Published:Updated:

`முதியோரை மதியுங்கள்... கொண்டாடுங்கள்’ - முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின பகிர்வு!

`முதியோரை மதியுங்கள்... கொண்டாடுங்கள்’ - முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின பகிர்வு!
`முதியோரை மதியுங்கள்... கொண்டாடுங்கள்’ - முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின பகிர்வு!

குழந்தைகளை தெய்வத்துக்கு நிகரானவர்கள் என்பார்கள். அதேபோல் முதியோரை அந்தக் குழந்தைகளுக்கு நிகராகச் சொல்வார்கள். குழந்தைப்பருவம்போல முதுமைப் பருவமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் முதியோரை எதற்கும் உதவாதவர்களாகவே பார்க்கின்றனர். அவர்களை அரவணைத்துப் பாதுகாக்காமல், புறக்கணித்து ஓரங்கட்டுகின்றனர். அதிலும் முதியோர் நோய்வாய்ப்பட நேர்ந்தால் அது இன்னும் கொடுமையானது. இத்தகைய போக்குகள் மாற்றப்பட வேண்டும். 

`முதியோரை மதியுங்கள்... கொண்டாடுங்கள்’ - முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின பகிர்வு!

உலக சுகாதார நிறுவனம், முதியோரைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும்விதமாக ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதியை முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது. இந்தத் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் காலை வணக்கக் கூட்டங்களில் `முதியோரை மதிப்போம்’ என்கிற தலைப்பில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்குக் காரணமாக இருந்தவர் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன். 

“முதியோரை அவமதிப்பதில் பலவகை உண்டு. அவர்கள் மனதளவிலும் பேச்சளவிலும் உடலளவிலும் மற்றும் நிதி சார்ந்த அளவிலும் துன்புறுத்தப்படுவார்கள். முதியோருக்குத் தேவையானவற்றைக் கொடுக்காமல் இருப்பது, அவர்களுக்கான நேரத்தை ஒதுக்காதது போன்றவை முதுமையில் தனிமையை அனுபவிப்பதற்கான காரணங்களில் முக்கியமானவை. இந்தப் பிரச்னைக்கான தீர்வு வீட்டுக்கு வெளியே இல்லை, நம்மிடம்தான் உள்ளது” என்று சொல்லும் மருத்துவர் வி.எஸ்.நடராஜன், முதியோர் அவமதிக்கப்பட்டால் அதை எப்படித் தடுக்கலாம் என்பது குறித்தும் பேசினார்.

`முதியோரை மதியுங்கள்... கொண்டாடுங்கள்’ - முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின பகிர்வு!

“முதியோர் மீதான பார்வையை இளைஞர்கள் மாற்ற வேண்டும். முதியோர் உண்மையான அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவற்றைக் கொடுக்க இளைஞர்கள் முன் வர வேண்டும். அதற்குமுன் அவை தங்களது கடமை என்பதை உணர வேண்டியது அவசியம். இதற்காக முதியோர் விழிப்புணர்வு கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டியது அவசியம். முதியோரை எப்படி மதிக்க வேண்டும் என்பது தொடர்பாகக் கட்டுரைகளை ஐந்தாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடநூலில் இடம்பெறச் செய்ய வேண்டும். இதற்கு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

`முதியோரை மதியுங்கள்... கொண்டாடுங்கள்’ - முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின பகிர்வு!

வேலையில்லாமல் இருப்பவர்கள், மது அருந்துபவர்கள், நிதி வசதி இல்லாமல் இருப்போர், வீட்டில் இடநெருக்கடி உள்ளவர்கள், மனச்சோர்வுக்கு ஆளானவர்களைக் கண்டறிய வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உளவியல் நிபுணர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி ஆலோசனை வழங்க வேண்டும். 

அதேபோல முதியோருக்கும் சில கடமைகள் உள்ளன. முதியோர் தங்களது சொந்தக்காலில் நிற்க முயல வேண்டும். காலமுறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். முதுமைக்காலங்களில் கட்டாய சேமிப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். தன்னால் முடிந்த அளவு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும். தகுந்த நேரத்தில் உயில் எழுதிவைக்க வேண்டியது முக்கியமானது” என்றார். 

`முதியோரை மதியுங்கள்... கொண்டாடுங்கள்’ - முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின பகிர்வு!

டாக்டர் வி.எஸ்.நடராஜன், தனது முதியோர் நல அறக்கட்டளை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இன்று காலை 8.30 மணிக்கு சென்னை, தியாகராயர்நகரில் உள்ள வித்யோதயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் லீனா வெஸ்லி, சமூக நலத்துறை ஆணையர் வி.அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Vikatan