Published:Updated:

மூட்டு வலியா? துல்லியமான ரோபோட்டிக்ஸ் சிகிச்சை வந்துவிட்டது!

மூட்டு வலியா? துல்லியமான ரோபோட்டிக்ஸ் சிகிச்சை வந்துவிட்டது!
மூட்டு வலியா? துல்லியமான ரோபோட்டிக்ஸ் சிகிச்சை வந்துவிட்டது!

பூனம் மல்ஹோத்ராவுக்கு* வயது 63. சில தினங்களில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறார். பூனமின் கணவர் இராம் மல்ஹோத்ரா* 3 வருடத்துக்கு முன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். இதனால் மிக மோசமான மூட்டு வலியிலிருந்து இராம் விடுபட்டார், இருந்தும் செயற்கை மூட்டு ஒருவித அசவுகரியத்தையும் மெல்லிய வலியையும் ஏற்படுத்தியதாக உணர்ந்தார். தனக்கும் இந்த நிலை ஏற்படுமோ என்பதுதான் பூனமின் இப்போதைய கவலை...

மூட்டு வலியா? துல்லியமான ரோபோட்டிக்ஸ் சிகிச்சை வந்துவிட்டது!

“மூட்டுப் பிரச்னைகள் சம்பந்தமான சிகிச்சைகளில் சிறந்ததாக கருதப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கின்றபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ளும், சுமார் ஒன்றரை இலட்சம் நபர்களில் ஏறக்குறைய 20% நோயாளிகள், சிகிச்சைக்குப் பிறகு அசவுகரியமாக உணர்கின்றனர். அனுபவம் வாய்ந்த உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இச்சிகிச்சையை செய்யும்போதுகூட மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் 100% துல்லியம் என்பது சாத்தியமில்லாதது, எனவேதான், சிற்சில அசவுகரியங்கள் ஏற்படுவதாக சில நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இங்கு தான் ரோபோட்டிக்ஸ் நமக்கு கைகொடுக்கிறது", என்கிறார் முதுநிலை ஆர்த்ரோபிளாஸ்டி வல்லுநரும் SIMS மருத்துவமனையின் முடநீக்கவியல் துறை இயக்குநருமான டாக்டர். விஜய் சி. போஸ்.


அறுவை சிகிச்சையில் பிழைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக உதவும் கருவி, 'நேவியோ ரோபோட்டிக்ஸ் சர்ஜிக்கல் சிஸ்டம்' ஆகும். யு.எஸ்.ஏ-வில் உருவாக்கப்பட்டு பல மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, US FDA அமைப்பால் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிற நேவியோ ரோபோட்டிக்ஸ் சிஸ்டம் யுஎஸ்ஏ, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட 250 சர்வதேச மையங்களில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இன்றைக்கு உதவிவருகிறது. 

மூட்டு வலியா? துல்லியமான ரோபோட்டிக்ஸ் சிகிச்சை வந்துவிட்டது!

எவ்வாறு செயல்படுகிறது?

நேவியோ ரோபோட்டிக்ஸ் சர்ஜிக்கல் சிஸ்டம் மேம்பட்ட மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டது. அறுவை சிகிச்சை நிபுணரால் இயக்கப்படுகிற ஒரு ரோபோட்டிக் சாதனத்தைப் பயன்படுத்தி, முழங்கால் மூட்டின் துல்லியமான உருவத்தை / படத்தை உருவாக்குகிறது. இந்தத் தகவலை அறுவை சிகிச்சை அறையில் இடம்பெற்றுள்ள ஒரு நவீன கம்ப்யூட்டர் புரோகிராமிற்கு அனுப்புகிறது. இதனால் முழங்கால் மூட்டின் ஒரு 3-D மாடல் உருவாக்கப்படுகிறது, எனவே, அறுவை சிகிச்சைக்கு முன்பு CT ஸ்கேன் அல்லது MRI செய்யத் தேவையில்லை. இதனால் சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கு, கருவிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு, துல்லியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கிறது, சிகிச்சையும் கட்சிதமாக நடைபெறுகிறது.

கிடைக்கும் பயன்கள் ஏராளம்!

குறைவான இரத்த இழப்பு, தேவையான அளவு மட்டுமே எலும்பு அகற்றம், இயற்கையான மூட்டுக் கட்டமைப்புக்கு பாதுகாப்பு, விரைவாக குணமடையக்கூடிய வசதி மற்றும் எவ்வித தசை அழுத்தமோ, சிரமமோ அல்லது வலியோ இன்றி முழு அளவில் அசைவுகளை மேற்கொள்ள உதவுபுரிவது, இச்சிகிச்சை முறையின் பயன்களாகும். இதன்மூலம் பொருத்தப்படும் மூட்டு எவ்வளவு இயற்கையாக உணரச் செய்கிறதென்றால், தங்களுக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது என்பதையே நோயாளிகள் அநேகமாக மறந்துவிடுகின்றனர். மேலும், இம்முறையிலான அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவும் குறைவாக உள்ளது” என்று கூறுகிறார் டாக்டர். C. விஜய் போஸ்

மூட்டு வலியா? துல்லியமான ரோபோட்டிக்ஸ் சிகிச்சை வந்துவிட்டது!

"நேவியோ மூலம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின், இரண்டாவது நாளே மருத்துவமனையிலிருந்து நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். நல்ல பிசியோதெரபி சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் மெதுவாக ஓடவும் முடிந்தது. வாழ்க்கையின் தரத்தில் இப்பொழுது ஏற்பட்டிருக்கிற முன்னேற்றத்தை நினைத்து நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன்", என்கிறார் பூனம் மல்ஹோத்ரா.

மருத்துவத்துறையில் நோயாளிகளுக்கு நிகரற்ற பலன்களை ரோபோட்டிக்ஸ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. பகுதி மற்றும் முழுமையான முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறந்த தேர்வாக விளங்கும் நேவியோ ரோபோட்டிக் சிஸ்டம் சிகிச்சையைப் பற்றி மேலுமறிய, தொடர்புகொள்ளவும், SIMS மருத்துவமனை.

(*கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).