இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருப்பது சர்க்கரைநோய். இந்தியாவில் மட்டும் 7.2 கோடி பேர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. டைப் 1 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறியும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

டைப் 2 சர்க்கரைநோயைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சர்க்கரைநோயை நிர்வகிப்பது எப்படி?

தங்கள் குடும்பத்தில் ஒருவருக்குச் சர்க்கரைநோய் வந்தால், அவரை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மூன்றில் இரண்டு பேருக்குத் தெரிவதில்லை.

* சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு விழித்திரை பாதிக்கப்படுகிறது. இளம் வயதில் ஏற்படும் பார்வை இழப்புக்கு சர்க்கரைநோய்தான் முதல் காரணியாக உள்ளது.

* சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* சர்க்கரைநோயுள்ள கர்ப்பிணிகள் அல்லது கர்ப்பகால சர்க்கரைநோய் பாதிக்கும் அபாயமுள்ள பெண்கள், தங்கள் ரத்தச் சர்க்கரை அளவைப் பிரசவ காலங்களில் சரியாக நிர்வகிக்க வேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு இதயம் மற்றும் ரத்தநாள நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 2 - 3 மடங்கு அதிகம்.

* சர்க்கரைநோய் பாதிப்பால் உடலில் ஏற்படும் புண்கள் காரணமாக, ஒவ்வொரு 30 விநாடிகளுக்கும் ஒருவர் தன் விரல்கள் உள்ளிட்ட உறுப்புகளை இழக்கிறார்.

* சர்க்கரை நோயாளிகளுக்குத் தீவிர சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 10 மடங்கு அதிகம்.

* நாள்தோறும் சிகிச்சை

* தொடர்ந்து ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்தல்

* ஆரோக்கிய வாழ்க்கைமுறை மற்றும் உணவுகள்

* நோய் குறித்த தொடர் விழிப்புணர்வு.

சர்க்கரைநோய் அறிகுறிகள்

சர்க்கரைநோய் பாதித்த இருவரில் ஒருவர் நோய் கண்டறியப்படாமலேயே வாழ்கிறார்.

* அதிகமாகப் பசித்தல்

* அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* விரல்களில் கூசுவது அல்லது மரத்துப்போன உணர்வு

* காயங்கள் தாமதமாக குணமாவது

* படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழிப்பது

* வாய் உலர்தல்

* திடீர் எடை இழப்பு

* அதிகச் சோர்வு

* பார்வை மங்குதல்

* பூஞ்சைத் தொற்றுகள்

டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரைநோய் இரண்டுமே ஆபத்தானவை.

பின்பற்றவேண்டிய வழிமுறைகள்

உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இதயநோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் அதிகம். இதயம் என்பது தசைகளால் ஆன ஓர் உறுப்பு. அதன் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் முழுவதற்கும் தேவையான ரத்தத்தைச் சரியாக அனுப்ப முடியும். உடற்பயிற்சி, உழைப்பு குறையும்போது உடலில் பலம் குறைந்து, இயக்கம் பாதிக்கப்படும்.

* சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பழச்சாறு, குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

* நாள்தோறும் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சிற்றுண்டியாக நட்ஸ், பழங்கள், தயிர் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

* புகை, மதுப்பழக்கத்தை முழுவதும் தவிர்க்க வேண்டும்.

* சிவப்பு நிற இறைச்சிகளைத் தவிர்க்கவும். மீன் சேர்த்துக்கொள்ளலாம்.

* சர்க்கரைநோய் வருவதற்கு முன்னதாகவே அது வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா (Prediabetes) என்பதை HbA1c என்ற மூன்று மாதச் சர்க்கரை அளவைக் கண்டறியும் பரிசோதனையில் தெரிந்துகொள்ள முடியும்.

* HbA1c பரிசோதனையில் 5.7 - 6.4 என்ற வரையறைக்குள் இருந்தால், அவர்களுக்கு விரைவில் சர்க்கரைநோய் வர வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

* நோய் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று கண்டறிந்தால், வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்து சர்க்கரைநோய் வராமல் 100 சதவிகிதம் தடுத்துவிட முடியும்.

* சர்க்கரைநோய் வருவதற்கான காரணிகளைக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்கள்

* குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரைநோய் இருப்பது.

* உடல் பருமன்.

* ஆரோக்கியமற்ற உணவுமுறை.

* உயர் ரத்த அழுத்தம்.

* உடல் உழைப்பு இல்லாமை.

* வயது மூப்பு.

* கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தில்லாத உணவுகளைச் சாப்பிடுவது.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையற்று இருப்பது.

* குடும்பத்தினருக்கு கர்ப்பகால சர்க்கரைநோய் இருப்பது.

ஜெனி ஃப்ரீடா