Published:Updated:

மகள் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் தாய்! #SaveSrijani

மகள் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் தாய்! #SaveSrijani
மகள் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் தாய்! #SaveSrijani

தனது தாய்க்கு உதவி புரிவது என்றால் ஸ்ரீஜனி சக்கிற்கு மிகவும் பிடிக்கும். எப்போதெல்லாம் தனது தாய் மார்க்கெட்டுக்கு சென்றாலும் தாய் வந்தனாவிடம் இருந்து பைகளை தானே தூக்கிக் கொண்டு வருவாள். அப்படி ஒருநாள் பைகளை வாங்கிய அவள் கை வலியால் துடித்துப்போனால். வீட்டிற்கு வந்ததும் ஸ்ரீஜனி கையில் தைலம் தடவிவிட்டு சமயலறைக்கு சென்றார் தாய் வந்தனா. பின்பு இரவு உணவு உண்ண வந்த ஸ்ரீ ஜனியிடம் இப்போது வலி எப்படி இருக்கிறது என்று கேட்டபோதும் அவளுக்கு வலி இன்னும் சரியாகவில்லை என்று புரிந்தது. இதையடுத்து மறுநாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்க முற்பட்ட ஸ்ரீஜனியால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டால். 

மகள் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் தாய்! #SaveSrijani

அங்கு ஸ்ரீஜனிக்கு மருந்து கொடுக்கப்பட்டது, இருந்தபோதும் சரியாகவில்லை. இதனால் மருத்துவர் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனையை மேற்கொள்ள சொன்னார். இந்த பரிசோதனைகளுக்காக பெங்காலின் வெவ்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதற்குள்ளாகவே மிகவும் சோர்ந்து போன ஸ்ரீஜனி தாயின் தோள் மீது சாய்ந்து உறங்கி விட்டாள். பரிசோதனை முடிந்து ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் வந்தார் வந்தனா. அதனை முழுமையாக படித்த மருத்துவர் "உங்களது மகளின் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகவும், உடனே டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறி ஸ்ரீஜனியின் பெற்றோர் தலையில் இடியை இறக்கினார். 

அன்றிலிருந்து ஸ்ரீஜனிக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல மாதங்களாக மருத்துவமனையில் இருப்பதால் ஸ்ரீஜனிக்கு மருத்துவமனை சுற்றுச்சூழல் பிடிக்கவில்லை. "என்னை சீக்கிரம் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னால் இங்கே இருக்க முடியவில்லை. நண்பர்களுடன் விளையாட முடியவில்லை" என வருத்தப்படுவதாக வந்தனா கவலைப்பட்டார். தற்போது ஸ்ரீஜனிக்கு விரைவில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சிறுநீரகத்தை தானம் செய்ய வந்தனா தயாராக இருக்கிறார். எனினும் அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கிறது. இந்த சிகிச்சைக்காக பெங்காலில் இருந்து வேலூருக்குவந்துள்ளனர் ஸ்ரீஜனியின் பெற்றோர். அங்கு ஸ்ரீஜனியின் தந்தை இல்லப்பராமரிப்பு வேலை செய்து வந்தார். அதில் மாதம் மூவாயிரம்தான் வருமானம் வரும். டயாலிசிஸ் சிகிச்சைக்கே வாரத்தின் மூன்று நாட்களுக்கு ரூ.39,000 செலவு செய்கிறார்கள். பெங்காலைவிட்டு சென்னைக்கு வந்ததால் கைவசம் தற்போது வேலை, வருமானமுமின்றி தவித்து வருகின்றனர்.

"கடந்த ஒன்பது மாதங்களில் கையில் இருந்த சேமிப்புகள் அனைத்தும் சிகிச்சைக்கே செலவாகிவிட்டன. மகள் விரைவில் குணமடைந்து திரும்ப வரவேண்டுமென்பதே எங்களது ஒரே விருப்பம். ஆனால் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாமல் உதவியற்று நிற்கிறோம். இப்போது எங்களிடம் ஒன்றுமில்லை, கால தாமதமாகும் ஒவ்வொரு நாளும் என் மகளை இழந்துவிடுவோமோ என்று எண்ணி உயிர்போகும் வலியை அனுபவித்து வருகிறோம்" என வேதனையுடன் கூறினார் வந்தனா. ஸ்ரீஜனியை மீட்க 
போராடி வரும் அவர்களின் மகளுக்கு நம்மால் முடிந்த உதவியை நிதி திரட்டும் இணையதளமான 'KETTO' -வுடன் இணைந்து செய்வோம். முடிந்தவரை இச்செய்தியை ஷேர் செய்து பல உதவிகரங்களையும் உதவிக்கு அழைக்கலாம். ஸ்ரீஜனிக்கு உதவ நினைத்தால் இந்த https://www.ketto.org/fundraiser/helpsrijani?utm_campaign=helpsrijani&utm_medium=position_1&utm_source=external_vikatan லிங்கிற்குச் சென்று உதவலாம். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு தானமும் ஸ்ரீஜனியின் உயிரைக் காப்பாற்ற உதவும்!

மகள் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் தாய்! #SaveSrijani

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.