Published:Updated:

தண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்!

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், தண்ணீர்ப் பற்றாக்குறையின் காரணமாக, அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படுவதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்!

நாடு முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. போதிய மழை இல்லாததால் நாளுக்கு நாள் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மற்ற ஊர்களைக் காட்டிலும், சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குடம் நீருக்கே மக்கள் பல கி.மீட்டர் தொலைவுக்கு அலைய வேண்டியிருக்கிறது. ஹோட்டல்கள் முதலான நீரை மூலதனமாகக் கொண்ட பல வணிக நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஐ.டி கம்பெனிகள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்துகிறது. இந்த நீர் நெருக்கடிக்கு மருத்துவமனைகளும் தப்பவில்லை.

இதுகுறித்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் இயக்குநர் பேசுகையில்,

``எங்கள் மருத்துவமனையில் பொதுவாக நாளொன்றுக்கு 25 முதல் 30 அறுவை சிகிச்சைகள் செய்வோம். கடந்த சில நாள்களாக, தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக நாளொன்றுக்கு 15 முதல் 18 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்ய முடிகிறது. அவசர தேவையாக இருப்பவர்களுக்கு மட்டும் தற்போது அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.  

தண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்!

ஆபரேஷன் தியேட்டர் சுத்தப்படுத்துவது, மருத்துவக் கருவிகளை சுத்தப்படுத்துவது, மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளிகளுக்குத் தண்ணீர் கொடுப்பது என ஏராளமான அளவுக்குத் தண்ணீர் செலவாகிறது. லாரிகளில் கிடைக்கும் தண்ணீரை வைத்துத்தான் இவ்வளவு நாள் சமாளித்து வந்தோம். தற்போது லாரி நீரும் சரியாகக் கிடைப்பதில்லை. இனிவரும் நாள்களில் என்ன செய்வது எனத் தெரியவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமாவது போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் அவர்.