Published:Updated:

ஐபேட் கவருக்குள் நுழைந்த வௌவால்! - ரேபிஸ் நோயைக் கொடுத்துச்சென்ற பரிதாபம்

ஐபேட் கவருக்குள் நுழைந்த வௌவால்! - ரேபிஸ் நோயைக் கொடுத்துச்சென்ற பரிதாபம்
ஐபேட் கவருக்குள் நுழைந்த வௌவால்! - ரேபிஸ் நோயைக் கொடுத்துச்சென்ற பரிதாபம்

ஐபேட் கவருக்குள் நுழைந்த வௌவால்! - ரேபிஸ் நோயைக் கொடுத்துச்சென்ற பரிதாபம்

ப்பிள் ஐபேட் டேப்ளெட்டின் பின்பக்க கவரில் நுழைந்து, மறைந்திருந்த வௌவாலால் ரேபிஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த முதியவர். தற்போது அவர் மருத்துவமனையில் அதிதீவிரமாகச் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அமெரிக்காவின் ஹாம்ப்ஷைர் பகுதியைச் சேர்ந்தவர் ராய் சிவெர்ட்சன். இவருக்கு 81 வயதாகிறது. தனக்கு வரும் ஓய்வூதியத்தைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார் ராய். மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த அவருக்குப் பெரும் பிரச்னையைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது அவரது வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்த வௌவால் ஒன்று. 

ஐபேட் கவருக்குள் நுழைந்த வௌவால்! - ரேபிஸ் நோயைக் கொடுத்துச்சென்ற பரிதாபம்

PC : news.sky.com - Lucia Binding

சில தினங்களுக்கு முன்பு, ராய் தினமும் பயன்படுத்தும் ஆப்பிள் டேப்ளெட்டுக்கும் அதன் பின்பக்க கவருக்கும் இடையில் வௌவால் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்தார். அந்த வௌவால் தன்னைத் தானே விடுவித்துக்கொள்ளும் என்று நினைத்த ராய் நீண்ட நேரம் காத்திருந்தார். ஆனால், அது வெளியே வரவில்லை. அது சிரமத்தில் இருப்பதைக் கண்டுபிடித்த ராய் பொறுமையாக அதை விடுவித்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். அடுத்த நாள் காலையில் சென்று பார்க்கும்போதும் அவர் விட்டுச் சென்ற அதே இடத்திலேயே அந்த வௌவால் உயிருடன் கிடந்தது. பறந்துபோய்விடும் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி. ஆனால் அந்த வௌவால் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. அதற்குப் பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டார்.

அதற்குப் பிறகுதான் ராய்க்கு பலவித பிரச்னைகள் தேடிவந்தன. தீராத தலைவலி, காய்ச்சல், அசௌகரியம், பலவீனம் என எச்சில்கூட விழுங்க முடியாத அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டார். உடனே அவசர உதவி மையத்தைத் தொடர்புகொண்டார். மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் அவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசிகள் போடப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் ராய். 

ஐபேட் கவருக்குள் நுழைந்த வௌவால்! - ரேபிஸ் நோயைக் கொடுத்துச்சென்ற பரிதாபம்

PC : news.sky.com - Lucia Binding

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராய், “என் வீட்டுக்குள் இந்த வௌவால் எப்படி வந்ததென்றே தெரியவில்லை. அதுவும், டேப்ளெட் கவருக்குள் எப்படி நுழைந்தது என்பது புதிராகவே இருக்கிறது. இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பாக வருகிறது. அந்த வௌவால் என்னுடைய பாஸ்வோர்டையும் தெரிந்து வைத்திருக்கும். இது, கேட்பதற்கு இப்போது வேண்டுமானால் ஜோக்காக இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்துக்கு இது ஜோக்காகவே இருக்காது”என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். 

நல்லவேளையாக உடனடியாக ரேபிஸ் வைரஸ் தாக்குதலுக்கான சிகிச்சை பெறத்தொடங்கிவிட்டார் ராய். சிகிச்சை பெறாவிட்டால் நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட்டு மரணம் வரை ஏற்படும் அபாயமும் இருக்கிறது. 

பொதுவாக ரேபிஸ் வைரஸ் தொற்றானது நாய், வௌவால், ஓநாய், ரக்கூன் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவும் தன்மையுடையது. ரேபிஸ் வைரஸ் பாதித்த விலங்கு மனிதனைக் கடிக்கவேண்டும் என்பதில்லை. அதன் எச்சில்பட்டாலும் தொட்டாலும் கூட ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு