Published:Updated:

மூன்று வயது குழந்தையை வதைக்கும் மூளை நோய்! #SaveShaker

மூன்று வயது குழந்தையை வதைக்கும் மூளை நோய்! #SaveShaker
மூன்று வயது குழந்தையை வதைக்கும் மூளை நோய்! #SaveShaker

தாய்மை அடைந்த பெண்ணுக்குள் இருக்கும் ஈடில்லா ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. அதேபோன்று தாய்மை அடையக் காரணமாக இருந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றால் அந்த வேதனையைச் சொல்வதென்பது மிகக்கொடுமை. இவ்வாறான கொடுமையான வாழ்க்கையைத்தான் கடந்த சில நாட்களாக வாழ்ந்து வருகின்றனர் ஷாக்கரின் பெற்றோர். மூன்று வயதான ஷாக்கர் மிகுந்த அபாயகரமான மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். ஏமனில் நடந்த போரில் இருந்து தப்பித்து இந்தியாவிற்கு வந்திருக்கும் ஷாக்கரின் பெற்றோர், அவனது உயிரைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர்.

மூன்று வயது குழந்தையை வதைக்கும் மூளை நோய்! #SaveShaker

 "தாய்மை அடைந்த செய்தி கேட்டு புதீனாவும் நானும் மகிழ்ச்சி அடைந்த தருணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது" என்கிறார் புதீனாவின் கணவர் மஹ்மூத். குழந்தை ஆரோக்கியமாக பிறக்க தினமும் அல்லாஹ்விடம் வேண்டுவோம்.ஒன்பது மாதங்களும் மிகவும் அழகாக நகர்ந்தன, குழந்தையைக் காண ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். காத்திருப்பு முடிந்து ஷாக்கர் பிறந்தான். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம். எங்களின் உலகமே அவன்தான்.. அல்லாஹ்வின் விலைமதிப்பற்ற ஆசீர்வாதம் ஷாக்கர்" என்கிறது மஹ்மூத்தின் வலி மிகுந்த குரல். 

பிறந்து சில வாரங்களில் அவனை வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்  ஷாக்கரின் பெற்றோர். அப்போது மருத்துவர், தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் பல சோதனைகளை குழந்தைக்கு எடுத்துப்பார்த்துள்ளார். முடிவில்  ஷாக்கர் Craniosynostosis என்கிற அரியவகை மூளை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பிறக்கும் இரண்டாயிரம் குழந்தைகளில் ஒன்று இந்நோயால் பாதிக்கப்படுகிறது. அதுவும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தான் இந்த நோயால் பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பிறக்கும் குழந்தையின் தலையில் எலும்புகள் தனித்தனியாக இருந்து, பின் வளர வளர ஒன்றுசேர்ந்து மண்டை ஓடாக உருமாறும். ஆனால் சில எலும்புகள் முன்கூட்டியே மூடிக்கொள்வதால் மண்டை ஓடும், மூளையும் சரியான வளர்ச்சியைப் பெறுவதில்லை. தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஷாக்கர் தனது சிறு உடலில் மிகப்பெரிய வலியை உணர்ந்து வருகிறான். மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும்  ஷாக்கரின் பெற்றோரின் வாழ்வு தலைகீழாக மாறிவிட்டது. தங்கள் மகனின் வலி, அழுகை, கதறலில்தான் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றனர். 

மூன்று வயது குழந்தையை வதைக்கும் மூளை நோய்! #SaveShaker

போரினால் பாதிக்கப்பட்ட நாடான ஏமனைச் சேர்ந்தவர் மஹ்மூத். அந்நாட்டில் நடந்த மிகப்பெரும் போர் அவரது வேலையை பறித்துக்கொண்டு, வறுமையில் தள்ளியது. அடிப்படை வசதிகளை பெறக்கூட அங்கு அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு நடுவில் தனது மகனை இக்கடும் நோயினில் இருந்து காப்பாற்றப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டை விற்று இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு மனைவி மற்றும் இரு மகன்களோடு வந்து சேர்ந்தார் மஹ்மூத். 

இந்தியாவுக்கு வந்ததும் தொடர்ந்து மருத்துவமனைக்கு மகனின் சிகிச்சைக்காக சென்று வந்தனர். அவ்வாறு ஒருமுறை செல்லும்போது மருத்துவர்  ஷாக்கரின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக craniosynostosis அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போதுதான் அவனது மூளை இயல்பாக இயங்கும் என்றார். ஆனால் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.9.04 லட்சத்தை ஏற்பாடு செய்வதென்பது மஹ்மூத்திற்கு சுலபமான காரியமில்லை. 

நாளுக்கு நாள்  ஷாக்கரின் உடல்நலம் மோசமாகிக்கொண்டே செல்கிறது. மூளையுடன் கண் பார்வை, காது, மூச்சு, உண்ணுதல், இதயம் உள்ளிட்ட செயல்பாடுகளையும் அவன் இழக்க நேரிடும். வாழ்வுக்கும், இறப்பிற்கும் நடுவே போரடிக் கொண்டிருக்கும்  ஷாக்கரைக் காப்பாற்ற அவனது பெற்றோருக்கு நிதி திரட்டும் இணையதளமான 'KETTO' துணை நிற்கிறது. கெட்டோவுடன் இணைந்து நம்மால் முடிந்த உதவியைச் செய்ய முன்வருவோம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வதுண்டு. தெய்வத்திற்கான காணிக்கையாக நினைத்து இந்தப் பிஞ்சு குழந்தையை காப்பாற்றினால் அதைவிட பேருதவி இவ்வுலகில் இல்லை!

மூன்று வயது குழந்தையை வதைக்கும் மூளை நோய்! #SaveShaker

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.