Published:Updated:

நான் உயிர்பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! #NeedHelp

நான் உயிர்பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! #NeedHelp
நான் உயிர்பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! #NeedHelp

விவசாயியின் மகளான ஜெயஸ்ரீ சோலங்கி, படித்து முடித்ததும் வேலைக்கு சென்று பெற்றோரை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கனவோடு இருந்து வந்தார். இதற்காக மாஸ்டர் டிகிரி பயின்று வருகிறார் ஜெயஸ்ரீ. மேற்படிப்புக்கு பெற்றோர்களால் செலவு செய்ய முடியாமல் தனது நண்பர்கள் சிலர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்ட நிலையில், குடும்பத்திற்காக பெரிய போராட்டங்களுடன் தனது படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார் ஜெயஸ்ரீ. இந்த நிலையில், இறுதிகட்டப் படிப்பு முடியப்போகும் நேரத்தில் அதைவிட மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்தார்.

நான் உயிர்பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! #NeedHelp

கடந்த அக்டோபர் மாதம் செமெஸ்டர் தேர்விற்காக படித்துக்கொண்டிருந்த ஜெயஸ்ரீக்கு உடல்நலம் குன்றியது. சோர்வு, காய்ச்சல், முகத்தில் கரும்புள்ளிகள் என அவதிப்பட்ட ஜெயஸ்ரீயை நினைத்து மிகுந்த கவலைக்குள்ளான பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதற்கு நடுவே கல்லூரி தொடங்கியது. ஆனால் சோர்வு காரணமாக ஜெயஸ்ரீயால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சையில் எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் ஜெயஸ்ரீ கடுமையான Aplastic Anemia-வால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது இரத்தத்தை உற்பத்தி செய்யும் எழும்பு மஜ்ஜை செயல் இழப்பதினால் ஏற்படும் இரத்தசோகையின் இக்கட்டான வகையாகும். 

இதனை அறிந்த அடுத்த நிமிடமே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து இரத்த மாற்று சிகிச்சையை செய்துகொள்ளுமாறு மருத்துவர் தெரிவித்தார். மேலும் இதற்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையும் செய்ய வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த சிகிச்சைக்கு தோராயமாக 17 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. மாதம் ரூ.6,000 வருமானம் பெரும் விவசாயியான ஜெயஸ்ரீயின் தந்தையால், அவ்வளவு தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் கடன் கேட்டுள்ளனர். ஜெயஸ்ரீ இருக்கும் நிலைமையில் தொகை விரைவில் கிடைத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கடன் தொகை கிடைக்கும்வரை காத்திருப்பது சாத்தியமில்லை. தனது தண்டுவடத்தில் இருந்து எலும்பு மஜ்ஜை செல்களை ஜெயஸ்ரீக்கு தானம் செய்ய அவரின் அண்ணன் தயாராக இருக்கிறார். ஜெயஸ்ரீயின் மருத்துவ செலவைப் பார்த்துக்கொண்டு சகோதரர், தற்போது சிகிச்சைக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

நான் உயிர்பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! #NeedHelp

"எப்போதும் என்னை நினைத்து அழுது கொண்டிருக்கும் என் தாயாருக்கு ஆறுதல் சொல்லி வருகிறேன். என் அண்ணன் தரவிருக்கும் ஸ்டெம் செல்கள் விலைமதிப்பற்றது, மாற்று சிகிச்சை எனக்கு மிகவும் அவசியமாகும். அதை முடித்து விரைவில் குணமடையும் பட்சத்தில்தான் என்னால் என்னுடைய படிப்பை தொடர முடியும். என் கனவை நனவாக்க முடியும்" என்கிறார் ஜெயஸ்ரீ. ஏழ்மை காரணமாக ஜெயஸ்ரீயின் சிகிச்சைக்கு தேவையான தொகையை ஏற்பாடு செய்ய குடும்பத்தினர் போராடி வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிதி திரட்டும் இணையதளமான 'Ketto' துணை நிற்கிறது. கெட்டோவுடன் சேர்ந்து, நாமும் உதவிக்கரம் நீட்டும்பட்சத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண் பட்டதாரியின் உயிரைக் காப்பாற்ற முடியும். முடிந்த அளவிற்கு இச்செய்தியை பரப்பி, கூடுதல் கரங்களையும் உதவி செய்ய அழைப்போம். நமது சிறு உதவி, ஜெயஸ்ரீக்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும்.

கெட்டோ தளத்தின் இந்த https://www.ketto.org/stories/savejayshri?utm_campaign=savejayshri&utm_medium=position_1&utm_source=external_vikatan லிங்கிற்குச் சென்று நம்மால் ஆன பண உதவியைச் செய்யலாம்!

நான் உயிர்பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! #NeedHelp

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.