Published:Updated:

101 நோய்களுக்குத் தடா!

101 நோய்களுக்குத் தடா!

101 நோய்களுக்குத் தடா!

101 நோய்களுக்குத் தடா!

Published:Updated:
மீபத்தில் வெளியான 'பா’ இந்திப் படத்தில் அபிஷேக் பச்சனின் மகனாக நடித்த அமிதாப் பச்சன், ப்ரோஜிரியா (Progeria) என்ற மரபு ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார். பெரிய தலையுடன் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தைக் கொடுத்துவிடும் நோய் அது. 'பா’ படத்தின் மூலம் மரபியல் ரீதியான நோய்களைப் பற்றிய விழிப்பு உணர்வு பரவியது.

 ப்ரோஜிரியா மட்டும் அல்ல... இன்னும் பரம்பரை ரீதியாக வரும் எத்தனையோ நோய்கள் குணப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால், சில பாரம்பரிய நோய்களைப் பிறக்கும்போதே கண்டறிவதின் மூலம் குணப்படுத்த முடியும். இந்தியாவுக்கு இந்த சோதனை புதிது. ஆனால், உலகில் கிட்டத்தட்ட 52 நாடுகளில் குழந்தை பிறந்த உடன் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் நடைமுறையில் உள்ளது. சில மேற்கத்திய நாடுகள் இதைத் தங்கள் குடிமக்களுக்கு கட்டாயமாகவும் இலவசமாகவும் செய்கின்றன. இதனால், பிற்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் வருவது தவிர்க்கப்படுகிறது.

101 நோய்களுக்குத் தடா!

இந்தியாவில் இந்த பரிசோதனை இப்போது பிரபலமாகி வருகிறது. உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, உலகில் 25-க்கு ஒரு குழந்தை மரபியல் குறைபாட்டுடன் பிறக்கிறது. ஐந்தில் ஒரு குடும்பம் மரபியல் குறைபாடுகொண்டதாக உள்ளது. இந்தியாவில் 40 நொடிகளுக்கு ஒரு குழந்தை மரபியல் குறைபாட்டுடன் பிறக்கிறது. ஆனால், இதுபற்றிய விழிப்பு உணர்வு மக்கள் மத்தியில் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

101 நோய்களுக்குத் தடா!

பிறந்த குழந்தைகளுக்கு மரபியல் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியப் பரிசோதனை நடத்தும் ப்ரிவென்டைன் லைஃப் கேர் நிறுவனத்தின் ஜெனிடிக் ஸ்கிரீமிங் தலைவர் டாக்டர் ரிஷி தீக்ஷித்திடம் பேசினோம்.

''மரபியல் பிரச்னை என்பது மூதாதையரிடம் இருந்து வருவது. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் மரபணுக்கள்தான் மரபுரீதியான குணங்களைச் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. பழக்க வழக்கங்கள், தோலின் நிறம், கருவிழியின் நிறம், முடியின் நிறம் வரை எல்லாமே பெற்றோர் மூலமாக குழந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றன. அதேபோன்று அவர்களுக்கு உள்ள குறைபாடுகளும் கடத்தப்படலாம்.

மரபியல், உட்சுரப்பியல், வளர்சிதை மாற்ற நோய்கள் குழந்தைக்கு இருக்கிறதா என்பதைக் கண்டறிவதன் மூலமாக, கிட்டத்தட்ட 101 வகையான பரம்பரை ரீதியான நோய்களைக் கண்டறிந்து ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்.

101 நோய்களுக்குத் தடா!

##~##

இப்போதைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, குழந்தையின் சிறுநீரில் இருந்தே, அந்த குழந்தைக்கு பரம்பரை ரீதியான பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிந்துவிட முடியும். நாங்கள் இப்போது மரபியல் சோதனை மட்டுமே செய்கிறோம். இச்சோதனை குழந்தை பிறந்த 48 மணி நேரத்துக்குப் பின் அந்த குழந்தையின் சிறுநீரைச் சேகரித்து செய்யப்படும். பிறந்த குழந்தைக்கு மட்டும் அல்ல... யார் வேண்டுமானாலும் இந்தச் சோதனையைச் செய்துகொள்ளலாம். சில குறைபாடுகளைப் பார்த்தாலே கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பேச்சுத் திறன், காது கேட்கும் திறன் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தால், அது ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாது. ஆனால், இந்தப் பரிசோதனை மூலம் அப்படி ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிந்துவிட முடியும். இதனால், நோய் முற்றிய பிறகு சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும், ஆரம்பத்திலேயே குணப்படுத்துவது சாத்தியமாகிறது. இதற்கு அந்தக் குழந்தையிடம் இருந்து ஒரு சொட்டு ரத்தம்கூட நாங்கள் எடுப்பது இல்லை.

எங்களின் சோதனை மூலம் வளர்ச்சிக் குறைவு, வளர்ச்சி தாமதமாதல், உடல் ஊனம், மூளை பாதிப்பு, கல்லீரல் பிரச்னைகள், இதயம், கண்களில் பிரச்னை, வலிப்பு நோய், கற்றல் திறன் குறைவு, நரம்பு மண்டலம் சம்பந்தமான பிரச்னைகள், மூர்க்கத்தனம், கோபம் உள்ளிட்ட 101 வகையான மரபியல் ரீதியான நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்!'' எனச் சொன்னவர், அந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் விதத்தையும் விவரித்தார்.

''இந்தச் சோதனையின்போது ஒரு காகிதத்தை சிறுநீரில் வைத்து பின்னர் அதை காஸ்கிராமட்டோகிராபி இயந்திரத்தில் வைப்போம். அது, சிறுநீரை ஆவியாக்கி அதில் இருந்து விவரங்களைக் கிரகித்து குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியும். குழந்தையின் சிறுநீரில் உள்ள கார்போஹைட்ரேட் மெட்டபாலிஸம் அமினோ ஆசிட், ஃபேட்டி ஆசிட், ஆர்கானிக் ஆசிட், ஸ்டீ​ராய்ட் போன்ற 250 மெட்டபாலி​ஸத்தின் (வளர்சிதை மாற்றம்) அளவு எப்படி இருக்கிறது என்பதை வைத்து ஒரு வரைபடம் வரையும். அதாவது ஈ.சி.ஜி. இயந்திரம் எப்படி ஒரு கிராஃப் வரைகிறதோ... அதுபோல இதுவும் ஒரு கிராஃப் வரையும். அதில் பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அதில் நட்சத்திர அடையாளம் இடும். அதைஎங்கள் ஆய்வகத்தில் உள்ள  பயோகெமிஸ்ட் மற்றும் ஜெனிட்டிஸ்ட்கள் ஆராய்ந்து உறுதிப்படுத்துவார்கள். பரிசோதனை முடிவுகளை 48 மணி நேரத்துக்குள் வழங்கிவிடுவோம்.

பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் அல்ல... கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்தும் சுலபமான பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்!'' என நம்பிக்கை வார்க்கிறார் டாக்டர் ரிஷி தீக்ஷித்.

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism