Published:Updated:

கேரளாவிலிருந்து கடலூருக்கு வந்தார்! - நிபா வைரஸ் அறிகுறியுடன் ஜிப்மரில் ஒருவர் அனுமதி

நிபா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவிலிருந்து கடலூருக்கு வந்தார்! - நிபா வைரஸ் அறிகுறியுடன் ஜிப்மரில் ஒருவர் அனுமதி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ராமலிங்கம். கேரளாவில் பணியாற்றிவந்த அவருக்கு, சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான காய்ச்சலால் சொந்த ஊருக்குத் திரும்பியவர், காட்டுமன்னார்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்தார். அதனைத் தொடர்ந்து, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதனடிப்படையில், அவரை உடனே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர்.

கேரளாவிலிருந்து கடலூருக்கு வந்தார்! - நிபா வைரஸ் அறிகுறியுடன் ஜிப்மரில் ஒருவர் அனுமதி

உடனே ராமலிங்கத்தை ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரிக்கு அழைத்துவந்த உறவினர்கள், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை தனிப் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், ராமலிங்கத்தின் ரத்த மாதிரியை புனே மத்திய சோதனை மையத்திற்கு அனுப்புவதற்குத் தயாராகிவருகின்றனர். அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னரே அவருக்கு நிபா வைரஸ் தாக்கியது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும்.

கடந்த வாரம் கேரளாவில் பணிபுரிந்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இதே அறிகுறிகளுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், பின்னர் அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு