Published:Updated:

சந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா? -மருத்துவம் என்ன சொல்கிறது? #lunareclipse

ஜெ.நிவேதா
சந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா? -மருத்துவம் என்ன சொல்கிறது? #lunareclipse
சந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா? -மருத்துவம் என்ன சொல்கிறது? #lunareclipse

சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வருவது  சந்திர கிரகணம் எனப்படும். சந்திரன் மறைக்கப்படுவது சந்திரகிரகணம் என்றும், சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திரகிரகணமானது பௌர்ணமி தினத்திலும், சூரிய கிரகணமானது அமாவசையிலும் ஏற்படும். முழுமையாக ஏற்படும் சந்திரகிரகணம் பூரண சந்திரகிரகணம் என்றும், முழுமையடையாமல் அரைகுரையாக இருந்தால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

சந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா? -மருத்துவம் என்ன சொல்கிறது? #lunareclipse

இன்று ஏற்படப் போவது பகுதி சந்திர கிரகணம். இதை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணமுடியும்.
ஆனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இது பகல் நேரத்தில் ஏற்படுவதால் அவர்களால் இதைக் காண முடியாது என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை காண முடியவில்லை. அதனால் இன்றைய சந்திர கிரகணத்தைக் காண பலரும் ஆர்வமாக உள்ளனர். இதனால் சந்திரகிரகணத்தைப் பொது மக்கள் காண்பதற்காக  சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த கிரகணமானது எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தெரியாது. வெவ்வேறு நேரங்களில் தெரியும். இந்திய நேரப்படி, இரவு 10.51 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 12.49 வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதை, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணமுடியும்.

கிரகண காலத்தில் நீர் அருந்தகூடாது, உணவு உண்ணக்கூடாது, கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது, மனநலம் பாதிக்கப்படும் என பலவாறு பயமுறுத்துவார்கள். இன்னும் சிலர், கிரகணத்தைப் பார்ப்பதால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும், நல்லது நடக்கும் என்றும் சொல்வார்கள். 

சந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா? -மருத்துவம் என்ன சொல்கிறது? #lunareclipse

இந்த நம்பிக்கைகள் எல்லாம்  உண்மையா? சந்திர கிரகணத்தால் உடல்நலம் பாதிக்குமா?

பொது மருத்துவர் தேவராஜனிடம் கேட்டோம்

"சந்திர கிரகணத்தைப் பொறுத்தவரை கதிர்வீச்சு ரீதியாக பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கிரகண நேரத்தில் வெளியே வருவதை மட்டும் தவிர்த்தால் போதும்.  கிரகண நேரத்தில் தண்ணீர் அருந்தினாலோ, சாப்பிட்டாலே உடல்ரீதியான பாதிப்புகள் வரும்

சந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா? -மருத்துவம் என்ன சொல்கிறது? #lunareclipse

என்பது நிரூபிக்கப்படவில்லை. இந்தக் கூற்று முற்றிலும் தவறு. 

இதை வெறும் கண்களால் பார்ப்பதால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. சூரிய கிரகணத்தைப் பார்ப்பதுதான் தவறு. சாதாரணமாக சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம். கண்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

கர்ப்பிணிகள் அந்த நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, உடல் மிகவும் சோர்வாக இருந்தால் வெளியில் வருவதையும், அந்நேரத்தில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

இது ஏற்படுத்தும் முக்கிய பாதிப்பு, மனநலம் சார்ந்தது. மனநல பாதிப்பு உள்ளவர்கள், கிரகண வேளையில் வெளியில் செல்வதால் பாதிப்பு அதிகரிக்ககூடும். சிலர் கிரகண நேரத்தில் கூடுதலாக ரியாக்ட் செய்வார்கள். இது சாதாரண விஷயம் தான். பயப்படத்தேவையில்லை. சாதாரணமாக விட்டுவிட்டால் ஓரிரு மணி நேரங்களில் சரியாகி விடும். 

கிரகணம் என்பது ஒரு இயற்கை நிகழ்வு. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றோடும் அதற்குத் தொடர்பு உண்டு. ஆனால் அந்த தொடர்புபகள் இயல்பானவை. அதனால் சந்திர கிரகணம் குறித்து அச்சம் தேவையில்லை..." என்கிறார்  டாக்டர் தேவராஜன். 

சந்திர கிரகணம் பற்றிய கற்பிதங்களை புறம் தள்ளிவிட்டு உங்கள் குழந்தைகளுக்கு இந்த நிகழ்வை அறிவியல்பூர்வமாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.