Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 31வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 31வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

Published:Updated:
தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

டெங்கு, பன்றிக்காய்ச்சல் வரிசையில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டிய இன்னொரு தொற்றுநோய், டைபாய்டு. ‘சால்மோனெல்லா டைபை’ (Salmonella Typhi) என்ற பாக்டீரியாவால் ஏற்படக்கூடியது இந்தக் காய்ச்சல். டைபாய்டில், பாரா டைபாய்டு என்று இன்னொரு வகை உண்டு. இரண்டுமே மனிதர்களுக்கு பாதிப்பை உருவாக்கக்கூடியவைதான். டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  டைபாய்டு வந்து குணமடைந்தவர்களின் மலத்தின் மூலம் டைபாய்டு கிருமி வெளியேறும். அந்தக் கிருமி குடிநீர் மூலமாகவோ, உணவு மூலமாகவோ மற்றவர்களின் உடலுக்குள் சென்றுவிடும். இப்படித்தான் டைபாய்டு பரவுகிறது. உதாரணமாக, சாலையோரத்தில் ஒருவர் உணவகமோ, பானிபூரிக் கடையோ நடத்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் டைபாய்டு காய்ச்சல் வந்து குணமடைந்திருக்கிறார். அவர் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காதவராக இருக்கும்பட்சத்தில் அவரது கையில் ‘சால்மோனெல்லா டைபை’  கிருமி ஒட்டியிருக்கலாம். அவர் உணவைப் பரிமாறும்போது அதில் கலந்து, அதைச் சாப்பிடுபவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் வரலாம்.

தொற்று நோய்களின் உலகம்!

‘சால்மோனெல்லா டைபை’ கிருமி, ஒருவரது உடலுக்குள் செல்லும்பட்சத்தில் கடுமையான காய்ச்சல் ஏற்படும். உடல் தளர்ந்து போகும். கண்டுபிடித்துச் சிகிச்சை தொடங்கிய பிறகும் முன்னேற்றம் ஏற்படக் குறைந்தது நான்கு நாள்களாவது ஆகும். பொதுவாக, மனித உடலின் மெக்கானிசம், எந்தக் கிருமி உள்ளே நுழைந்தாலும் இயற்கையாகவே அழித்துவிடும் வகையில்தான் படைக்கப்பட்டிருக்கிறது. வயிற்றில் இதற்கெனவே நிறைய அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அந்த அமிலங்கள் உடலுக்குள் நுழையும் கிருமியைக் கொன்று அழித்துவிடும். ஆனால், இன்று நம் உடல் அந்தத் தன்மையைப் படிப்படியாக இழந்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொற்று நோய்களின் உலகம்!



வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப்பழக்க மாற்றம் காரணமாக அசிடிட்டி, செரிமானப் பிரச்னைகளால் பெரும்பாலானோர் தவிக்கிறார்கள். இவற்றை குணப்படுத்த, அமிலங்களைக் குறைக்கும் ஓமிப்ராஸோல் (Omeprazole) போன்ற மாத்திரைகளை விழுங்குகிறார்கள். அந்த மாத்திரைகளால் அமிலத்தின் அளவு குறைவதோடு தன்மையும் மாறிவிடுகிறது. ‘சால்மோனெல்லா டைபை’ போன்ற கிருமிகள் குடலுக்குள் நுழையும்போது அமிலங்களால் அவற்றை அழிக்க முடிவதில்லை. சமீப காலங்களில் டைபாய்டு காய்ச்சல் அதிகரிக்க இதுவும் முக்கியக் காரணம்.

தொற்று நோய்களின் உலகம்!

முறையாகச் சிகிச்சை எடுத்து, சரியாக மாத்திரைகள் சாப்பிட்டால் டைபாய்டு காய்ச்சலைக் குணப்படுத்திவிட முடியும். ஆனால், நூற்றில் ஐந்து பேருக்கு, அடுத்த ஆறு வாரங்களுக்குள் மீண்டும் டைபாய்டு காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது. யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஏன் வருகிறது என்றும் கண்டறிய முடியாது. மீண்டும் முதலிலிருந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

டைபாய்டு வந்து குணமடைந்த பிறகும்கூட பலரின் உடம்பில் ‘சால்மோனெல்லா டைபை’ கிருமி தங்கியிருக்கும். மலத்தின் மூலம் படிப்படியாக வெளியேறிக்கொண்டிருக்கும். பொதுவாக, ‘சால்மோனெல்லா டைபை’ கிருமி, பித்தப்பையைக் குறிவைத்து ஓடிப்போய் அமர்ந்துகொள்ளும். பித்தப்பையில் கல் இருப்பவர்களின் உடலுக்குள் நுழைந்துவிட்டால், வசதியாக இடம்பிடித்து உட்கார்ந்துவிடும். காய்ச்சல் குணமான பிறகும் குட்டி போட்டுக் கொண்டேயிருக்கும். இன்னொரு பக்கம், அவை மலத்தின் மூலம் வெளியேறிக் கொண்டேயிருக்கும். 

சமையல் தொழிலில் இருப்பவர்களுக்கு டைபாய்டு வந்தால் அவர்கள் மூலம் நிறைய பேருக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. அதனால், சமையல் தொழில் செய்பவர்களுக்கு டைபாய்டு வந்து குணமான பிறகும் அவர்களது மலத்தைப் பரிசோதித்து ‘சால்மோனெல்லா டைபை’ கிருமி இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஒரு விதிமுறை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

டைபாய்டைக் கண்டறிய ‘வைடால்’ (Widal) என்றொரு சோதனை முறை நடைமுறையில் இருக்கிறது. இன்றும் பல மருத்துவர்கள் அந்தச் சோதனையைத்தான் பரிந்துரைக்கிறார்கள். உண்மையில் அந்தச் சோதனை முறையால் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் உண்மை. இது குறித்து அடுத்த இதழில் விரிவாகப் பேசுவோம்.

- களைவோம்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism