Published:Updated:

பன்றிக் காய்ச்சல்: ஜோத்பூரில் ஒருவர் பலி

பன்றிக் காய்ச்சல்: ஜோத்பூரில் ஒருவர் பலி

பன்றிக் காய்ச்சல்: ஜோத்பூரில் ஒருவர் பலி

பன்றிக் காய்ச்சல்: ஜோத்பூரில் ஒருவர் பலி

Published:Updated:

ஜோத்பூர், பிப்.15,2011

பன்றிக் காய்ச்சல்: ஜோத்பூரில் ஒருவர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார். இது,  2011-ம் ஆண்டில் இந்தியாவின் பதிவாகியுள்ள முதல் பன்றிக் காய்ச்சல் மரணம் என்பது கவனத்துக்குரியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து ஜோத்பூர் மருத்துவமனையின் மருத்துவர் அரவிந்த் மாத்தூர் கூறுகையில், "ரத்தனாடா பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.சோனி என்பவர் நிமோனியா காய்ச்சல் அறிகுறிகளுடன் கவலைக்கிடமான நிலையில் கடந்த 4-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தனி வார்டில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி திங்கட்கிழமை அவர் உயிரிந்தார். இதற்கிடையே, அவரது ரத்த மாதிரியை சோதித்த போது பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும், ஜெய்தாராம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று அதே அறிகுறிகளுடன் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்றார் அவர்.

இதன் தொடர்ச்சியாக, ஜோத்பூரிலுள்ள மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் பன்றி காய்ச்சல் பரவி பல்லாயிரக் கணக்கானோரை பலி கொண்டது. இந்தியாவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism