Published:Updated:

அதிகம் என்பது ஆபத்தா?

அதிகம் என்பது ஆபத்தா?

அதிகம் என்பது ஆபத்தா?

அதிகம் என்பது ஆபத்தா?

Published:Updated:

''இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது!'' - 'பராசக்தி’ வசனத்தைப்போல விசித்திரமான விவகாரம் ஒன்று உலகையே குலுக்கி இருக்கிறது. 'கட்டுக்கடங்காத செக்ஸ் உணர்வு குற்றமா... இல்லை உணர்வுகளின் தூண்டுதலா?’ என்பதுதான் அந்தப் பட்டிமன்றம்.

 அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் மாடலிங் பயிற்சியாளருமான நீல் மெலின்கோவிச் 58 வயதிலும் தீராத செக்ஸ் வெறியர். இது குறித்து அவர்

அதிகம் என்பது ஆபத்தா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீது குற்றச்சாட்டுகள் கிளம்பியபோது, 'நான் என்ன செய்வேன்... எனக்குள் தூண்டப்படும் உணர்வுகள் என்னை அப்படி இயக்குகின்றன!’ என்றார் அதிரடியாக.  'வாரத்துக்கு ஏழு முறை வரை உறவுகொண்டால், அது நார்மல். அதற்கு மேலும் உறவுகளுக்கு உந்தப்பட்டால், அது செக்ஸ் அடிமைத்தனம்!’ என அமெரிக்க உளவியல் அமைப்பு ஒன்று அறிவிக்க, இந்தப் பட்டிமன்ற விவகாரம் மேலும் சூடாகி இருக்கிறது.

இது குறித்து மனநல மருத்துவர் செந்தில்வேலன் விளக்கமாகவே பேசினார்... ''மது, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவற்றுக்கு அடிமையாக இருப்பது இயற்கைக்கு சம்பந்தம் இல்லாத, மனிதனுக்குத் தேவை இல்லாத விஷயம். ஆனால், செக்ஸ் அப்படி அல்ல. தினசரி வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதற்காக, எத்தனை முறை உறவுகொள்வது நல்லது, எது கெட்டது என்பதை எல்லாம் வரையறுத்துச் சொல்ல முடியாது. செக்ஸ் என்பது ஒரு விதப் பசி. அது

##~##

மனிதனுக்கு மனிதன் வேறுபடும். சிலருக்கு இரண்டு இட்லி சாப்பிட்டால், போதும். ஆனால், வேறு ஒருவருக்கு இட்லி, பூரி, பொங்கல் என்று வயிறுமுட்ட வெட்டினால்தான் போதும் என்கிற உணர்வு பிறக்கும். அடிப்படை உடல்கூறு விஷயங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். நாடித்துடிப்பு 72 முறை இருக்க வேண்டும். ஆனால், எல்லோருக்கும் 72 என்பது இருக்காது. அதனால்தான் 60 முதல் 100 வரை இருந்தால் நார்மல் என்று கூறுவோம். 59-ஆக இருந்தாலும், 101-ஆக இருந்தாலும் நார்மல் இல்லை. அதேபோல எத்தனை முறை செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது நல்லது என்பதை இதுவரை யாரும் வரையறுத்துச் சொல்லவில்லை.

செக்ஸ் மேற்கொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்போதுதான், அது அடிமைத்தனமாக மாறுகிறது. செக்ஸ் என்பது மனதும் மனதும் இணைந்து மேற்கொள்ளப்படுவது. அதைத் தாண்டிப் போய், 'வாழ்க்கை முழுக்க எப்போதுமே செக்ஸால் நிரம்பி வழியவேண்டும்!’ என எண்ணுவதைத்தான் செக்ஸ் அடிமைத்தனம் என்கிறோம். இத்தகைய நிலையைத் தொடர்ந்தால், குடும்பம், மரியாதை, தொழில், பணம், உடல், குணம் என பலவும் அடிபட்டுப் போய்விடும்.

செக்ஸ் அடிக்ஷன் என்பது பிறவியில் வருவது என்று நிரூபிக்க முடியவில்லை. 'வாய்ப்பு’தான்

அதிகம் என்பது ஆபத்தா?

ஒருவனை செக்ஸ் நோக்கித் திருப்புகிறது. அடிப்படையாக, மனித குலத்தின் பொதுவான குணம் இது. 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நாமாக கொண்டுவந்த விதிமுறைதானே தவிர, பயாலஜிக்கலாகக் கிடையாது. விலங்கு உணர்ச்சி என்பது மனிதனுக்கு உண்டு. சந்தர்ப்பம் இல்லாத வரை மிகவும் நல்லவர்களாக இருக்கும் சிலர்கூட, சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பு செய்வார்கள்.  

பல பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டால் மட்டுமே செக்ஸ் அடிக்ட் என்று கூற முடியாது. தன் மனைவியையே பாடாய்படுத்துபவர்கள் நிறையப் பேர் உள்ளனர். என்னிடம் ஆலோசனை பெற வந்த ஒருவர், தன் மனைவி காய்ச்சலில் இருந்தால்கூட தினமும் நான்கு தடவை உறவுக்காகப் பாடாய்ப்படுத்துவாராம். மற்றபடி அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. கன்ட்ரோல் செய்ய முடியாததும் ஒரு அடிக்ஷன்தான்.

சிலருக்கு மனச்சிதைவு நோய், மன எழுச்சி நோய் போன்றவற்றால், செக்ஸ் மூடு அதிகமாக இருக்கும்.

அதிகம் என்பது ஆபத்தா?

அந்த வியாதி சரியானால், அந்த எண்ணமும் போய்விடும். மூளை பாதிப்பு உள்ளவர்களும் 'அந்த’ விஷயத்தில் கட்டுப்பாடு அற்ற வெறித்தனத்தோடு இருப்பார்கள்.

செக்ஸ் விஷயத்தில் எதையும் வரையறுத்துச் சொல்ல முடியாது. 'அளவோடு செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்’ என என்னதான் வலியுறுத்திச் சொன்னாலும், சூழ்நிலைகள் அதிகப்படியான செக்ஸுக்கு வித்திடுகின்றன.  

செக்ஸ் ரீதியான பிரச்னைகள் நம் சமுதாயத்தில் எப்போதுமே இலைமறைக் காயாகத்தான் இருக்கும். ஆனால், சமீப காலமாக மேலை நாடுகளைப்போல அந்த விஷயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. நாகரிகமும் பண்பாட்டு வளர்ச்சியும்தான் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. விலங்குகளின் குணங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்துவது நாகரிக வளர்ச்சிதான். தன்னை ஆள்பவனால் உலகை ஆள முடியும்.

பெற்றோர்கள் சிறுவயதில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களையும் நெறிமுறைகளையும் சொல்லி வளர்க்கும்போது, இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும் முடியும்... தடுக்கவும் முடியும்!''

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism