Published:Updated:

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!
பிரீமியம் ஸ்டோரி

`கைகால் வலி தாங்க முடியலை... ஒரு சத்து ஊசியும், கொஞ்சம் மஞ்சள் மாத்திரையும் எழுதித் தா தாயி...’ - அரசு மருத்துவமனைகளில் இது போன்ற கோரிக்கைகள் ஒலிப்பதைக் கேட்டிருப்போம். `இந்த மருந்துகளோட மீன் எண்ணெய் மாத்திரையையும் சேர்த்துத் தந்துடுப்பா... பையனுக்கு வேணும்!’ - தனியார் மருந்தகங்களில் இப்படி யாராவது கேட்பதைப் பார்த்திருப்போம். பல நூறு ஆண்டுகளாக நம்மோடு பயணம் செய்துவரும் சத்து மருந்துகள், உடலில் ஊட்டச்சத்துக் குறைவை சமன்படுத்த முன்னிறுத்தப்படுகின்றன. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் காப்பதில் ஊட்டச்சத்துகளுக்குப் பெரும்பங்கு உண்டு. ஊட்டச்சத்துகள், அவற்றின் பயன்கள், பக்கவிளைவுகள், எங்கே எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்... வாருங்கள் பார்க்கலாம்! 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

`மனிதன் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முக்கியக் காரணியாக விளங்கும் உணவுதான், மனிதனின் பல நோய்களுக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது’ என்கிறது உணவு அறிவியல். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், தங்களுக்குத் தேவையான ஊட்டங்கள் அனைத்தையும், தாங்களே உருவாக்கிக்கொண்டிருந்தன நம் செல்கள். காலப்போக்கில், பரிணாம வளர்ச்சியில் மனிதன் இழந்த பலவற்றுள், ஊட்டச்சத்துகளும் இடம் பெற்றுவிட்டன. 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

இழந்த ஊட்டச்சத்துகளைத் திரும்பப் பெற, உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1912-ம் ஆண்டு, காசிமிர் ஃபங்க் (Casimir Funk) என்ற போலந்து நாட்டு உயிர் வேதியியலாளர், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி அத்தியாவசியமான ஓர் உயிர்ச்சத்தை இழந்திருந்ததைக் கண்டுபிடித்தார். அந்த உயிர்ச்சத்துக்கு `வைட்டல் அமின்’ (Vital Amine) என்று பெயர் சூட்டினார். அவை பிறகு `வைட்டமின்கள்’ என அழைக்கப்பட்டு, ஒவ்வோர் ஊட்டச்சத்தாகக் கண்டறியப்பட்டன.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

இரண்டாம் உலகப் போரின்போது, தன் ராணுவ வீரர்கள் சோர்வுடன் இருந்ததைக் கண்ட அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், அவர்களுக்கு தினமும் ஒரு சத்து மாத்திரை வழங்க உத்தரவிட்டார். அதன் பிறகுதான்,  `பி காம்ப்ளெக்ஸ்’ மாத்திரைகள், உலகெங்கும் வீட்டு அலமாரிகளில் நிறையத் தொடங்கின.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

`பி காம்ப்ளெக்ஸ்’ (B Complex) என்ற மஞ்சள் மாத்திரைகள்!

நீரில் கரையும் தன்மைகொண்ட வைட்டமின்களான பி1, பி2, நியாசின், பான்ட்டோதெனிக் அமிலம் (பி5), நியாசின் (பி6), பயோட்டின், ஃபோலிக் அமிலம், பி12 ஆகிய அனைத்தும் சேர்ந்தவை `பி காம்ப்ளெக்ஸ்’ வைட்டமின்கள். இவை உடல் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய மூலப் பொருள்களை, செல்களுக்கு வழங்குகின்றன; அவற்றின் முக்கியப் பணிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், நட்ஸ், பயறு வகைகள், முட்டை, பால், இறைச்சி என இயற்கை தரும் உணவுப் பொருள்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின்கள் அதிகம் இருக்கின்றன. இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகள் வாய்ப்புண், உடல் அசதி, தசைவலி, பாதங்களில் எரிச்சல், நரம்புத் தளர்ச்சி, ரத்தச்சோகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன. முடி உதிர்தல், நகங்களில் புள்ளிகள், மறதி, தூக்கமின்மை ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கவும் தரப்படுகின்றன.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

`கர்ப்ப காலத்தின் சூப்பர் ஹீரோ’ எனப்படும் ஃபோலிக் அமிலம், வளரும் குழந்தையின் நரம்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவும்; `மெனிங்கோசில்’ (Meningocele),`மெனிங்கோ மைலாசில்’ (Meningo Myelocele) போன்ற தண்டுவடக் குறைபாடுகளையும் தடுக்கும்; எனவே, கர்ப்பம் தரிப்பதற்கு முன்னதாகவே இது பரிந்துரைக்கப்படுகிறது.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், வலிப்புநோய், புற்றுநோய் ஆகிய பாதிப்புகளின்போது, உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை இழக்க நேரிடும். அதனால், அவற்றுக்கான சிகிச்சையின்போது,  வைட்டமின் மாத்திரைகளும் சேர்த்து வழங்கப்படுகின்றன. பி காம்ப்ளெக்ஸ் மருந்துகளை உட்கொள்ளும்போது மருந்து வாடையுடன், அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழிவது இயல்பானது. ஆனால், அளவுக்கு அதிகமாக இவற்றை உட்கொள்ளும்போது வாந்தி, மயக்கம், சரும அலர்ஜி, கண் எரிச்சல், வலிப்பு ஆகியவை ஏற்படக்கூடும். எனவே, இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக் கூடாது.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

மீன் எண்ணெய் (Cod Liver Oil) மாத்திரை!

கொழுப்பில் கரையும் தன்மைகொண்ட, வைட்டமின் ஏ மற்றும் டி அதிகம் நிறைந்த மீன் எண்ணெய் மாத்திரைகள், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மூட்டுவலி மற்றும் `ரிக்கெட்ஸ்’ (Rickets) என்ற எலும்பு நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. வைட்டமின் ஏ, டி மட்டுமின்றி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் (Carotenoids) மீன் எண்ணெய் மாத்திரைகளில் அதிகம் இருப்பதால், இவற்றின் பயன்பாடு அதிகரித்தது. செல்களின் வீக்கத்தைக் குறைப்பதுடன் மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் பயன்பாடுகளையும் இவை அதிகரிக்கச் செய்கின்றன.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபகத்திறன், எலும்பு மற்றும் தசை வளர்ச்சி, கண் மற்றும் சருமப் பாதுகாப்பு போன்றவற்றுக்குத் தரப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகள் மூட்டுநோய், எலும்புப்புரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய், கண்நோய் ஆகியவற்றுக்கும் தரப்படுகின்றன. ஆனாலும் கர்ப்ப காலத்திலும், பேறு காலத்திலும் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இந்த மாத்திரையைச் சாப்பிடுவதால் செரிமானமின்மை, வயிற்று அழற்சி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். அதிகளவில் உட்கொண்டால், வலிப்புநோய் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும்!

உடல் ஆரோக்கியம் பெற, ஜிம்களில் `தம்பெல்’ (Dumbbell) கருவியை அவ்வப்போது சுமக்கிறோம். உடலுக்குள்ளேயும் ஆரோக்கியம் கிடைக்க இரும்புச்சத்தை தன்னுள் சுமந்தபடி, ரத்தத்தின் சிவப்பணுக்கள் உடலெங்கும் தொடர்ந்து பயணிக்கின்றன என்பது ஆச்சர்யமான உண்மை. மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமானது ஆக்ஸிஜன். அதை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்லவும், அந்த உறுப்புகளின் கழிவான கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவும் முக்கியப் பங்காற்றுவது ஹீமோகுளோபின். இது இரும்புச்சத்து மற்றும் புரதத்தால் ஆனது.  

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

உயிர்வாழ வைப்பதுடன், மற்ற உறுப்புகளையும் தசைகளையும் உயிர்ப்புடன் இயங்கச்செய்வது இரும்புச்சத்துதான். உயிரணுக்களின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபகத்திறன் ஆகியவற்றிலும் இரும்புச்சத்தின் பங்கு முக்கியமானது. இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றில் இது அதிகமாகக் காணப்படுகிறது. அதேபோல் காய்கறிகள், முருங்கை, அகத்தி போன்ற கீரை வகைகள், பப்பாளி, அன்னாசி, அத்திப்பழம், பேரீச்சை ஆகிய பழ வகைகள், பயறு வகைகள் மற்றும் நட்ஸிலும் காணப்படுகின்றன. இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் ரத்தச்சோகையின்போது தலைச்சுற்றல், மயக்கம், உடல் சோர்வு, தசைவலி, பசியின்மை, வாய்ப்புண், கவனச் சிதறல், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படக்கூடும்.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

1832-ம் ஆண்டு, ‘பியரி பிளாடு’ (Pierre Blaud) என்ற பிரெஞ்சு மருத்துவர், ரத்தச்சோகைக்கு இரும்புச்சத்து மாத்திரைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அதனாலேயே `பிளாடு’ஸ் பில்ஸ்’ (Blaud’s Pills) என இவை வழங்கப்பட்டன. உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசியமான, பாதுகாப்பான மருந்துகள் பட்டியலில் முதல்நிலை வகிக்கும் இரும்புச்சத்து மாத்திரைகள், ரத்தச்சோகையைப் போக்க உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளிடையே 50 சதவிகிதம்வரை ரத்தச்சோகை காணப்படுகிறது. இதைத் தவிர்க்க, அயர்ன் ஃபோலிக் மாத்திரைகளை பள்ளிக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து 100 நாள்கள் வழங்குவதை அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளும்போது வயிற்று அழற்சி, வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படக்கூடும். டானிக்காக உட்கொள்ளும்போது, நாக்கு மற்றும் பற்களில் கருமை நிறத்தில் கறைபடிவதும், கறுப்பாக மலம் வெளியேறுவதும் நடக்கலாம். தொடர்ந்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படலாம்.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

கால்சியம் மாத்திரைகள்!

உடலின் முக்கியத் தாதுப் பொருளான கால்சியம், மனித எடையில் 1,200 கிராம் என்ற அளவில் இருக்கிறது. `எலும்பு வங்கி’ (Bone Bank) என அழைக்கப்படும் கால்சியம், 98 சதவிகிதம் எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படுகிறது. ரத்தத்தில் இரண்டு சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. எலும்புகளின் வளர்ச்சி, பற்களின் வளர்ச்சி, தசைகளின் இயக்கம், நரம்புகளின் செயல்பாடு, ரத்தம் உறைதல், ஹார்மோன்கள் சுரப்பு போன்ற பணிகளுக்கு கால்சியம் அவசியம்.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருள்கள், மீன், முட்டை, ஆட்டிறைச்சி, கேழ்வரகு, கம்பு, சோயாபீன்ஸ், உளுந்து, அவரை, துவரை, பட்டாணி, வெந்தயம் காலிஃபிளவர், புரோக்கோலி, வெங்காயம், கொய்யா, சீத்தாப்பழம், எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் கால்சியம் இருக்கிறது.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

குழந்தைகள், டீன்ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மெனோபாஸ் அடைந்த பெண்கள் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 1,200-1,500 மி.கி கால்சியம் தேவை. உணவில் பற்றாக்குறை இருக்கும் நிலையில், அவர்களுக்கு கால்சியம் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. எலும்புப்புரை, மூட்டுநோய், எலும்பு முறிவு, பாராதைராய்டு ஹார்மோன்கள் குறைவு ஆகியவற்றுக்கு கால்சியம் பயனளிக்கும். 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை ஒன்றாக உட்கொள்ளக் கூடாது. கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதால் வாந்தி, செரிமானமின்மை, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கும் கால்சியம் மாத்திரைகள் காரணமாகலாம். 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

வைட்டமின் ஈ மாத்திரைகள்!

கொழுப்பில் கரையும் தன்மைகொண்டது வைட்டமின் ஈ. இது, மற்ற வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும். சூரியகாந்தி, சோயா போன்ற தாவர எண்ணெய்களில் அதிகளவு காணப்படும் இது, பழங்கள், நட்ஸ், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றிலும் நிறைந்திருக்கிறது. கண்கள், சருமம், முடி ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் இது உதவும். தாம்பத்யக் குறைபாடுகளை நீக்கி கருத்தரித்தலுக்கும், கரு வளர்ச்சிக்கும் உதவும். `ஆனால், இத்தனை நன்மைகளை அளிக்கும் இந்த வைட்டமினை அதிக அளவில் மாத்திரையாக உட்கொண்டால், ரத்த அணுக்களை அழித்து, மரணத்தை ஏற்படுத்தும்’ என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இயற்கையான உணவுகளில் உள்ள வைட்டமின் ஈ தீமை விளைவிக்காது. 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

புரோட்டீன் பவுடர்

உடல்நலத்துக்கு ஊன்றுகோலாக விளங்கும் புரதச்சத்து, தசைகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அசைவ உணவுகள் மட்டுமின்றி முளை கட்டிய தானியங்கள், கீரைகள், பட்டாணி, சோயா, நிலக்கடலை, உளுந்து ஆகியவற்றிலும் புரோட்டீன் அதிகளவில் இருக்கிறது. தாவரங்கள், முட்டை மற்றும் பால் பொருள்களிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் `சோய் புரோட்டீன்’ (Soy Protein), `கேசீன்’ (Casein), `வே புரோட்டீன்’ (Whey protein) ஆகிய புரதங்கள் துரிதமான, உடனடி சக்தி தருபவை.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

புரதச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனாலும் `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதற்கேற்ப செரிமானமின்மை, வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பக்கவிளைவுகளை இவை ஏற்படுத்தக்கூடும்.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

வெனிலா அல்லது சாக்லேட் ஃப்ளேவர்களில் இருக்கும் இந்த புரோட்டீன் பவுடர்களில் புரதச்சத்து மட்டுமின்றி, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், குளூக்கோஸ் போன்றவையும் நிறைந்துள்ளன. அதனால், உடல் பருமன், சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புரோட்டீன் பவுடரிலுள்ள லாக்டோஸ், சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காட்மியம், ஆர்செனிக், பிஸ்பினால் ஆகிய நச்சுப் பொருள்கள் இந்த பவுடர்களில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

நாம் உண்ணும் உணவிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் என்சைம்கள் அனைத்தும் உடலுக்கு வலிமை சேர்ப்பவை.ஆனால், இவை அனைத்தும் இயற்கையான ஒரு கூட்டுக் கலவையாக இருக்க வேண்டும். தேவைப்படும்போது மட்டுமே இவற்றைச் செயற்கை ஊட்டச்சத்துகளான மாத்திரைகளாக உட்கொள்ள வேண்டும். RDA (Recommended  Dietary  Allowance) என்ற தினசரிப் பரிந்துரைப்படி, `ஃபுட் சப்ளிமென்ட்ஸ்’ (Food Supplements) என்ற இந்த ஊட்டச்சத்துகள், சமச்சீர் உணவுக்கு என்றுமே மாற்று அல்ல!

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

உடலே உயிர்... உணவே மருந்து!

புரோபயாடிக்ஸ் (Probiotics) உணவு

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

இவை செரிமானத்தை அதிகரிப்பதோடு, வைட்டமின் பி12 உற்பத்திக்கும் உதவும். சருமம் மற்றும் நுரையீரலுக்குப் பாதுகாப்பு அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த புரோபயாடிக்குகள் வயிற்றுப்போக்கு, வாந்தி, சருமநோய்கள், சர்க்கரைநோய் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

`லேக்டோபேசில்லஸ்’ (Lactobacillus) `பைஃபிடோ பாக்டீரியம்’ (Bifido Bacterium), `ஸ்ட்ரெப்டோடோகாக்கஸ்’ (Streptococcus) போன்ற உயிர் நுண்கிருமிகளை மில்லியன்கள் அளவில் மாத்திரைகளாக வழங்குகின்றன இந்த புரோபயாடிக்குகள். 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

தயிர், ஊறுகாய் போன்றவற்றிலும் வயிற்றின் குடல் பகுதியிலும் இயற்கையிலேயே காணப்படும் இந்த நன்மை நிறைந்த பாக்டீரியா, குடல் அழற்சி, தொற்றுக்கிருமிகளின் தாக்கம் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளால் அழிக்கப்படும்போது, இவற்றின் செயல்திறனையும், பாதுகாப்புத் திறனையும் இழந்துவிடுகின்றன. இதற்கான தீர்வாக, புரோபயாடிக் மாத்திரைகள் வயிற்றுப்போக்கு, குடல்நோய்கள், கீமோதெரபி, அலர்ஜி, கல்லீரல்நோய்கள் ஆகியவற்றில் பெரிதும் பயனளிக்கின்றன. ஆனாலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், இவற்றை உட்கொள்ளக் கூடாது.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

குளூக்கோசமைன் மற்றும் கோண்ட்ராய்ட்டின் சல்பேட்ஸ் (Glucosamine and Chondroitin Sulphates)

குளூக்கோஸமைன் மற்றும் கோண்ட்ராய்ட்டின் சல்பேட்ஸ் உடலில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் `லியூகோட்ரையன்ஸ்’  (Leukotrienes) அளவைக் கட்டுப்படுத்துகின்றன. அதன் மூலம் மூட்டுகளையும், மூட்டுத் திசுக்களையும் பாதுகாக்கின்றன. இவை மூட்டுகளிலும் தசைகளிலும் இயல்பாகவே சுரக்கின்றன என்றாலும், அவற்றின் அளவு குறையும் நிலையில் மூட்டுகளின் நீர்த்தன்மை குறைந்து வலியை ஏற்படுத்தும். 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

மூட்டுவலி, எலும்புப் புரை, முதுகெலும்புத் தேய்மானம், ஜவ்வு விலகுதல் என வயோதிகம் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இயற்கைத் தாவரங்களிலிருந்து பெறப்படும் `குளூக்கோசமைன் மற்றும் கோண்ட்ராய்ட்டின் சல்பேட்ஸ்’ என்ற புதிய வகை மருந்துகள் தரப்படுகின்றன. பறங்கிச் சாம்பிராணி, தேள்கொடுக்குச் செடி ஆகியவற்றிலிருந்து இந்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

மாத்திரையாகவோ, கேப்ஸ்யூலாகவோ, டானிக்காகவோ அல்லது பவுடராகவோ ஊட்டச்சத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. டானிக், புரோட்டீன் பவுடர் அல்லது வைட்டமின் மாத்திரைகளை வாங்கியதும் நம் கண்கள் தன்னிச்சையாக தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளைத்தான் தேடுகின்றன. ஆனால், அவற்றைத் தவிர இவற்றில் அவசியம் பார்க்கவேண்டியவற்றை வலியுறுத்துகிறது, `FDA’ எனப்படும் ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன். 

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

அவை...

- RDA (Recommended Dietary Allowance) எனப்படும் பரிந்துரைக்கப்பட்ட உணவு அளவு.

- DV (Daily Value) எனப்படும் உணவின் தினசரி மதிப்பீடு.

- GMP (Good Manufacturing Practice) எனப்படும் சிறந்த தயாரிப்பு முறைகள்.

- Standardization எனப்படும் தரப்பட்டியல்.

- Food Labelling with Colour Codes எனப்படும் சைவம் மற்றும் அசைவ உணவு முறையைக் குறிக்கும் பச்சை மற்றும் சிவப்பு நிறப் புள்ளிகள்.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

அத்துடன் உணவு ஊட்டங்களிலிருக்கும் மூலிகைச் சேர்க்கைகள், நிறச் சேர்க்கைகள், பதப்படுத்தும் சேர்க்கைகள் ஆகியவற்றின் தரங்களையும் கண்டறிய வேண்டும். இவ்வாறு நிறை குறைகளை ஆராய்ந்து, இது முழுமையான உணவுதான் என்று சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து ஒவ்வொன்றும், சில ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகளைத் தீர்க்க உதவும். என்றாலும், கைநிறைய வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், புரோட்டீன் பவுடர்கள், நார்ச்சத்துகள் என அனைத்தையும் அள்ளிச் சேர்த்தால்கூட இயற்கை உணவுக்கு இந்த உணவு ஊட்டங்கள் எவையும் ஈடாகாது என்பதை நினைவில்கொள்வோம்.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

இயற்கையும் அறிவியலும் கைகோத்து வழிநடத்தும் தடங்களில் இதுவும் ஒன்று. என்றாலும், முழுமையான ஆய்வுகளுக்கு இன்னும் காத்திருப்போம். அதுவரை இவை மருத்துவர்களின் பரிந்துரைப்படி உதவும் மருந்துகளாக மட்டுமே இருக்கட்டும். நாமாகவே ஆன்லைனிலும், மருந்தகங்களிலும் மருத்துவர் பரிந்துரையின்றி இவற்றை வாங்குவதைத் தவிர்ப்போம். மருந்துகள் நம் உணவாகாமல், உணவே மருந்தாகட்டும்!

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.