Published:Updated:

சோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா?
சோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா?

ஷேவிங் ரேஷர்களால் மருக்கள், அழற்சி, நமைச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படலாம். தனிப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் பிளேடை இரண்டு முதல் நான்கு தடவை பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தாமலிருப்பது நல்லது. எக்காரணம் கொண்டும் ஒருவர் பயன்படுத்திய ரேசரை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது. 

ம்மாக்கள் தம் குழந்தைகளிடம் ஷேரிங் எனப்படும் பகிர்தல் நல்லது என்பதை சொல்லிக் கொடுத்து வளர்ப்பதுண்டு. `கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை...' என்றொரு பாடல் வரிகூட பகிர்தலின் பெருமையைப் பறைசாற்றுகிறது. ஆக, நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து கொள்வது அலாதியான இன்பத்தைத் தரும். ஹார்வர்டு பிசினஸ் பள்ளியின் 2008-ம் ஆண்டு கல்வித் திட்டத்தின்படி, தனக்காகப் பணம் செலவழிப்பதைக் காட்டிலும் அதைப் பிறருக்காக அர்ப்பணிப்பதிலும், பரிமாறிக்கொள்வதிலும் உள்ள இன்பம் இனிமையானது என்கிறார் மைக்கேல் நார்டன். ஆனால் உடல் நலம் என்று வரும்போது அத்தகைய `ஷேரிங்' மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. 

சோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா?

இதுகுறித்து பொது நல மருத்துவர் கவிதாவிடம் கேட்டபோது, `தொடுதலின் மூலம் நோய்த் தொற்றுகள் ஏற்படாது; ஒரு சில பொருள்களைப் பயன்படுத்துவதால்தான் நோய்கள் உருவாகின்றன' என்று கூறிய அவர், என்னென்ன பொருள்களை மற்றவர்களுடன் பயன்படுத்தக் கூடாது'என்று பட்டியலிட்டார். 

``டூத் பிரஷ்: ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ்ஷை மற்றவர் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவேண்டும். சில இளம்ஜோடிகள் தங்களது இணையின் டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்த விரும்புவதுண்டு. `யுகே பாத்ரூம்'  (UK Bathrooms) என்ற இணையதளம் நடத்திய ஆராய்ச்சியில் பிரிட்டிஷ் தம்பதியினர் இதை அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. அவர்களில் 70 சதவிகிதம்பேர் தங்களது இணையின் டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்துவதை சுகாதாரமின்மையாகக் கருதுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இது நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரே டூத் பிரஷ்ஷை இன்னொருவர் பயன்படுத்துவது கிருமிகளை அதிகரிக்கும் என்றும், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும் என்றும் `அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன்' (American Dental Association) கூறியுள்ளது. எனவே, அவரவருக்கெனத் தனித்தனியான டூத் பிரஷ்களைப் பயன்படுத்துவது நல்லது. 

சோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா?

சோப்பு:  துணி துவைக்கப் பயன்படுத்தும் சோப்புக் கட்டிகள் கிருமிகளைத் தக்க வைக்கும். எனவேதான், `நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம்' (Disease Control and Prevention) திரவ வகை சோப்புகளைப் பரிந்துரை செய்கின்றன. சோப்புக் கட்டிகள் மூலம் ஃபங்கஸ் மற்றும் ஈஸ்ட் கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும். ஆகவே, அவரவர் துணிகளை துவைக்க தனித்தனியாக சோப்புகளைப் பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

சீப்பு: ஒரே வீட்டில் வசிப்பவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரது உடலமைப்பும் வெவ்வேறானது. எனவே, தலைக்குப் பயன்படுத்தும் சீப்பை பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் பேன், சிரங்கு, நுண்ணுயிர்க் கிருமிகள் தொற்று உருவாகக் கூடும். சலூன் மற்றும் அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் சீப்புகள் சுத்தமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து பயன்படுத்தவேண்டும். மேலும், பொதுவாக அனைவருமே தாங்கள் பயன்படுத்தும் சீப்புகளை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது கிருமிநாசினி சோப்புகளில் ஊறவைத்து சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது. 

சோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா?

டவல்: குளித்ததும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தும் டவலில் என்ன இருக்கப்போகிறது என்று சிலர் அலட்சியமாகக் கருதுவதுண்டு. ஆனால் ஒரே டவலை பலர் பயன்படுத்தினால் அதில் நாள்கணக்கில், மாதக்கணக்கில்கூட நுண்ணுயிர்க் கிருமிகள் தங்கிவிடும். இதனால் உடலில் கொப்பளங்கள் உண்டாகி அரிப்பை ஏற்படுத்தும். எனவே, வாரத்துக்கு இரண்டுமுறை டவலை நன்றாகத் துவைத்து, வெயிலில் காய வைத்துப் பயன்படுத்தவேண்டும். ஒரே குடும்பத்தினராக இருந்தாலும்கூட தனித்தனி டவல்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது. 

ரேஷர்: ஷேவிங் ரேஷர்களால் மருக்கள், அழற்சி, நமைச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படலாம். தனிப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் பிளேடை இரண்டு முதல் நான்கு தடவை பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தாமலிருப்பது நல்லது. எக்காரணம் கொண்டும் ஒருவர் பயன்படுத்திய ரேசரை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது. 

சோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா?

உள்ளாடைகள்: உள்ளாடைகளில் வியர்வை படியும் என்பதால், ஒருவர் பயன்படுத்திய உள்ளாடையை வேறொருவர் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் தோல் நோய்கள், ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்தும். என்னதான் துவைத்துப் பயன்படுத்தினாலும் நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் பயன்படுத்தாமலிருப்பதே நல்லது. 

சோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா?

ஸ்போர்ட்ஸ் பேட்:  விளையாடும்போது பயன்படுத்தும் ஸ்போர்ட்ஸ் பேட்களை அவரவர்க்கென தனித்தனியாக வைத்திருந்து பயன்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பேட் (Pad)-களைப் பகிர்ந்துகொள்வதால் நமைச்சல் ஏற்படுவதுடன் உடலின் மறைவான பகுதிகள் பாதிக்கப்பட்டு நலக்கோளாறுகள் ஏற்படலாம். 

அழகு சாதனங்கள்: ஐபுரோ திரெட் (EyeBrow Thread), உதட்டுச்சாயம் (Lipsticks), பவுடர் ப்ரஷ், ஐ லைனர் போன்ற சாதனங்களைக் கண்டிப்பாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது. ஏனென்றால் பருக்கள், வீக்கம், அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். 

உணவகங்கள், மருத்துவமனைகள், பேருந்துகள், ரயில்கள் போன்ற இடங்களில் உள்ள கிருமிகள் எந்த சிகிச்சைகளாலும் கட்டுப்படுத்த முடியாதவை. எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி கூடுமானவரை பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்'' என்கிறார் கவிதா.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு