Published:Updated:

தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

Published:Updated:
தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

முழுக்க முழுக்க வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான இந்தியாவின் முதல் பிரத்யேக மையமான `GEM' (Gastroenterology and Medical Centre) மருத்துவமனையை நிறுவியர் டாக்டர் சி. பழனிவேலு. இருமுறை டாக்டர் பி.சி.ராய் தேசிய விருது, பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பாராட்டு, உலகின் பல நாடுகளில் பலதரப்பட்ட மருத்துவ விருதுகள் என ஒட்டுமொத்த இந்தியாவையே பெருமைகொள்ளச் செய்துள்ளார் இந்த மருத்துவ சகாப்தம்.

அறுவை சிகிச்சை முறையில், குணமடையும் நேரமும், நோய்த்தொற்றுக்கான வாய்ப்பும் அதிகம். ஆனால், உடலில் சிறு துளை ஏற்படுத்தி, கருவிகள் மூலம் சிகிச்சை செய்வதால், ரத்த இழப்பு கணிசமான அளவு தவிர்க்கப்படுவது மட்டுமல்லாமல் நோயும் விரைவில் குணமடைகிறது என்பதைக் கண்டறிந்து, லேப்பராஸ்கோப்பி சிகிச்சை முறையில் பலவாறான புதுமைகளையும் முன்னேற்றங்களையும் கொணர்ந்து இன்று உலகம் முழுக்க கீ ஹோல் சர்ஜரி முறைக்கு முன்னோடி மருத்துவமனையாக GEM மருத்துவமனை திகழக் காரணமாக விளங்குகிறார் பழனிவேலு.

தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வதேச மருத்துவ நிபுணர்கள் `முடியாது' எனக் கைவிட்ட பல விஷயங்களை தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் புதுமையான அறுவை சிகிச்சை முறைகள் மூலம் `முடியும்' என மருத்துவ உலகுக்கு நிரூபித்துக்காட்டியர். கணையப் புற்றுநோயை அகற்றும் `லேப்பராஸ்கோப்பி விப்பிள்' முறையை அறிமுகப்படுத்தியதற்காக ஜப்பானியர்களால் `தி விப்பிள் மேன்' என அழைக்கப்படுகிறார் பழனிவேலு. இந்த முறையை மருத்துவ உலகம் இன்று `Coimbatore Guidelines' என்ற பெயரில் வழங்கிவருகிறது.

இளமைக்காலம்...

நாமக்கல் மாவட்டம் ஆவாரங்காட்டுப்புதூரில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே தோட்ட வேலை செய்து பள்ளிப்படிப்பை மேற்கொண்டவர். பழனிவேலின் வாழ்வை இரு சம்பவங்கள் புரட்டிப்போடுகின்றன. தனது தங்கை நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, தகுந்த மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் சின்னஞ்சிறு வயதிலேயே பரிதாபகரமாக உயிரிழக்கிறாள். பிறகு தோட்ட வேலையின்போது, பழனிவேலின் கையில் மிகப்பெரும் காயம் ஏற்பட, வேறோர் ஊரில் உள்ள டாக்டரைப் பார்த்து, அவர் ஊசி போட, கடுமையான வலியோ பறந்துபோகிறது. 

இந்த இரு சம்பவங்களுக்குப் பிறகு, தான் கண்டிப்பாக ஒரு மருத்துவர் ஆகியே தீரவேண்டும் என வைராக்கியம் கொள்கிறார் பழனிவேலு...

தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

பல தடங்கல்களுக்குப் பின் பள்ளிக்கல்வி முடித்து, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.யூ.சி., சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., மதுரை மெடிக்கல் காலேஜில் எம்.எஸ்., மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்.சி.எச். பயிற்சி எனத் திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் படிப்பில் கவனம் செலுத்துகிறார். பின்பு, தமிழகம் முழுவதும் பல அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி, இறுதியாக கோவையில் மருத்துவமனை தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கிறார். 

1990 ஆம் ஆண்டு உலக மருத்துவ மாநாட்டில் Keyhole Surgery முறைப் பற்றி அறிந்து, மிகவும் நுட்பமான, நேரம் குறைவான இச்சிகிச்சையை நம் நாட்டில் அறிமுகம் செய்து, அதை எளிய மக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என மனதில் உறுதிகொள்ளும் அவர், அதற்கான பயிற்சிகளிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்கிறார்.

அவமானமும் வெகுமானமும்...

1992 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர் ஒருவரைப் பார்க்க நினைக்கும்போது, இவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சர்வதேச மருத்துவர்களை ஏன் வியந்து பார்க்க வேண்டும், இந்தியர்களால் முடியாதது என்ன, என்கிற மனநிலையை அடைகிறார் டாக்டர் பழனிவேலு. இது நடந்து நான்காண்டுகள் கழித்து, 1996 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவில் உலக மருத்துவர்கள் மாநாடு நடைபெறுகிறது. எந்த நாட்டில் தனக்கு ஓர் அவமானம் நேர்ந்ததோ அதே நாட்டின் மாநாட்டுக்குச் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார் பழனிவேலு என்பது வரலாறு!

ஒருமுறை, முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இவரிடம், ``முற்றிய நிலை கேன்சரை உங்களால் குணப்படுத்த முடியுமா?" எனக் கேட்டாராம். அதற்கோ இவரிடம் விடையில்லை! ``கேன்சர் சிகிச்சையைவிட முக்கியம், அது பற்றிய விழிப்புணர்வு, அதைத் தாங்கள் ஏற்படுத்தலாமே!" எனக் கலாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இன்று பலவகையான மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், இலவச மருத்துவ சேவையையும் தமிழகம் முழுக்க இவரின் மருத்துவமனை வழங்கிவருகிறது.  

தமிழகத்தின் மருத்துவ சகாப்தம்...

கீ ஹோல் சிகிச்சையில் சாதனை படைத்துள்ள ஜெம் மருத்துவமனை!  

GEM Digestive Diseases Foundation மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இலவச லேப்பராஸ்கோப்பி சிகிச்சை, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் மூலம் கட்டணமின்றி உடல் பருமன் குறைப்பு சிகிச்சை, வயிற்றில் உண்டாகும் புற்றுநோய்க்கு இலவச லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை ஆகியவற்றை ஜெம் வழங்கியுள்ளது. மேலும், ஏழைப் பெண் மாணவிகளுக்கும் இலவச செவிலியர் கல்வியையும் வழங்கிவருகிறது.

கோவையில் தொடங்கப்பட்ட GEM மருத்துவமனை தற்போது சென்னையிலும் செயல்படத் துவங்கியுள்ளது. குடல், இரைப்பை, உணவுக்குழாய், கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய், குடலிறக்கம், அல்சர் & GERD ஆகியவற்றுக்கு லேப்பராஸ்கோப்பி சிகிச்சை முறையில் பிரச்னையைக் குணப்படுத்தும் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ மையமாக விளங்குகிறது GEM. கல்லீரல் மாற்று சிகிச்சையில் உறுப்பு தானம் செய்வோரிடமிருந்து மிக எளிமையாக உறுப்புகளை எடுக்கும் முறையைக் கண்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கீ ஹோல் சிகிச்சைகளைச் செய்து, இந்திய மருத்துவ சரித்திரத்தில் சாதனை நிகழ்த்தியுள்ளது ஜெம் மருத்துவமனை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism