கடந்த ஓராண்டாக தினமும் இரவில் கனவுகள் துரத்துகின்றன. யாருமில்லாத வனத்திலோ, மலை இடுக்குகளிலோ ஓடுவதுபோலவும், உலகிலேயே நான்தான் கடைசி ஆள் என்பதுபோலவும், மிகப்பெரிய விலங்குகள், பாம்புகள் துரத்துவதுபோலவும் கனவுகள் வருகின்றன. இதனால் படுக்கைக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

- மகேஷ்வரி, காரைக்குடி

கனவுகள் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் அலாரமோ, நடக்கப்போகும் அசம்பாவிதங்களுக்கான அபாய ஒலியோ அல்ல. கனவு என்பது திரைப்படம் பார்ப்பதைப் போன்ற ஓர் அழகான உணர்வு மட்டுமே. திரைப்படம் பார்த்து முடித்த சில நிமிடங்களில் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறோமோ, அதேபோல காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் கனவிலிருந்து மீள வேண்டியது அவசியம். எனவே, கனவை வெறும் அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள். இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் சிறு சிறு வேலைகள், விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். தூக்க நேரத்தை முறைப்படுத்துங்கள். இரவில் எளிதில் செரிமானமாகும் எளிய உணவுகளை உட்கொள்ளுங்கள்; தேவையில்லாத யோசனைகள், விவாதங்கள் வேண்டாம். நம் நிழல் நம்மைத் துரத்துவது போன்றதே கனவு. அதைத் தவிர்ப்பது சாத்தியம் இல்லை என்றாலும், அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தூக்கத்தில் எப்படிப்பட்ட கனவு வந்தாலும், அது பற்றி யோசிப்பதைத் தவிருங்கள். யோசனைகளைத் தவிர்க்க முடியவில்லையென்றால், மனநல மருத்துவரை அணுகவும்.

63 வயதாகும் எனக்கு ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது கண்ணில் தூசு மிதப்பதுபோலவும், புகை வளையங்கள் நகர்வதுபோலவும் உணர்கிறேன். அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையில் விசாரித்தபோது தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இது, கண்புரை சிகிச்சையின் பக்கவிளைவா... நான் மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டுமா?

- தங்கம், வேளச்சேரி

கருவிழி, விழித்திரை, லென்ஸ் என எதில் பிரச்னை இருந்தாலும் பார்வை மங்கலாக இருக்கும். கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, சிகிச்சைக்குப் பிறகு ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். உங்களுக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனவே, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டு, அதனால்கூட பார்வை மங்கியிருக்கலாம். இத்தகைய பிரச்னைகளை முன்கூட்டியே தடுப்பது சாத்தியமில்லாதது. எனவே, முதலில் முழுமையாகக் கண் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அறுவை சிகிச்சை நேரத்தில் கண்ணின் எந்தெந்தப் பகுதிகளெல்லாம் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டன என்பதைப் பரிசோதனையின்போது அவசியம் கூற வேண்டும். பரிசோதனை முடிவு வந்ததும், வேறொரு கண் மருத்துவரிடம் மறு ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். தனியார் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லையென்றால், அரசு மருத்துவமனையை நாடவும்.

எனக்கு சிறுநீரகக்கல் பிரச்னை இருக்கிறது. `தினமும் வாழைத்தண்டு சாறு குடித்தால், பிரச்னையிலிருந்து விடுபடலாம்’ என்று நண்பர் சொல்கிறார். ஏற்கெனவே இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டுவருகிறேன். அதை நிறுத்திவிட்டு வாழைத்தண்டு சாறு குடிக்கலாமா... ஆலோசனை தாருங்கள்.

- கற்பகம், திருப்பூர்.

சிறுநீரகத்தில் தாது உப்புகள் படிவதால் கற்கள் உருவாகும். எந்த உப்பு படிந்திருக்கிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப மாத்திரைகள் சாப்பிட்டு, மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அலோபதி சிகிச்சை எடுக்கும்போது ஒருங்கிணைந்த மருத்துவமாக, சித்த மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றலாம். மாத்திரைகளுடன் வாரம் ஓரிருமுறை வாழைத்தண்டுச் சாறு அல்லது சிறுபீளைச் சாறு அருந்துவது சீக்கிரம் குணமாக உதவும். கால்சியம் சத்து நேரடியாக சிறுநீரகத்துக்குச் சென்றால், கற்கள் கரைவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, கால்சியம் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது, கற்களை விரைவாகக் கரைக்க உதவும்.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.