Published:Updated:

`துறை மாற்றம் ஏன்?’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்

`துறை மாற்றம் ஏன்?’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்
`துறை மாற்றம் ஏன்?’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்

சுகாதாரத்துறைச் செயலாளராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் வேறு துறைக்கு மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய சுகாதாரத்துறை செயலாராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான நாகராஜனுக்கு சுகாதாரத்துறைத் திட்ட இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணையின்போது எழுந்த சர்ச்சை மற்றும் உடலுறுப்பு தான முறைகேடு போன்றவற்றால், தானே முன்வந்து இடமாற்றத்தைக் கேட்டு ராதாகிருஷ்ணன் பெற்றதாகக் கூறுப்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் சுகாதாரத்துறைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். சுகாதாரத்துறை சார்ந்த கொள்கை முடிவுகளின் அனைத்திலும் இவரின் பங்களிப்பு முக்கியமானது.

இதுகுறித்து ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``கிட்டத்தட்ட ஆறரை வருடங்களாக இந்தத்துறையின் செயலாளராகப் பணியாற்றி உள்ளேன். தமிழக சுகாதாரத்துறையில் நடந்த அத்தனை வளர்ச்சிகளிலும் எங்களின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக, மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு, மருத்துவ இடங்கள் அதிகரிப்பு, பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைத்தது என பலவற்றைக் கூற முடியும். இதுதான் சரியான நேரம். வேறு ஒருவரிடம் சுகாதாரத்துறையை ஒப்படைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.