Published:Updated:

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit
இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

"இந்தப் பாலின வழிகாட்டி மையத்தின் சிறப்பே, மேற்கண்ட மருத்துவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பார்கள். ஒவ்வொரு இடத்துக்கும் தனியாக அலையவேண்டியதில்லை. இதற்கு, முன்பெல்லாம் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக அலைந்து பரிசோதனைகள் செய்யவேண்டியிருக்கும். இனி அதற்கு அவசியமில்லை."

"நான்  நாடாளுமன்றத்தை அலங்கரிக்க வரவில்லை. தாய்லாந்தில் புதிய அரசியல் வரலாற்றை எழுத வந்துள்ளேன். என்னை நான் இங்கு நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனக்கு எம்.பி சீட்டு கிடைத்தபோது, பலர் என்னை கேலிப்பொருளாகத்தான் பார்த்தார்கள். நாடாளுமன்றத்தில் பொழுதைப் போக்குவதற்கு நான் வருவதாக சிலர் நினைத்தார்கள். நான் இங்கு பொழுதுபோக்க வரவில்லை. என்னை மக்கள் தேர்ந்தெடுத்ததால் வந்துள்ளேன். நானும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சமமான நபர்தான்'' - தாய்லாந்தில் மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி-யாகத் தேர்வாகியுள்ள  திருநங்கை,  'தான்வரின் சுக்ஹாபிசிட்' பேசிய வார்த்தைகள் இவை.

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

'தான்வரின்' மட்டுமல்ல, எந்தவொரு திருநங்கையும் மற்றவர்களைப் போல் சமூகத்தில் சமத்துவத்துடன் வாழவே விரும்புகின்றனர். ஆனால், சமூகம் அவர்களை அங்கீகரிக்க மறுக்கிறது. வாழ்க்கை முழுவதும் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்கான அறுவை சிகிச்சைக்கு பணம் சேர்ப்பதற்காகப் போராட வேண்டியிருக்கிறது. மனத்தளவில் தன்னைப் பெண்ணாக உணர ஆரம்பித்துவிட்ட ஒரு திருநங்கைக்கு, எப்படியாவது அறுவைசிகிச்சை செய்து உடலளவிலும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது. தங்களின் ஆசையை வீட்டிலும் சொல்ல முடியாது, அப்படியே சொன்னாலும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் புறக்கணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். வீட்டிலேயே இந்த நிலை என்றால், சமூகத்தில் சொல்லவே வேண்டாம். வேறுவழியின்றி, வீட்டைவிட்டு வெளியேறவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். தங்களைப் போன்ற திருநங்கைகளுடன் சேருகிறார்கள். அறுவைசிகிச்சை செய்துகொள்வதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். வேலை வாய்ப்புகளில் புறக்கணிப்படுவதால், பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது எனத் தவறான பாதைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

அவர்களின் இந்த அவலநிலையை மாற்றுவதற்கு அரசும் சின்னச் சின்ன முயற்சிகளை எடுத்துவருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில முக்கியமான அரசு மருத்துவமனைகளில், இலவசமாக அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கென 'பாலின வழிகாட்டி மையம்' என்ற பெயரில் பிரத்யேக பன்னோக்கு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் வகையில் இந்தப் பிரிவு செயல்படுகிறது. இதன் செயல்பாடுகளை அறிந்துகொள்ள, முதல் நாளான நேற்று நேரில் சென்றோம். ரேஷ்மா, உதயலட்சுமி, பிரபாவதி, சுரேகா ஆகிய நான்கு திருநங்கைகள், மருத்துவரின் ஆலோசனைக்காகக் காத்திருந்தார்கள். அவர்களிடம் பேசினோம்,

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

''நாங்க காஞ்சிபுரத்துல இருந்து வர்றோம். திருநங்கைகளுக்கு தனியா ட்ரீட்மென்ட் தர்றதா டி.வி-யில பார்த்தோம். அறுவைசிகிச்சை செய்றத பத்தி விசாரிக்க வந்தோம். திருநங்கைகளுக்காக தனியா இப்படி ஒரு பிரிவு ஆரம்பிச்சிருக்கிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். காஞ்சிபுரத்துல மட்டும் அம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்காங்க. அவங்ககிட்ட இந்த சிகிச்சை மையத்தைப் பற்றி சொல்லுவோம்'' என்றார்கள்.

இந்த சிகிச்சை மையத்தின் பொறுப்பாளரான ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ஒட்டுறுப்புத்துறை தலைவர் ஜெகன்மோகனிடம் பேசினோம்.

''திருநங்கைகளுக்கான அறுவைசிகிச்சை செய்வதற்குப் பல  வழிமுறைகள் இருக்கின்றன. முதலில் அறுவைசிகிச்சை செய்துகொள்ள அவர்கள் மனத்தளவில் தயாராகிவிட்டார்களா என்பதை மனநல மருத்துவர் பரிசோதிக்க வேண்டும். அவர், சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி முழுமனதாகச் சம்மதிக்கும் பட்சத்தில்தான் அறுவைசிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்குவோம். சட்ட ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க, நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் அனுமதி பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து, ஆணாக இருந்து பெண்ணாக, பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கான அடிப்படையான ஹார்மோன் சிகிச்சைகளைத் தொடங்குவோம். அந்த சிகிச்சையை நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவர் வழங்குவார். ஒரு வருட காலத்துக்கு, மாற விரும்பும் பாலினத்தவர்களின் உடையை அணிந்து வாழ வேண்டும். அதற்குப் பிறகும், தன் பாலினத்தை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லாதபட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவோம்.

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

அடுத்ததாக, லேசர் சிகிச்சைமூலம் முடிகளை அகற்றுவதற்கான சிகிச்சைகளைத் தோல் மருத்துவர் மேற்கொள்வார். அவர்களின் உடல் உறுப்புகளில் தொற்றுப் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்பதை பாலியல் நோய் மருத்துவர் பரிசோதனை செய்வார். அறுவைசிகிச்சை

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

செய்வதற்கு உடல்நிலை தயாராக இருக்கிறதா என்பதை ஒரு பொதுநல மருத்துவர் பரிசோதனை செய்வார். இறுதியாக, பிளாஸ்டிக் சர்ஜன், மகளிர் நல மருத்துவரின் ஆலோசனையோடு அறுவைசிகிச்சையை  மேற்கொள்வார். அறுவைசிகிச்சை முடிந்ததும், சிறுநீரகம் சம்பந்தமான சோதனைகள் செய்யவேண்டியது அவசியம். அதனை சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் மேற்கொள்வார். அறுவைசிகிச்சை செய்தால், உடலளவில் மட்டும்தான் மாற்றம் ஏற்படும். அவர்களின் குரல் அப்படியேதான் இருக்கும். குரல்வளத்தை மாற்றுவதற்கான சிகிச்சைகளை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மேற்கொள்வார். 

இந்தப் பாலின வழிகாட்டி மையத்தின்  சிறப்பே, மேற்கண்ட மருத்துவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பார்கள். ஒவ்வொரு இடத்துக்கும் தனியாக அலையவேண்டியதில்லை. இதற்கு, முன்பெல்லாம் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக அலைந்து பரிசோதனைகள் செய்யவேண்டியிருக்கும். இனி அதற்கு அவசியமில்லை. நோட்டரி பப்ளிக்கிடம் சான்றிதழ் வாங்குவதற்கும், மருத்துவமனையின் சார்பாக சமூக ஆர்வலர்களை நியமிக்க இருக்கிறோம். அவர்கள், சான்றிதழ் வாங்க உதவி செய்வார்கள்'' என்றார்.

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

''இந்த மையத்துக்கு, முதற்கட்டமாக 15 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாக கிளினிக் தொடங்கியுள்ளோம். இன்னும் ஒன்றரை கோடி ருபாய் தேவை என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அதன்மூலம் சிறப்பு வார்டு வசதி, நவீன அறுவைசிகிச்சை உபகரணங்கள், ஆபரேஷன் தியேட்டர் உபகரணங்கள், வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நிச்சயம் செய்து தருவதாக ஒப்புதல் அளித்துள்ளார்கள். இதன்மூலம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை தரமுடியும் என நம்புகிறோம். அவர்களும் மற்றவர்களைப்போல, சமூகத்தில் சமத்துவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதற்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்கிறோம்'' என்கிறார், இந்த மருத்துவமனையின் டீன் ஜெயந்தி.

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள, பாலின வழிகாட்டி மையம் குறித்து சமூக ஆர்வலர் திருநங்கை கிரேஸ் பானுவிடம் பேசினோம்,

இனி, திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்வது ஈஸி... ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு! #SpotVisit

''அரசின் இந்தப் புதிய மையத்தை நாங்கள் வரவேற்கிறோம். மருத்துமனையில் அங்குமிங்கும் அலையவேண்டிய அவசியமிருக்காது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். அதேவேளை, தரமான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. பயிற்சிபெற்ற, அனுபவம் வாய்ந்த பிளாஸ்டிக் சர்ஜன்கள் செய்தால் மட்டுமே இது போன்ற அறுவைசிகிச்சைகளை சிறப்பான முறையில் செய்யமுடியும். அனுபவம் இல்லாதவர்கள், முறையான பயிற்சி பெறாதவர்கள் செய்தால், நாங்கள் காலம் முழுவதும் வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதை மட்டும் அரசு முறையாகக் கண்காணித்தால், இந்தப் புதிய மையம் நிச்சயமாக திருநர் சமூகத்துக்கு  உதவிகரமாக இருக்கும்'', என்கிறார் கிரேஸ் பானு.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு