Published:Updated:

தங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri

தங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri
தங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri

அண்ணன் சாய்க்கு, தங்கை ஸ்ரீ என்றால் உயிர். அவள் பிறந்தபோது பெற்றோரைவிட மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தவன் சாய். அழும்போது, தங்கையை அழவேண்டாம் என்று சொல்லுங்கள் என தானும் உடன் அழுவான் சாய். பிறந்த தங்கையை விட்டுப்பிரிய மனமில்லாமல் பல நாட்கள் பள்ளிக்குப் போனதில்லை. வளர..வளர.. பள்ளிக்குத் தங்கையுடன் செல்வது, மாலையில் அவளுடன் விளையாடுவது என அவளைவிட்டுப் பிரியாமல் இருந்தான் சாய். 

தங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri

ஸ்ரீக்கு நான்கு வயதாகி இருந்தது. தனது சகோதரனுடன் விளையாடுவதை நிறுத்தினாள். அவளின் உடல்நலம்தொடர்ந்து பாதிப்படைந்துகொண்டே இருந்தது. போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அருகிலுள்ள பல கிளினிக்குகளுக்கு ஸ்ரீயை அழைத்துச் சென்றனர் அவளது பெற்றோர். ஆனால் எதிலும் ஸ்ரீ-யின் உடல்நலம் குணமாகவில்லை. இதனால் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து ஸ்ரீ-யின் தந்தை பணம் பெற்றுக்கொண்டு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

இரண்டு மணிநேரத்துக்கும் மேலான பரிசோதனைக்குப் பிறகு ஸ்ரீ, Fanconi Anemia (எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் பாதிப்பு), Congenital Bone Marrow Failure (குறைந்த ரத்த அணுக்கள்)-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் பின், ஸ்ரீ-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கான பணத்திற்காக நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் இருந்து பெற்றதைவைத்து ஸ்ரீ-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தங்கையைப் பிரியாமல் எப்போதும் ஆவலுடன் சாய் இருந்தான். சில நாட்களில் ஸ்ரீ-யின் உடல்நலம் தேறிவந்ததை நினைத்து அவளின் பெற்றோர் மகிழ்வடைந்தனர். 

தங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri

ஆனால் கடந்த மாதம் ஸ்ரீ-யின் உடல்நலம் மீண்டும் குன்றத்தொடங்கியது. ஒருநாள் சாயுடன் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீ-யின் மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி, மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டாள். இதனால் பயந்துபோன சாய், உடனே பெற்றோரை அழைத்துவர, மருத்துவமனைக்கு ஸ்ரீ அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு மருத்துவர்கள் ஸ்ரீ-யின் உடல்நலத்தை சரிசெய்ய ஸ்டெம் செல்கள் மாற்றப்பட (Allogeneic Stem Cell Transplantation) வேண்டும். அவளைக் காப்பாற்ற இருக்கும் ஒரேவழியும் அதுதான் என்றனர். 

இதைக் கேட்ட அதிர்ச்சியில் இருந்த ஸ்ரீ-யின் பெற்றோருக்கு இருந்த ஒரே ஆறுதல், ஸ்ரீ-க்கு எலும்பு மஜ்ஜையை தானம் செய்ய அவளது சகோதரனின் செல்கள் ஒத்துப்போனதுதான். இருப்பினும் எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்கு தேவையான ரூபாய் இருபது லட்சத்தை எவ்வாறு புரட்டுவது என்ற கவலை அவர்களை உறங்கவிடவில்லை. "அந்த நேரம் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தோம். அவ்வளவு பெரிய தொகைக்கு நாங்கள் எங்கே போவோம்" என்பதே ஸ்ரீ-யின் தாயாரது கேள்வி. 

தங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri

மருத்துவமனையில் ஸ்ரீ-க்கு போடப்படும் பெரிய ஊசியைப் பார்த்து சாய் அழுவான். தங்களுக்கு சொந்தமாக இருந்த ஒரே நிலத்தையும் இவர்கள் விற்றுவிட்டனர். இப்போது எங்களிடம் சேமிப்பு என்பது ஒன்றுமில்லை. என்மகளைக் காப்பாற்றமுடியாமல் தகுதியற்று இருக்கிறேன் என்று ஒவ்வொரு நாளும் மகளுக்காக சாப்பிடாமல்கூட இரவுபகலாக உழைத்து வருகிறார் ஸ்ரீ-யின் தந்தை. "ஸ்ரீ, எப்போது வீட்டிற்கு வருவாள் என்கிற சாயின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை" என்று மனவேதனையுடன் ஸ்ரீ-யை நினைத்து அழுகிறார் தாய். 

நிதி திரட்டும் இணையதளமான 'Ketto' ஸ்ரீ-க்கு உதவ முன்வந்துள்ளது. கெட்டோவுடன் நமது உதவிக் கரங்களையும் இணைத்தால் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கையை ஸ்ரீ-யின் பெற்றோருக்கு மட்டுமின்றி அவள் மீது ஈடற்ற அன்பு வைத்திருக்கும் சாய்க்கும் நம்மால் கொடுக்கமுடிந்தால், அதற்கு ஈடு இணையே இல்லை. ஸ்ரீ-க்கு உதவ நினைக்கும் அத்தனை நல்லுள்ளங்களும் https://www.ketto.org/stories/helpsiri?utm_campaign=helpsiri&utm_medium=position_1&utm_source=external_vikatan இந்த லிங்கிற்குச் சென்று உதவலாம்!

தங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

பின் செல்ல