Published:Updated:

டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?

``நர்ஸிங் டிகிரி படிக்கும் மாணவர்கள், பாடங்களை முழுமையாகப் படிக்கின்றனர். ஆனால் டிப்ளோமா மாணவர்களுக்கு அனைத்தும் மேலோட்டமாகவே இருக்கும். அவர்கள் பெரும்பாலும் அனுபவப் படிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுவர்.

டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?
டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?

ருத்துவத்துறை பல்வேறு வளர்ச்சிகளை எட்டியிருந்தாலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை தொடர்கிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவிலிருந்து செல்லும், செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. ஊதியமும், ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சங்களைத் தொடுகிறது. இதுவரை, நர்ஸிங் படிப்பு பி.எஸ்சி மற்றும் டிப்ளோமா என இரண்டு வகையாக இருந்தன. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படித்து, செவிலியர்களாகப் பணிக்குச் சேர்ந்தனர். கிராமப்புறங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் நம்பிக்கையையும் அளித்தன இந்தப் படிப்புகள். 

டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?

தற்போது, டிப்ளோமா நர்ஸிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, வரும் 2020 -21 ம் ஆண்டுடன் நிறுத்தப் போவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1.2 லட்சம் செவிலியர்கள், டிப்ளோமா நர்ஸிங் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குத் தயாராகி வரும் சூழலில், இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நர்ஸிங் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ``அரசின் இந்த முடிவால் மருத்துவ சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகும்" என்கிறார் தமிழ்நாடு அரசு நர்ஸுகள் சங்க மாநிலச் செயலாளர் வளர்மதி. 

டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?

``மூன்றரை வருட டிப்ளோமா நர்ஸிங் முடிந்ததும், ஆறு மாதம் மிட்வைஃபரி (Midwifery) படிப்பைப் படிக்க வேண்டும். அதில், பெண்களுக்குப் பிரசவ வகுப்புகளும், ஆண்களுக்கு மனநல வகுப்புகளும் இருக்கும். இதுவே, பி.எஸ்சி நர்ஸிங் என்றால், நான்கு வருடப் படிப்பு. ஆனாலும் டிப்ளோமா படிப்பில்தான் பிராக்டிக்கல் வகுப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், டிப்ளோமா முடித்தவர்கள் குறைந்த தகுதியுள்ளவர்கள் என்பதுபோன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. இது பணியிடத்திலும் எதிரொலிக்கிறது. பி.எஸ்சி. மாணவர்களைவிடக் கூடுதல் அனுபவம் இருந்தும், பாரா மெடிக்கல் பணியாளர்களாகவே அவர்கள் நியமிக்கப்படுவர். இதனால், அவர்களுக்கு பணியிடச் சூழல் தொடங்கி சம்பளம் வரை தீவிரமான பல சிக்கல்கள் ஏற்படும்.

இந்நிலையை மாற்ற வேண்டுமென்று, கடந்த 20 ஆண்டுகளாக டிப்ளோமா நர்ஸிங் மாணவர்கள் சார்பில், நர்ஸிங் கவுன்சிலுக்கு நாங்கள் கோரிக்கைகளை வைத்துவருகிறோம். டிப்ளோமா நர்ஸிங் படிப்புக்கான தரத்தை உயர்த்தவேண்டும்; அதற்கெனக் கூடுதலாக ஆறு மாத காலம் டிப்ளோமா படிப்பை நீட்டிக்கவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. மூன்று வருடப் படிப்பில், பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கலாம். அதைவிடுத்து, டிப்ளோமா கோர்ஸையே தடை செய்வது பிரச்னைக்கான தீர்வாக இருக்காது" என்கிறார் அவர்.

டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?

டிப்ளோமா நர்ஸிங் படிக்கும் மாணவி ஒருவர் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, ``அரசு நர்ஸிங் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களே. அவர்கள் மதிப்பெண்ணில் பின்தங்கியிருந்தாலும் நர்ஸிங் கனவுகளுடன் இருப்பார்கள். இதில் தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சியைவிட டிப்ளோமா நர்ஸிங் படிப்பை தேர்வு செய்வதற்கு கட்டணம் முக்கியக் காரணமாக இருக்கிறது. பி.எஸ்சி படிப்புக்கு, ஏறத்தாழ 5 லட்சம் வரை செலவாகும். ஆனால், டிப்ளோமாவுக்கு ஒன்றரை லட்சம்தான் ஆகும். டிப்ளோமா படிப்பையே நீக்கினால், டிப்ளோமா நர்ஸிங் படிக்க விரும்பும் மாணவர்கள் வேறு படிப்பைத் தேர்வு செய்யவேண்டிய நிலை ஏற்படும்..." என்கிறார் அவர்.

ஆனால், பி.எஸ்சி நர்ஸிங் படித்தவர்களின் கருத்து வேறுமாதிரியிருக்கிறது. ``நர்ஸிங் டிகிரி படிக்கும் மாணவர்கள், பாடங்களை முழுமையாகப் படிக்கின்றனர். ஆனால் டிப்ளோமா மாணவர்களுக்கு அனைத்தும் மேலோட்டமாகவே இருக்கும். அவர்கள் பெரும்பாலும் அனுபவப் படிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுவர். பி.எஸ்சி நர்ஸிங் மாணவர்களைப்போல ஆய்வுகள் (Research Paper) செய்வதற்கான வசதிகளோ, நேரமோ டிப்ளோமா நர்ஸிங் படிப்பின்போது இருக்காது. படிப்பைவிட அதிகமாக அனுபவ வகுப்புகளுக்குத்தான் தரப்படும் என்பதால், அவர்கள் பணிக்குச் செல்லும்போது, டெக்னிக்கலான விஷயங்களில் தடுமாறுவர். 

நோயாளிக்கு ஊசி போட வேண்டும் என்றால், எந்த இடத்தில் போடலாம். குறிப்பாக எந்த தசைப்பகுதியில் போடலாம், அதற்கான அறிவியல் பின்னணி என்ன என்பதுகுறித்து பி.எஸ்சி நர்ஸிங் பாடத்திட்டத்தில் இருக்கும். ஆனால் டிப்ளோமா நர்ஸிங் பாடத்திட்டத்தில் அதுபற்றி எதுவும் சொல்லித்தர மாட்டார்கள். இத்தகைய சூழலில், சில தவறுகள் நடக்கலாம். இது நோயாளியை உடல்ரீதியாக எந்தவிதத்திலும் பாதிக்காது என்றாலும், அவருக்குச் சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தும். 

டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?

பி.எஸ்சி நர்ஸிங் முடிப்பவர்களால், எளிதில் வார்டு இன்சார்ஜாகிவிட முடியும். டி.என்.பி.எஸ்.சி மூலம் ஆசிரியப் பணிக்கும் அவர்களால் செல்ல முடியும். ஆனால், டிப்ளோமா நர்ஸிங் படிப்பவர்களுக்கு, இந்த இரண்டு பணிகளும் கிடைப்பது கடினம். அவர்கள் செவிலியராக பல வருடங்கள் பணிபுரிந்தால் மட்டுமே, வார்டு இன்சார்ஜ் பணிக்குச் செல்ல இயலும். ஆசிரியப்பணிக்கு அவர்களால் செல்லவே முடியாது. அந்தவகையில் பி.எஸ்சி நர்ஸிங் படிப்புதான், பிற்காலங்களில் பல்வேறு நன்மைகளைத்தரும்" என்கிறார்கள் அவர்கள்.
இப்போதைய நிலவரப்படி, அரசு சார்பில் `காலேஜ் ஆஃப் நர்ஸிங்' சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் மட்டும்தான் இருக்கின்றன. மீதமுள்ள அனைத்து டிப்ளோமா பள்ளிகளும், வரும் நாள்களில் கல்லூரிகளாக மாற்றப்பட்டுவிடும் என்கிறார்கள். இது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்பது சந்தேகம்தான். 

தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் 4,500 பேர் டிப்ளோமா நர்ஸிங் படித்துமுடித்து செவிலியர்களாக வெளியே வருகின்றனர். அவர்களில்,

டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?

அரசு நர்ஸிங் பள்ளியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 2,000 பேர். டிப்ளோமாவை டிகிரியாக அறிவித்தால், இந்த எண்ணிக்கைகள் குறையலாம் என்கின்றனர் டிப்ளோமா நர்ஸிங் முடித்து பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் சிலர்.  

தமிழக நர்ஸிங் கவுன்சலிங் பதிவாளர் ஆனி கிரேஸிடம் இதுகுறித்து பேசினோம். 

``2018-ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 201 நர்ஸிங் பள்ளிகள். ஒவ்வொரு ஆண்டும், பி.எஸ்சி சேர்க்கையுடன் ஒப்புமைப்படுத்திப் பார்த்தால் டிப்ளோமா படிப்புக்கான சேர்க்கை குறைந்துவருகிறது. அந்த வகையில், டிப்ளோமா நர்ஸிங்கை நிறுத்துவது, மிகப்பெரிய பிரச்னையாக இருக்காது என்றே நினைக்கிறோம். உலகம் முழுவதும், நர்ஸிங் படிப்புக்கான டிகிரி குறிப்பிட்ட ஒரு படிப்பின் வழியாக மட்டுமே (Single level Entry) இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் டிப்ளோமா நர்ஸிங், பி.எஸ்சி நர்ஸிங் என இரு வழிகள் இருக்கின்றன. இதனால், பணிக்கு அமர்த்தப்படும் செவிலியர்கள் இருவிதமான பாடங்களைப் படிக்கவேண்டியிருக்கிறது. இந்த நிலையைப் போக்கவே டிப்ளோமா நர்ஸிங் படிப்பு நிறுத்தப்பட இருக்கிறது. 

டிப்ளோமா நர்ஸிங் படிப்பு இனி இல்லை... கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகுமா?

டிப்ளோமா நர்ஸிங்கின் மிகமுக்கியமான பாடத்திட்டங்கள் அனைத்தும் பி.எஸ்சி நர்ஸிங் படிப்புடன் நிச்சயமாக இணைக்கப்படும். வருங்காலங்களில், அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும். டிப்ளோமா முடித்துவரும் மாணவர்கள்தான், நோயாளிகளை அதிக அக்கறையோடு கவனித்துக்கொள்வர் என்பதுபோன்ற விஷயங்களைச் சிலர் சொல்லிக் கேட்கமுடிகிறது. இப்படியான விமர்சனங்கள் தவறு. இங்குப் பயிற்சிபெறும் அனைத்து செவிலியர்களும் பணி செய்யவே உள்ளனர். பணியின்மீதான அவர்களின் ஈடுபாட்டை, படிப்புடன் தொடர்புப்படுத்திக்கொள்வது, தவறு" என்கிறார் அழுத்தமாக.

Vikatan