Published:Updated:

மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடும் சிறுவன் #SaveCharan

மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடும் சிறுவன் #SaveCharan
மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடும் சிறுவன் #SaveCharan

கடந்த மூன்று மாதங்களாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறார் சரணின் தாயார் விசாலா. காலை வீட்டு வேலை, மதியம் குப்பை சேகரிப்பது, இரவு பாத்திரம் துளக்குவது என்று மாதம் ரூ.4000 சம்பாதித்தாலும், அது தனது மகனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு போதுமான தொகையாக இல்லை. இருப்பினும் தம்மால் முடிந்தவரை உழைத்துவிட்டு இரவு மருத்துவமனையில் இருக்கும் தனது மகனை பார்க்கச் செல்வார். தனியாக மருத்துவமனையில் இருக்கும் மகன் சரணிற்கு இன்னும் சில நாட்களில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட இருப்பதால், ஒவ்வொரு நாளும் மிகுந்த பயத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார். 

மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடும் சிறுவன் #SaveCharan

ஒருநாள் மாலை வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டு நண்பர்களுடன் கால்பந்து விளையாட மைதானத்திற்கு சந்தோஷமாக புறப்பட்டான் சரண். ஆனால் அடுத்த ஒரு மணிநேரத்திலேயே வீட்டிற்கு திரும்பிய சரண் தொடர்ந்து வாந்தி எடுத்தான். நடுராத்திரியில் அவனது முகம் வெளிரிப்போய் இருந்ததைக் கண்டு மிரண்டுபோன விசாலா மகனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதித்ததில் சரண் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் கூறினார். அதைக் கேட்ட கணமே மயக்கமடைந்தார் விசாலா. தனது ஒரே மகனின் உயிர் போய்விடுமோ என்று கதறினார். ஆனால் அவனைக் காப்பாற்ற எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையே ஒரே வழி என்று மருத்துவர் தெரிவித்தார்.  

சென்னையில் உள்ள மருத்துவமனையில் தான் அந்தச் சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவர் கூறியதால் சென்னைக்கு புறப்பட்டனர் விசாலாவும் சரணும். அவனது தந்தை ஒருநாள் கூட விடுமுறையின்றி உழைத்தால்தான் மாத சம்பளத்தை குறையின்றி பெற முடியும் என்பதால் மருத்துவமனைக்கு அவர் வரவில்லை. கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் நேரத்தை செலவிட்டு வரும் சரணுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. "சரணின் முதல் கீமோதெரபி செஷ்ஷனில் ஊசியைப் பார்த்து பயந்து அறையைவிட்டு ஓட நினைத்த அவனுக்கு அருகில் இருந்து தைரியம் சொல்லக்கூட யாருமில்லை என்று வருந்துகிறார்" தாயார் விசாலா.

மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடும் சிறுவன் #SaveCharan

வேலையின் இடையில் நேரம் கிடைக்கும்போது சரணைப் பார்க்க வரும் விசாலா, அவனது சோகமான அயர்ந்த முகத்தைப் பார்த்து மிகுந்த வேதனைக்குள்ளாவார். அவரிடம் தன்னை ஏன் தந்தை பார்க்க வரவில்லை என்று சரண் கேட்பான். வேலை செய்தால் பணம் கிடைக்கும் என்று சொன்னால், "என்னைவிட பணம் மிகவும் முக்கியமா?" என்கிற சரணின் கேள்விக்கு அழுகை மட்டுமே விடையாக இருந்தது விசாலாவுக்கு. பணம் இருந்தால் மட்டுமே அவனது உயிரைக் காப்பாற்ற முடியும். சரணின் உயிர், அவனது பெற்றோர்க்கு பணத்தைவிடவும் விலைமதிப்பற்றது என்பதை எப்படி புரிய வைப்பது என்று திகைத்தார் விசாலா. 

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்தால் கட்டாயம் சரணின் உயிரைக் காப்பாற்றலாம் என்று மருத்துவர் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும் சிகிச்சைக்கு ரூபாய் இருபத்தி ஆறு லட்சம் தேவையாக இருக்கிறது. இவ்வளவு தொகையைப்புரட்டுவதற்கு சரணின் பெற்றோர் போராடி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நிதி திரட்டும் இணையதளமான'KETTO' அந்தத் தொகையை திரட்டுவதற்கு உதவி செய்கிறது. 10 வயதான சரண், இனி வரும் காலங்களில் தனது வாழ்க்கையை தொடர நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம். நம்முடைய சிறு தானம் ஒரு உயிரையே மீட்டுத்தரும். சரணுக்கு உதவ நினைப்பவர்கள் https://www.ketto.org/stories/savecharan?utm_campaign=savecharan&utm_medium=position_1&utm_source=external_vikatan இந்த லிங்கிற்கு சென்று உதவலாம். 

மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடும் சிறுவன் #SaveCharan

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர், வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.