Published:Updated:

இதய நோயுடன் போராடும் லக்ஷனா #NeedHelp

இதய நோயுடன் போராடும் லக்ஷனா #NeedHelp
இதய நோயுடன் போராடும் லக்ஷனா #NeedHelp

உலகம் முழுவதும் இறப்பு விகிதம் உயர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக 'இருதய நோய்' அமைந்துள்ளது. மாரடைப்பு, இரத்த அழுத்தம் உயர்வு, இதய மற்றும் இரத்த நாளங்களின் சீர்குலைவு போன்றவைகளே இதய பிரச்னைகளின் அறிகுறியாகும். ஆரோக்கியமற்ற உணவு, புகையிலை மற்றும் மது உட்பட பல பழக்கவழங்கள் இதய நோய்களை ஏற்படுத்தும் பொதுவான பிரச்னையாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு நமது உடலின் நிலையை மாற்றக்கூடிய ஆபத்தான காரணிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், இதய நோய்களை குறைக்க முடியும். 

இதய நோயுடன் போராடும் லக்ஷனா #NeedHelp

பெரும்பாலும் இதய நோய் 30-69 வயதுடையவர்களை பாதிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் இதய நோய் வருவதுண்டு, நூற்றில் ஒரு குழந்தைக்கு பிறப்பிலோ அல்லது வளரும்போதோ இதய நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வழக்கமாக இதய குறைபாடுகள் மருந்துகளிலும், அறுவை சிகிச்சையிலும் குணப்படுத்தக்கூடியது. இதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வளர்ச்சி, உண்ணுதல், மூச்சு விடுதல் போன்றவைகளில் கோளாறு ஏற்படும். நமது சொத்தாக நினைக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பது அவசியம். 

லக்ஷனாவின் நிலை...

காஞ்சிபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருபவர் லக்ஷனா. இவருடைய தந்தை குணசேகர்- வேன் டிரைவர்; தாய் அமுதா - இல்லதரிசி. இந்தக் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.10,000. மூன்று வயதில், லக்ஷனாவுக்கு தொடர்ந்து ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதாக சந்தேகித்த மருத்துவர்கள் சென்னையில் உள்ள குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். சென்னை மருத்துவமனையில் செய்த பரிசோதனையின்போது லக்ஷனாவுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என தெரியவந்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் லக்ஷனாவுக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதய நோயுடன் போராடும் லக்ஷனா #NeedHelp

லக்ஷனாவுக்கு Aortic Valve Repair/replacement + ROSS procedure என்னும் சிகிச்சை தேவைப்படுகிறது. ROSS procedure என்பது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் Pulmonary Valve-ஐ வைத்தே Aortic Valve-ஐ சரி செய்யும் முறையாகும். இந்த அறுவை சிகிச்சை, ICU மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கு, மருந்துங்கள், மற்றும் இதர செலவுகளுக்கு சுமார் ரூ. 3,60,000 தேவைப்படும். தங்களது சொத்தாக நினைக்கும் மகளை காப்பாற்ற லக்ஷனாவின் குடும்பம் போராடிக் கொண்டிருக்கின்றது. ஆனால் மாதம் ரூ.10,000 ஆயிரம் வருமானம் ஈட்டும் இக்குடும்பம், அத்தனை பெரிய தொகையை சேர்ப்பது என்று உடனடியாக முடியாத காரியமாக உள்ளது. இதனால் பணத்திற்கும், பாசத்திற்கும் நடுவே சிக்கித் தவித்து வருகின்றது லக்ஷனாவின் குடும்பம். 

லக்ஷனாவிற்கு உதவ இங்கே கிளிக்கவும்  https://www.edudharma.com/fundraiser/lakashana-valve-replacement

சிறுதுளி பெரு வெள்ளம்! 

இத்தனை பெரியத் தொகையை லக்ஷனாவின் குடும்பத்தால் ஏற்பாடு செய்ய முடியாது. ஆனால் நாம் அனைவரும் சேர்ந்து அளிக்கும் ஒரு சிறிய பங்களிப்பு லக்ஷனாவின் சிகிச்சைக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. நிதி திரட்டும் தளமான Edudharma-வுடன் சேர்ந்து நம்மால் முடிந்த உதவியை லக்ஷனாவுக்கு செய்வோம். அதே நேரத்தில், இந்தச் செய்தியை முடிந்தவரை ஷேர் செய்து மற்றவர்களும் ஒரு உயிரைக்காப்பற்ற முன்வரவைப்போம். நம்முடைய இந்தச் சிறு பங்களிப்பு இவ்வுலகிற்கும், ஏழ்மையான குடும்பத்திற்கும் ஒரு சின்னஞ்சிறு உயிரை மீட்டுத்தரும். தங்களின் பங்களிப்பை அளிக்க https://www.edudharma.com/fundraiser/lakashana-valve-replacement லிங்கிற்கு செல்லவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.