இந்தியர்களின் மிக முக்கிய உணவு அரிசி. ஆனால், இன்றைய தலைமுறையினர் ‘அரிசி’ என்ற சொல்லை அலர்ஜியானதாகவும், அச்சம் தரும் உணவாகவும் பார்க்கிறார்கள். ஓட்ஸ், கோதுமை உணவுகளைப் பிரபலப்படுத்த அந்நிய நாடுகள் செய்யும் பிரசாரம் ஒருபக்கமிருக்க, அரிசி உணவைச் சாப்பிட்டால் `சர்க்கரைநோய் வரும்’, `உடல் எடை கூடும்’ போன்ற தவறான நம்பிக்கைகளே இதற்குக் காரணம்.அரிசியை, ‘பெருந்தீனி’ அல்லது ‘பெரு உணவு’ என்கிறது சித்த மருத்துவம். தினந்தோறும் அல்லது வாழ்க்கை முழுவதும் சாப்பிடக்கூடிய ஓர் உணவு அரிசி. இதைப் பற்றிய குறிப்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தமிழர் பண்பாட்டில் பெரும்பாலான திருவிழாக்களில் பொங்கல், கொழுக்கட்டை என அரிசி சார்ந்த பல உணவுகள் இடம்பெற்றிருக்கின்றன. இதிலிருந்தே அரிசியின் பெருமையை நாம் அறிந்துகொள்ளலாம்.

அரிசியும் சர்க்கரைநோயும்

நவீன மருத்துவத்தில் ஓர் உணவு ரத்தச் சர்க்கரை அளவை எவ்வளவு நேரத்தில் அதிகப்படுத்துகிறதோ, அதைவைத்து ‘கிளைசெமிக் இண்டெக்ஸ்’ (Glycemic Index) அளவைக் கணக்கிடுவார்கள். இந்த அளவு 55-க்குக் கீழே இருந்தால், அந்த உணவுப் பொருள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது. தமிழர் பாரம்பர்ய அரிசி வகைகள் பெரும்பாலும் 55-க்கும் குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸைக்கொண்டவையே. சர்க்கரைநோய் வராமல் தடுப்பவையாகவும் பாரம்பர்ய அரிசிகள் இருக்கின்றன.

`நல்ல மணிச்சம்பா நாடுகின்ற நீரிழிவைக்

கொல்லும் மிகுந்தசுகங் கொண்டளிக்கும் - மெல்லப்

பசியளிக்கும் மூத்தோரைப் பாலரை நாளும்

முசியாம லேவளர்க்கும் முன்’

எனக் குறிப்பிடுகிறது பதார்த்தகுண சிந்தாமணிப் பாடல். அதாவது, மணிச் சம்பா அரிசி சர்க்கரைநோயைப் போக்கும், பசி உணர்வை அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதே அதன் பொருள். அப்படியென்றால் எங்கே பிரச்னை தொடங்குகிறது? நெல்லை அரிசியாக மாற்ற நம் முன்னோர் சில வழிமுறைகளைப் பின்பற்றிவந்தார்கள். அதன்படி, அறுவடை செய்த நெல்லை முதல் நாள் இரவு ஊறவைத்து, அடுத்த நாள் நீராவியில் வேகவைக்க வேண்டும். பின்னர் உலர்த்தி, உமி நீக்கினால் கிடைப்பது புழுங்கல் அரிசி. இப்படி அரிசியை முறையாகத் தயாரிக்கும்போது, உமியில் நிறைந்திருக்கும் தயாமின் போன்ற பல்வேறு நுண் சத்துகளும் வைட்டமின்களும் அரிசியுடன் கலந்துவிடும். இதுதான் ஊட்டச்சத்து நிறைந்த, சாப்பிட உகந்த அரிசி.

இன்றைய தலைமுறையினர் எதுவுமே ‘பளிச்’ என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த மோகத்தால் அரிசி அதிகமாக பட்டை தீட்டப்படுகிறது. இதனால் அரிசியிலிருக்கும் சத்துகள் வீணாவதுடன், ‘ஸ்டார்ச்’ என்னும் குளூக்கோஸ் அளவும் அதிகரிக்கிறது. இதுதான், உடல் பருமன் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, மருத்துவர்கள் அரிசியை தவிர்க்கச் சொல்கிறார்கள். நெல், அரிசியாக மாற்றப்படுவதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படாததே நோய்கள் ஏற்படக் காரணம். அவிக்காமல் நேரடியாக அரைத்து உமியை நீக்கிப் பெறப்படுவதால் பச்சரிசியிலும் முழுமையான சத்துகள் கிடைப்பதில்லை. சர்க்கரைநோய், வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. `அரிசி எவ்வளவு பழையதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது’ என்கிறது சித்த மருத்துவம். `அறுவடை செய்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பழைமையான அரிசியைப் பயன்படுத்துவதே உத்தமம்’ என்கிறது.

குக்கர் சமையல்

அதிகரித்துவரும் சர்க்கரைநோய்க்கு குக்கரில் சமைப்பதும் முக்கியக் காரணம். ‘சோறு ஆக்குவது’ என ஒரு நடைமுறை இருக்கிறது. நீரில் ஊறவைத்த அரிசியை, உலை கொதித்ததும் கொதிநீரில் போட்டு, சமச்சீராக வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், அதை வடிக்க வேண்டும். சமச்சீரான தீயில் அரிசி வெந்தால்தான் சத்துகள் சிதையாமலிருக்கும். அரிசி வெந்ததும் நீரை வடித்து, பரிமாற வேண்டும். பாத்திரத்தில் சமைத்து சாதத்தை வடிக்கும்போது, அதிலுள்ள ஸ்டார்ச், வடித்த நீருடன் வெளியேறிவிடும். அரிசியிலுள்ள கார்போஹைட்ரேட் அளவும் குறைந்துவிடும். குக்கரில் சமைக்கும்போது அதிலுள்ள நீர் மட்டும் நீராவியாக வெளியேறுவதால், கார்போஹைட்ரேட் சத்துகள் அப்படியே இருக்கும்.

கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் குக்கர் உணவைச் சாப்பிடுவது நோய்கள் உண்டாகக் காரணமாகிறது. குக்கரில் சமைத்த உணவில் நுண் சத்துகளும் வீணாகிவிடும். தொடர்ந்து அதைச் சாப்பிட்டால், உடல் பருமனில் தொடங்கி சர்க்கரைநோய்வரை பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். பெருந்தீனியான அரிசியை `சோறு ஆக்குவது’ என்ற முறையில் சமைத்துச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவோ, கொழுப்பின் அளவோ அதிகரிக்காது. உடலுக்கு ஊட்டமளிக்கும் உணவாக அமையும். இதைப் பின்பற்றினால் நோயில்லாமல் வாழலாம்.

தெளிவோம்...

ஜி.லட்சுமணன்