பிப்.13,2011

இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
யுனிசெஃப் அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் முறையே 53%. 45% மற்றும் 44% சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் தான் குறைந்த எடையுடன் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, முதற்கட்டமாக இந்த ஆண்டு முதல் வடகிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள 5 வயதுக்கு குறைவாக உள்ள சிறார்களுக்கு மழலையர்ப் பள்ளியில் வாரத்துக்கு மூன்று முறை பால் கொடுக்கவுள்ளதாக இலங்கை அரசின் மகளிர் மற்றும் சிறார்கள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.