிறார்.

காதல் முதல் கூடல் வரை: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 10 பகுதிகள்

தடு - நிறுத்து - இயங்கு: சுய இன்பம் செய்து விந்தணுக்கள் வெளியேறும் கட்டத்தில், அவை வெளியேறாமல் நிறுத்திவிட வேண்டும். அப்போது, விந்து வெளியேறாதபடி ஆணுறுப்பின் தலைப்பகுதியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். 5-10 விநாடிகள்வரை அப்படியே இருந்தால், வெளியேறவேண்டிய விந்தணுக்கள் தடுக்கப்பட்டு, உள்ளே திரும்பிவிடும். இப்படி, குறிப்பிட்ட இடைவெளியில் சில முறை செய்யலாம். 

- செக்ஸின்போது தொடக்கத்திலேயோ அல்லது வெகு சீக்கிரத்திலோ சில ஆண்களின் விந்தணுக்கள் வெளியேறிவிடும். இவர்களை 'நிமிட ஆண்' (Minute Man) என்போம். ஒவ்வோர் ஆணும் தன் தாம்பத்ய வாழ்க்கையை நிர்வாகம் செய்யத் தெரிந்த 'நல்ல அட்மினாக' இருந்தால்தான் விரும்பும் நேரம்வரை தாம்பத்யத்தின் ருசியைச் சுகிக்க முடியும்; பாட்னருக்கு அந்தச் சுவையைக் குறையின்றி பரிமாறவும் முடியும். சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் இதை சரிசெய்யலாம் என்று சொல்லும் 'காமமும் கற்று மற!' தொடர் பகுதியில் விந்து முந்துதல் பிரச்னைக்கு எளிய தீர்வுகள் தரப்பட்டுள்ளது.

இந்த டாக்டர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2TxqSI6