Published:Updated:

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

Published:Updated:
"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

கால்களில் சலங்கையைக் கட்டியவுடன் தனது மழலைப்பொங்க மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஆடும் இஞ்சாராவை பார்க்கும் நமது மனம் நிச்சயம் உருகித்தான் போகும். நடனம் என்பது அவளது உயிராக இருந்தது. அவளின் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்ற என்ன வழி என்பதை ஆராய்வதையே தங்களது சந்தோஷமாக நினைத்தனர் இஞ்சாராவின் பெற்றோர். ஆனால் சில நாட்களிலேயே மகளின் கனவுக் கோட்டை சரிந்தது. 

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

நான்கு வயது இஞ்சாராவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவளது உடல் வெளிரிப்போனது. மிகவும் சோர்வடைந்த அவள், "அம்மா, நான் டான்ஸ் ஆடணும். ஆனா, என்னுடைய கால்கள் ரொம்ப வலிக்குது" என்று கூறி அழுவாள். அவளது இந்தத் திடீர் உடல்நலக் குறைவு குறித்து எதுவும் புரியாத பதற்றத்தில் இருந்தனர் இஞ்சாராவின் பெற்றோர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவளுக்கு பல சோதனைகள் எடுக்கப்பட்டன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவச் சோதனைகளின் முடிவில் இஞ்சாரா, மரபு சார்ந்த Thalassemia நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். அதுவும் இந்த நோய்  இக்கட்டான கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். Thalassemia மேஜர் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகக் குறைவான இரத்த அணுக்களும், ஹீமோகுளோபினும் இருக்கும். இரத்த அணுக்களும் அளவு சிறுத்தே காணப்படும். மிகக்கொடிய நோயால் தனது மகள் தாக்கப்பட்டுள்ளதைக் கேட்டு நெஞ்சம் அதிர்ந்து அழுத தாயின் கண்ணீரைத் துடைத்தபடி, "அம்மா வருந்தாதீர்கள், நான் குணமாகிவிடுவேன்" என்று கூறும் பிஞ்சு நெஞ்சுக்கு தெரியவில்லை தாயின் வலி என்னவென்று..

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

ரத்த அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட அளவில் வைக்க 20 நாட்களுக்கு ஒருமுறை இஞ்சாராவுக்கு ரத்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நம்பிக்கையை தளரவிடாமல் கடந்த மூன்று வருடங்களாக ரத்த மாற்றம் செய்து வருகின்றனர். தற்போது விரைவாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார். அதற்கு 36 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் இஞ்சாராவின் உயிரைக் காப்பாற்ற பணம் வாங்கப்பட்டது. இருப்பினும் போதுமான அளவு பணம் இன்னும் கிடைக்கவில்லை. 

"குழந்தையைக் காப்பாற்ற என்ன வழி என்பதறியாத எனக்கு கோவிலுக்குச் சென்று கடவுளிடம் முறையிடுவதைத்தவிர வேறேதும் தோன்றவில்லை" என்கிறார் இஞ்சாராவின் தாய். அவரது கணவர் பசவராஜு நாள் ஒன்றுக்கு ரூ.300க்கு கூலி வேலை செய்பவர். "என் மகளின் உயிரைக் காப்பாற்ற எப்படி இவ்வளவு தொகையை ஏற்பாடு செய்யப் போகிறேன்? என் கண்முன்னே அவள் இறப்பதைக் காண முடியாது!" என்று கதறி அழுவதைத் தவிர பசவராஜுக்கு தற்போதைய ஆறுதல் என்று எதுவுமில்லை. 

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

எப்போது நான் மீண்டும் ஆடத் தொடங்குவேன் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் தினமும் மனம் துடித்து போகின்றனர் இஞ்சாராவின் பெற்றோர். கனவுகளை சுமந்து வலியோடு வாழ்வுக்காக போராடி வரும் இஞ்சாராவைக் காப்பாற்ற நம்மால் முடிந்த உதவியைச் செய்ய முன்வருவோம். இஞ்சாராவின் கனவையும் உயிரையும் மீட்டுத்தரும் நமது ஒவ்வொருவரின் தானமும் விலைமதிப்பில்லாதது. இஞ்சாராவுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள்  
https://www.ketto.org/stories/supportinchara?utm_campaign=supportinchara&utm_medium=position_1&utm_source=external_vikatan  இந்த லிங்கிற்குச் சென்று உதவி புரியலாம்.

"கண்முன்னே மகள் இறப்பதைப் பார்க்க முடியாது" #SaveInchara

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.