Published:Updated:

`சிங்கப்பூரை குறிவைத்த குரங்கம்மை' - பாதிக்கப்பட்ட நைஜீரிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!

இரா.செந்தில் குமார்
`சிங்கப்பூரை குறிவைத்த குரங்கம்மை' - பாதிக்கப்பட்ட நைஜீரிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!
`சிங்கப்பூரை குறிவைத்த குரங்கம்மை' - பாதிக்கப்பட்ட நைஜீரிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!

சிங்கப்பூர் நாட்டில் முதல்முறையாக `குரங்கம்மை' (Monkeypox) நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர் கண்டறியப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

`சிங்கப்பூரை குறிவைத்த குரங்கம்மை' - பாதிக்கப்பட்ட நைஜீரிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!

(PC : Yahoo news)

சின்னம்மை, தட்டம்மை போல் ஒரு வகையான அம்மை பாதிப்புதான் இது. `மங்கிபாக்ஸ்' எனும் வைரஸ் கிருமியால்தான் இந்தப் பாதிப்பு உண்டாகிறது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, மூட்டு வலி மற்றும் தோல்களில் தடிப்பு, வீக்கம், நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியது. இந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வெப்ப மண்டல மழைக்காடுகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது.

`சிங்கப்பூரை குறிவைத்த குரங்கம்மை' - பாதிக்கப்பட்ட நைஜீரிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!

PC : Wikipedia

1958 - ம் ஆண்டு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் ப்ரீபென் வோன் மேக்னஸ் என்பவர் குரங்கில் இந்த வைரஸை முதன்முதலாகக் கண்டறிந்தார். 1970 - ம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. 1970 முதல் 86 வரை 400 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தற்போது, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பயிலரங்கு ஒன்றில் கலந்துகொள்ள கடந்த மாதம் நைஜீரியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து தங்கியிருந்தவருக்கு இந்த பாதிப்பு இருப்பது அண்மையில்தான் கண்டறியப்பட்டது. 

`சிங்கப்பூரை குறிவைத்த குரங்கம்மை' - பாதிக்கப்பட்ட நைஜீரிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!

அந்த இளைஞருக்கு, சிங்கப்பூர், தேசிய தொற்றுநோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. `சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை கட்டுக்குள் இருப்பதாக' மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Vikatan