Published:Updated:

கோவிட் 19: கொரோனா தடுப்பூசி குறித்த சில சந்தேகங்களும், தெளிவான விளக்கங்களும்!

கொரோனா தடுப்பூசி
News
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி பற்றிய வதந்திகள், கொரோனாவை விட வேகமாகப் பரவுகின்றன. உண்மை என்ன..? வாருங்கள், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வோம்!

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா வருகிறதே?

கொரோனாவுக்கு எதிரான தற்போதைய தடுப்பூசிகள் அனைத்தும், கொரோனா தொற்றைத் தடுப்பதில்லை. ஆனால், தீவிர நோய் ஏற்படாமலும் மரணம் நிகழாமலும் தடுக்கும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அறிகுறிகளற்ற கொரோனாத் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. அறிகுறிகளுடைய சாதாரண கொரோனாத் தொற்றும் ஏற்படலாம். என்றாலும் அது தீவிர கொரோனாவாக மாறாது. இதை தடுப்பூசி சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறது.

தடுப்பூசிகளில் கோவேக்சின் சிறந்ததா? கோவிஷீல்டு சிறந்ததா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவேக்சின் தடுப்பூசி ஒருவருக்கு 80% நோய் தடுக்கும் திறனைத் தருகிறது என்றால், கோவிஷீல்டு 70% நோய் தடுக்கும் திறனை வழங்குகிறது என்று ஆய்வுகளில் தெரிகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கும்போது இரண்டுக்கும் இடையேயான திறனில் பெரிய அளவு ஏற்றத்தாழ்வு இருக்காது. பாதுகாப்பிலும் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. எனவே இரண்டில் எந்தத் தடுப்பூசி உங்களுக்கு மிக அருகில் கிடைக்கிறதோ, எந்தத் தடுப்பூசியை விரைவாகச் செலுத்திக்கொள்ள முடியுமோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம்

இப்போது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஆனால், 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கு ஏன் தடுப்பூசி போடப்படுவதில்லை?

தற்போது இந்தியாவில் கிடைக்கும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டவை. உலகின் பல நாடுகளில் வழங்கப்படும் பெரும்பாலான தடுப்பூசிகளும் இப்படிப்பட்டவைதான். எனவே, ஆராய்ச்சிகளில் பங்குகொள்ளாத 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவது நல்லதல்ல. முறையாக ஆராய்ச்சி செய்த பிறகே அந்த வயதினருக்குத் தடுப்பூசி வழங்க முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிட்டைசர் எல்லாம் அவசியம்தானா?

ஆம்... கட்டாயம் தேவை. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் ஒருவருக்கு அறிகுறிகளற்ற கொரோனாத் தொற்று ஏற்படலாம். எனவே அவர் பேசும்போதும் தும்மும்போதும் தடுப்பூசி போடாத நபர்களுக்கு வைரஸ் பரவலாம். இதுவரை நம் மக்கள் தொகையில் ஏழு சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனர். இன்னும் தடுப்பூசி பெறாமல் ஏராளமானோர் இருக்கிறார்கள். எனவே தடுப்பூசி பெற்றவர்கள் கட்டாயம் முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அது அவர்களின் குடும்பத்தினருக்கும் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு தரும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

முந்தைய அலையில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?

முதல்முறை கொரோனா தொற்றுவதால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியானது சில மாதங்கள் மட்டுமே நீடிக்கிறது. முதல் முறை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் அலட்சியத்துடன் இருந்தால் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, அதிக கவனம் தேவை. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அண்மையில் செய்த ஆராய்ச்சியில், ‘இந்தியாவில் இப்போது கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளில் நூறில் 4.5 பேர் ஏற்கெனவே கொரோனா வந்தவர்கள்' என்பது தெரிய வந்துள்ளது. 'கடந்த ஆண்டு கொரோனா தாக்கியதால் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது' என அலட்சியம் வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடுப்பூசியினால் ரத்த உறைதல் நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பது உண்மையா?

கோவிஷீல்டு தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்பட்டபோது அரிதினும் அரிதாக சிலருக்கு ரத்த உறைதலையும், கூடவே ரத்த தட்டணுக்கள் குறைபாட்டையும் ஏற்படுத்துவதாகத் தெரிந்தது. ‘அரிதினும் அரிதாக’ என்றால், பிரிட்டனில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 1.8 கோடி பேரில் 30 பேருக்கு இப்படி ஆகியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் ஒருவருக்கு கொரோனா தாக்கினால், அதன் தீவிர பாதிப்பு ரத்த உறைதலை ஏற்படுத்தும். அது மரணத்தில்கூட முடியும். அரிதினும் அரிதாக விபத்து நடக்கிறது என்பதற்காக பயந்துகொண்டு யாரும் வாகனம் ஓட்டாமல் இருப்பதில்லையே! தடுப்பூசிகளும் அது போலத்தான்.

தடுப்பூசியால் நிறைய நன்மைகளே விளைகின்றன. எனவே அச்சமின்றி மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இதுபற்றி ஆராய்ச்சி செய்துள்ளது. இந்தியாவில் தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள், பிரிட்டிஷ் உருமாற்ற கொரோனா, பிரேசில் உருமாற்ற கொரோனா ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாக அதில் தெரிந்துள்ளது. எனினும் தென்னாப்பிரிக்க உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளதைக் காணமுடிகின்றது. மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகளின் திறன் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அவசர கால முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முன்பு சர்ச்சைகள் எழுந்தனவே?

ஸ்புட்னிக் தடுப்பூசியை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் உலகின் முதல் கொரோனாத் தடுப்பூசி என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். உடனே மேற்கத்திய நாடுகள், ‘அறிவியல் ஆய்வுகள் ஏதுமின்றி எப்படி அறிவிக்கலாம்’ என்று கேள்வி எழுப்பின. கடந்த பிப்ரவரியில் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது ரஷ்யா. அது, இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் 91.6% நோய் தடுக்கும் திறன் உள்ளது என்றும் உறுதி செய்தது.

அர்ஜென்டினா, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 15 நாடுகளில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியாவிலும் பிரத்யேகமாக 1,600 இந்தியர்களிடம் மூன்றாம் கட்ட ஆய்வு நிகழ்த்தப்பட்டு இதன் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை முழுமையாக சோதனை செய்த பின்பே அனுமதி கொடுத்துள்ளது அரசு. இந்தத் தடுப்பூசியும் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் இன்னொரு அஸ்திரமே! தாராளமாக இதைப் போட்டுக்கொள்ளலாம்.