Published:Updated:

செய்ததையே செய்து கொண்டிருக்கிறாள்!

செய்ததையே செய்து கொண்டிருக்கிறாள்!

செய்ததையே செய்து கொண்டிருக்கிறாள்!

செய்ததையே செய்து கொண்டிருக்கிறாள்!

Published:Updated:

''என் மகள் தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். வீட்டில் இருக்கும் சமயத்தில் படிக்கும்போதும் தூங்கும்போதும் தலையில் உள்ள முடியைப் பிடுங்கி எடுக்கிறாள். இந்தப் பழக்கம் அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கி விட்டது.

நாங்கள் எடுத்துச் சொன்னாலும் கேட்க மறுக்கிறாள். இதனால் அவளுடைய தலையில் ஆங்காங்கே சொட்டையாக, பார்க்கவே அகோரமாக இருக்கிறது. 'என்னால் முடியைப் பிடுங்குவதை நிறுத்த முடியவில்லை' என்கிறாள். கல்யாண வயது நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் என்ன செய்வது?''

சுகன்யா, மனநல ஆலோசகர், பாண்டிச்சேரி:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்ததையே செய்து கொண்டிருக்கிறாள்!

''உங்கள் மகளுக்கு ஏற்பட்டிருப்பது ஓ.சி.டி (Obsessive Compulsive Disorder) எனப்படுகிற மன வியாதி. அதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற கட்டளை மூளையில் பதிந்திருக்கும். அதனால் தொடர்ச்சியாக அந்த விஷயத்தைச் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படியே அதற்கு அடிமையும் ஆகி விடுவார்கள். உதாரணமாக, சிலர் தொடர்ச்சியாக கை கழுவிக் கொண்டே இருப்பார்கள். சிலர் எப்போதும் கண்ணாடி முன்னே நிற்பார்கள்.

சிலர் தங்கள் மீது பிறரின் கவனம் திரும்புவதற்காக எதையாவது செய்வார்கள். உங்கள் மகள்கூட அப்படி செய்ய ஆரம்பித்து, அதுவே இப்படி கைவிட முடியாத பழக்கமாக தொடர்ந்திருக்கலாம்.

உங்கள் குடும்பப் பின்னணி, மகளின் வளர்ப்பு சூழ்நிலை பற்றி நீங்கள் குறிப்பிட வில்லை. அதே போல எந்த சம்பவத்துக்குப் பிறகு அல்லது எந்த நிகழ்வைத் தொடர்ந்து அவள் இப்படிச் செய்கிறாள் என்பதையும் குறிப்பிடவில்லை. எனவே, உங்கள் மகளுக்கு இந்தப் பழக்கம் ஏற்பட்டதற்கான காரணத்தை சரியாக வரையறுக்க இயல வில்லை.

எதுவாக இருந்தாலும் இதற்கு மனரீதியான சிகிச்சை கட்டாயம் தேவை. உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

உங்கள் மகள் அப்படி செய்யும் சமயத்தில் அவருடைய கவனத்தைத் திசை திருப்பும் விதமாக ஏதாவது பேசுங்கள். ஓவியம், இசை போன்ற பிற கலைகளில் அவரது கவனத்தைத் திருப்புங்கள். நிச்சயம் இந்த பழக்கம் குறைந்து, மறைந்து குணமடைவார்.'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism