Published:Updated:

3 பை நிறைய பணம்... உயிருக்குப் போராடிய மனிதர்கள்... நெகிழவைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! #FeelGoodStory

3 பை நிறைய பணம்... உயிருக்குப் போராடிய மனிதர்கள்... நெகிழவைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! #FeelGoodStory

இதைக் கேள்விப்பட்டு நிறைய பேர் எங்களைப் பாராட்டினாங்க. நாங்க எங்க வேலையைத்தான் செஞ்சிருக்கோம். ரெண்டு உயிரைக் காப்பாத்துறதுதான் அப்போதைக்கு எங்க வேலை. மத்தவங்களுக்கு ஏதாவது உருப்படியாச் செய்யணும்னுதான் இந்த வேலைக்கே வந்தேன்

னிதர்கள் விபத்தில் சிக்கிக்கொள்வது துயரமென்றால், அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி சிக்கியவரின் உடைமைகளைத் திருடிச் செல்வது மேலும் துயரம். உயிருக்குப் போராடும் மனிதர்களைக் கவனிக்காமல் சிதறிக்கிடக்கும் பொருள்களையும் பணத்தையும் அபகரிக்க நினைக்கும் இரக்கமற்ற மனிதர்கள் வாழும் உலகில்தான், தம் கைகளுக்கிடைத்த 69 லட்சம் ரூபாயைப் பத்திரப்படுத்தி உரியவர்கள் கைகளில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவர். 

3 பை நிறைய பணம்... உயிருக்குப் போராடிய மனிதர்கள்... நெகிழவைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! #FeelGoodStory

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள ஓர் இரும்புக் கடையில் பணியாற்றி வருகிறார்கள் பாலாஜி- முரளி சகோதரர்கள். இவர்கள் மாதமொருமுறை ஒவ்வோர் ஊராகச் சென்று தாங்கள் பணியாற்றும் கடைக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்து வருவது வழக்கம். அப்படிக் கடந்த சனிக்கிழமை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்குச் சென்று தாங்கள் வசூலித்த தொகையான 69 லட்சத்துடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஞ்சிபுரத்திற்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, அவர்கள் வந்த காரின் சக்கரம் வெடித்து வாகனம் விபத்துக்குள்ளானது. காரில் வந்தமுரளி அதிக ரத்தப்போக்கின் காரணமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். வாகனத்தை ஓட்டிய சரவணனும் முரளியின் சகோதரரான பாலாஜியும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதைக் கவனித்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புன்ஸுக்கு போன் செய்திருக்கிறார்கள். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தது ஆம்புலன்ஸ். அதிலிருந்த தொழில்நுட்பப் பணியாளர் விஜயகுமாரும் ஓட்டுநர் சந்தானமும் காயமடைந்தவர்களுக்கு முதலுதவிகள் அளித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 

3 பை நிறைய பணம்... உயிருக்குப் போராடிய மனிதர்கள்... நெகிழவைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! #FeelGoodStory

அதுமட்டுமன்றி, விபத்தின் காரணமாக காரில் சிதறிக்கிடந்த 69 லட்சம் பணத்தையும் சேகரித்துப் பத்திரப்படுத்தி உரியவர்களிடம் சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் இந்தச் செயலுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சந்தானத்துக்கு வயது 32. காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் வசித்து வருகிறார். விவசாயக் குடும்பம். ப்ளஸ் டூ படித்திருக்கிறார். ஐந்து வருடங்களாக 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநராக இருக்கிறார். மனைவி எலிசபெத், இல்லத்தரசி. மகன் லிங்கேஸ்வரன் ஆறாம் வகுப்பும், மகள் தர்ஷினி ஐந்தாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். சந்தானம் இந்தப் பணிக்கு வந்தபிறகுதான் ஓரளவுக்கு வறுமை விலகியிருக்கிறது. 

மருத்துவ உதவியாளர் விஜயகுமாருக்கு வயது 23. தந்தை மீனவர். வாலாஜவை அடுத்த சின்னிவாக்கத்தைச் சேர்ந்தவர். தாய், தந்தை மற்றும் இரண்டு தம்பிகளுடன் வசிக்கிறார். பயோ கெமிஸ்ட்ரி படித்துவிட்டு, தொழில்நுட்பப் பணியாளராக 108 ஆம்புலன்ஸில் பணியாற்றுகிறார். விஜயகுமாரின் வருமானம்தான் குடும்பத்துக்கு முக்கிய ஆதாரம். 

3 பை நிறைய பணம்... உயிருக்குப் போராடிய மனிதர்கள்... நெகிழவைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! #FeelGoodStory

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சந்தானத்திடம் பேசினோம்,

``கடந்த சனிக்கிழமை சாயங்காலம் சின்னசத்திரத்துல கார் ஒண்ணு விபத்துக்குள்ளாகி மூணு பேர் உயிருக்குப் போராடிட்டு இருக்காங்கன்னு அழைப்பு வந்துச்சு. பொதுமக்கள்தான் போன் பண்ணியிருந்தாங்க. நாங்க அப்ப ராஜகுலம்ங்கிற இடத்துல இருந்தோம். அழைப்பு வந்த நாலு நிமிஷத்துல சம்பவ இடத்துக்குப் போயிட்டோம். ஒருவர் அங்கேயே இறந்துட்டார். மற்ற ரெண்டு பேரும் படுகாயத்தோட இருந்தாங்க. அவங்களை உடனடியா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில சேர்த்தோம். அவங்க வந்த காருக்குள்ள பணம் சிதறிக் கிடந்துச்சு. அதையெல்லாம் சேகரிச்சு பத்திரமா எடுத்துட்டு வந்தோம். பணம் இருந்த விவரத்தை எங்க மேலதிகாரிக்குச் சொன்னோம். அவர் வந்து காவல்துறை அதிகாரிகள்கிட்ட பணத்தை ஒப்படைச்சுட்டார்.

இதைக் கேள்விப்பட்டு நிறைய பேர் எங்களைப் பாராட்டினாங்க. நாங்க எங்க வேலையைத்தான் செஞ்சிருக்கோம். ரெண்டு உயிரைக் காப்பாத்துறதுதான் அப்போதைக்கு எங்க வேலை. மத்தவங்களுக்கு ஏதாவது உருப்படியாச் செய்யணும்னுதான் இந்த வேலைக்கே வந்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு உயிரைக் காப்பாத்தும்போது கிடைக்கிற திருப்திக்கு ஈடு இணையே இல்ல. அந்தத் திருப்தி ரொம்பப் பெரிசு'' என்கிறார் அவர்.

3 பை நிறைய பணம்... உயிருக்குப் போராடிய மனிதர்கள்... நெகிழவைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! #FeelGoodStory

108 ஆம்புலன்ஸ் சேவையின் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வமணியிடம் பேசினோம்,

``யாராவது விபத்துல சிக்கிட்டா, அவங்களோட உடைமைகளை எடுத்துட்டு வந்து பத்திரப்படுத்தி வெச்சிருப்போம். பணமோ, விலை அதிகமான பொருள்களோ இருந்தா காவல்துறை அதிகாரிகள்கிட்ட ஒப்படைச்சிடுவோம். சின்ன பொருள்களா இருந்தா மருத்துவமனை பொறுப்பாளர்கள்கிட்டயே கொடுத்து, `பிராபர்ட்டி ஃபார்ம்'ல கையொப்பம் வாங்கிக்குவோம். 

இந்தச் சம்பவத்துல, மூணு பை நிறையா பணம் இருக்குன்னு எனக்குத் தகவல் வந்தது. உடனடியா நான் மருத்துவமனைக்குப் போயிட்டேன். அங்கிருந்து எஸ்.பி அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்தோம். அவங்க வந்ததும் பணத்தை முழுமையா எண்ணி ஒப்படைச்சுட்டோம்.
உடைமைகளைப் பத்திரப்படுத்துறது எங்க கடமையா இருந்தாலும் இந்த சம்பவத்துல சந்தானமும், விஜயகுமாரும் ரொம்ப நேர்மையா செயல்பட்டிருக்காங்க. எங்க துறை சார்பா அவங்க ரெண்டு பேரையும் கௌரவிக்க ஏற்பாடு செஞ்சிருக்கோம்'' என்றார் அவர். 
மனிதம் இன்னும் இந்த உலகில் வாழ்கிறது என்பதை விஜயகுமார், சந்தானம் போன்ற எளியமக்கள்தான் அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்..!