Published:Updated:

மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!

மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!
மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!

மலச்சிக்கல் மனிதனுக்கு பெரும் சிக்கல்.... இந்தச் சிக்கலை சிக்கல் ஏற்படுவதற்கு முன்பே தற்காத்துக்கொண்டால் மூலநோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். எவ்வாறு வாகனங்கள் இயங்க இன்ஜின் ஆயில் தேவைப்படுகிறதோ, அதேபோல் நம் உடல் இயங்குவதற்கும்லூப்ரிகன்ட் தேவை. இது குறையும்பட்சத்தில் நம் உடல் வறட்சியாகி, மலச்சிக்கல், மூலநோய் போன்ற பாதிப்புகள் உருவாகின்றன. சரியான உணவுப் பழக்கங்கள் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே மூலநோயை தவிர்க்கலாம்

மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!

தற்போது நாம் கோடைகாலத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குளிர்காலத்தைவிட இப்போது நம் உடலின் தன்மை அதிகமாக கொதிநிலையில் இருக்கும் என்பதால் அதற்கேற்றார்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். விரைந்து செரிமானமாகும் உணவுகளை உண்டால் கூடுதல் நன்மையைத் தரும். சூட்டை உண்டாக்கும் உணவுகள், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, அதிக நேரம் வயிற்றைக் காயப்போடுவது, சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் இருப்பது போன்றவை பைல்ஸ்/மூலம் ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன.

பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளையும், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களையும் சாப்பிட்டால் மலம் இறுகாமல் தடுக்க நாம் எடுக்கும் முதன்மை நடவடிக்கைகளாகும். ஏனெனில் முதற்கட்டமாக ஏற்படும் மூலத்தை மட்டுமே நம்மால் தவிர்க்க முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை பைல்ஸ், பொதுவான சுகாதார பிரச்னையாக இருக்கிறது. சுமார் 40 கோடிக்கு மேற்பட்டோர் மூலநோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் மூலநோயை பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் இருப்பது பிரதானம். இல்லையெனில் நாளடைவில் பெரிதாகும் மூலநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உருவாகக்கூடும். 

மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!

அசுர வேகத்தில் மருத்துவத் துறையின் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் வளர்ச்சிப் பெற்று வருகின்றன. நம் கண் இமைக்கும் நேரத்தில் சிகிச்சையை வலியின்றி செய்து முடிக்கும் அளவிற்கு அனுபவிக்க மருத்துவர்களும் உள்ளனர். அதனால் அறுவை சிகிச்சை என்றவுடன் மூலநோய் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது இவ்வாறான நோய்களை எளிமையாக லேசர் சிகிச்சை மூலமாகவே குணப்படுத்திவிடுகின்றனர். இதனால் கத்தியில்லாமல், இரத்தம் சிந்தாமல் விரைவில் நோயில் இருந்து நம்மால் விடுபட்டுவிட முடிகிறது. சிகிச்சைக்குப் பிறகு நமது உணவுப் பழக்கங்களில் சில மாற்றங்கள் செய்தும், மருத்துவரின் அறிவுரைப்படியும் நடந்துகொண்டால் மூலநோய் திரும்பி வருவதற்கான வாய்ப்பே இருக்காது. 

இந்திரா நர்சிங் ஹோம்

வேலூர் 'இந்திரா நர்ஸிங் ஹோம்', தேசிய அளவில் பைல்ஸ் சிகிச்சைக்குப் புகழ்பெற்ற மருத்துவமனையாகும். இதுவரை 25,000 நபர்களுக்கும் மேல் வெற்றிகரமாக பைல்ஸ் சிகிச்சையை அளித்து வெற்றி கண்டுள்ளது இந்திரா நர்சிங் ஹோம். மூலநோய் நான்கு (முதல்வகை -ஆசன வாயின் துவாரத்தில் சதை வளர்தல், இரண்டாவது வகை - ஆசன வாயில் ஏற்படும் வெடிப்பு. மூன்றாவது வகை - பௌத்திரம் எனப்படும் Fistula. நான்காவது வகை - ரெக்டல் கேன்சர்) வகைகளாக இருக்கின்றன. இவை அனைத்திற்கும் சிறந்த தீர்வை தருகிறது இந்திரா நர்சிங் ஹோம். 

பைல்ஸ் லேசர் சிகிச்சை தவிர,  பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள், சிறுநீரக கல்லிற்கான லேசர் சிகிச்சை, லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை உள்ளிட்ட பல சிகிச்சைகளும் அனைத்துவிதமான பொது அறுவை சிகிச்சை வசதிகளையும் வழங்குகிறது இந்திரா நர்சிங் ஹோம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலக பைல்ஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துகிறது இம்மருத்துவமனை. அந்த முகாமில் நோயாளிகளுக்கு இலவசமாக செக்-அப், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது. இதுவரை 21 மருத்துவ முகாம்களை நடத்தியுள்ள இந்திரா நர்சிங் ஹோம், அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பல நோயாளிகளுக்கு 50% சலுகை மூலம் அறுவை சிகிச்சையும் செய்துள்ளது. கடந்த மாதம் நடத்தப்பட்ட முகாமில் 150 பேருக்கு இலவச அறுவை சிகிச்சையையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. திறமைவாய்ந்த மற்றும் அனுபவமிக்க மருத்துவர்கள், வசதியான மற்றும் மனநிறைவைத் தரும் அறைகள், நவீன பரிசோதனை வசதிகொண்ட மருத்துவமனையாகவும் இந்திரா நர்சிங் ஹோம் இருக்கிறது. மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வழங்கும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நோயாளிகளுக்கு இந்திரா நர்சிங் ஹோம் காப்பீடும் வழங்குகிறது.

பைல்ஸ் மற்றும் இதர மருத்துவ சிகிச்சை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, அணுகவும் இந்திரா நர்ஸிங்  ஹோம்   (+91) 98423 24425, 98423 42525