Published:Updated:

"மகனுக்காக பாத்திரம் கழுவுறேன், குப்பை பொறுக்குறேன்!" 

"மகனுக்காக பாத்திரம் கழுவுறேன், குப்பை பொறுக்குறேன்!" 
"மகனுக்காக பாத்திரம் கழுவுறேன், குப்பை பொறுக்குறேன்!" 

"அம்மா, ஃபுட்பால் விளையாடப் போறேன்" என உற்சாகமாய் கூறிவிட்டுச் சென்ற சரணின் முகம் இன்னும் விசாலாவுக்கு நினைவில் இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் மாலை நேரத்தில் விளையாடச் சென்ற சரண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஒருவழியாக சரண் வீடு திரும்பும்போது மிகவும் களைப்பாகக் காணப்பட்டான். விளையாடியதால் ஏற்பட்ட களைப்பு என அவன் அம்மா விசாலா அதைப் பொருட்படுத்தவில்லை. அதன்பிறகு  கடும்   வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டான் சரண். பிள்ளைக்கு என்ன ஆனதோ என பதறி அருகில் இறந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, இரத்தப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

"மகனுக்காக பாத்திரம் கழுவுறேன், குப்பை பொறுக்குறேன்!" 

சரணுக்கு வந்திருக்கும் கொடுமையான இரத்தப் புற்றுநோய் பற்றி அவன் பெற்றோரிடம் தெரிவித்தனர். தாய் தந்தையின் இதயம் சுக்குநூறாக நொறுங்கியது, படிக்காத பெற்றோர் என்பதால் தங்கள் 10 வயது மகனை சிறு வயதிலேயே இழக்கப்போகிறோம் என மனமுடைந்தனர். சரணுக்கு வந்திருப்பது முற்றிய நிலை இரத்தப் புற்றுநோய் என்பதால், அவனை சென்னைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மகன் பிழைக்க ஒரு வாய்ப்புள்ளது என்கிற செய்தி பெற்றோருக்கு சிறிய ஆறுதலாக அமைந்தது.

சரணுடன் சென்னைக்கு வர அவனது தந்தை வேலைக்கு செல்லுமிடத்தில் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, மகனுடன் தன்னந்தனியாக விசாலா சென்னையில் தங்கி மருத்துவம் பார்த்துவருகிறார். ஊரிலிருந்து தன் கணவன் அனுப்பும் பணம் போதாது என்று, பகலில் வீட்டு வேலை, குப்பை சேகரிப்பது மற்றும் இரவில் பாத்திரம் துலக்கும் பணி என இராப்பகல் பாராது வேலை செய்து மாதம் ரூ. 4000 சம்பாதித்து வருகிறார். இருவரின் சம்பாத்தியமும் துளியளவே சரணின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவக்கூடும். மீதி பணத்துக்கு ஊர் முழுக்க கடன் வாங்கியே நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

"மகனுக்காக பாத்திரம் கழுவுறேன், குப்பை பொறுக்குறேன்!" 

மருத்துவமனையிலேயே எந்நேரமும் இருக்கும் சரணுக்கு இந்த வேதனையிலிருந்து எப்போது மீள்வோம் என்பதே கவலை. தன்னைப் பார்க்க வரும் அவன் தாயிடம், தன் தந்தை ஏன் தன்னை வந்து பார்ப்பதில்லை எனச் சரண் கோபித்துக்கொள்வதுண்டு. ஆனால் மகனின் உயிரைக் காப்பாற்றவே சரணின் தந்தை விடுமுறை எடுக்காமல் அல்லும் பகலும் வேலைசெய்துவருகிறார். தினமும் கைகளில் குத்தப்படும் ஊசிகளும், புற்றுநோய் தரும் வேதனையும் சரணை நாளுக்கு நாள் உருக்குலைத்துவருகின்றன.

கீமோதெரப்பி சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் சரணின் உடல் நிலை முழுமையும் குணமடைய போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை தேவைப்படுகிறது. விசாலா தன் எலும்பு மஜ்ஜையை தானமாக தர தயாராக இருந்தாலும், பல மாதங்கள் வரை நிகழக்கூடிய சிக்கலான பல கட்டங்கள் நிறைந்த இச்சிகிச்சியை மேற்கொள்ள கிட்டத்தட்ட ரூபாய் 26 லட்சம் தேவைபப்டுகிறது. மகனின் உயிரைக் காப்பாற்ற முடியும் எனத் தெரிந்த பின்னரும், பணம் இல்லாத ஒரே காரணத்தினால் மகனை இழக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள் இந்தப் பெற்றோர். 

சரண் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திப்போம். நம்மால் ஆன பண உதவியைச் செய்து அவனது தாய் விசாலாவின் பெரும் சுமையை சிறிதேனும் இறக்கிவைப்போம். சரணின் மருத்துவத் தேவைக்கு உதவிட https://www.ketto.org/stories/helpcharan?utm_campaign=helpcharan&utm_medium=position_1&utm_source=external_vikatan எனும் தளத்துக்குச் சென்று தங்களால் இயன்ற பண உதவியை தயவு கூர்ந்து செய்யுமாறு Ketto கேட்டுக்கொள்கிறது.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்...

"மகனுக்காக பாத்திரம் கழுவுறேன், குப்பை பொறுக்குறேன்!" 

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர், வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.