Published:Updated:

கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் - இந்தியாவின் இரண்டு புதிய தடுப்பூசிகளின் பயோடேட்டா!

புதிய தடுப்பூசிகள்
News
புதிய தடுப்பூசிகள்

கோவோவேக்ஸ் தடுப்பூசியானது ஒமைக்ரான் உருமாற்றத்துக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிப்பதாக சமீபத்தில் ஓர் ஆய்வு உறுதி செய்துள்ளது. அதன்பின் இந்தத் தடுப்பூசிக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இரண்டு புதிய தடுப்பூசிகளுக்கு டிசம்பர் 28-ம் தேதி இந்தியா அனுமதி அளித்துள்ளது. புனேவில் உள்ல சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிக்கும் கோவோவேக்ஸ், ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் ஈ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் ஆகியவையே அவை.

ஏற்கெனவே ஏழு தடுப்பூசிகளுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ள நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகியவையே அதிகம் போடப்படுகின்றன. இந்தப் புதிய தடுப்பூசிகள் இரண்டும் இந்தியாவில் அதிகம் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளதால், இன்னும் வேகத்துடன் தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

Novavax | நோவாவாக்ஸ் தடுப்பூசி
Novavax | நோவாவாக்ஸ் தடுப்பூசி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்துவரும் சீரம் இன்ஸ்டிட்யூட் இப்போது புதிதாக கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் இந்தியாவுக்காகத் தயாரிக்கப் போகிறது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கிய நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசியையே இந்தப் பெயரில் சீரம் தயாரிக்கப் போகிறது. மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி என பரிசோதனைகளில் உறுதியாகி, அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது நோவாவேக்ஸ். 30 நாடுகளில் இது போடப்படுகிறது.

நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, அவர்களிடமிருந்து தொழில்நுட்பத்தை வாங்கியே சீரம் நிறுவனம் இதை இந்தியாவில் தயாரிக்கிறது.

இந்தத் தடுப்பூசியை இந்தியர்களுக்குப் போடுவதற்கு இப்போதுதான் அனுமதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், இதைத் தயாரிப்பதற்கான அங்கீகாரத்தை மே மாதமே சீரம் நிறுவனம் பெற்றுவிட்டது. லட்சக்கணக்கில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை ஏற்கெனவே இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வாங்கிப் பயன்படுத்துகின்றன. உலக சுகாதார நிறுவனமும் டிசம்பர் 17-ம் தேதி இதற்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டது.

புதிய தடுப்பூசிகள்
புதிய தடுப்பூசிகள்

கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் இருக்கும் மரபணுவை ஆதாரமாக வைத்து இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து இதைப் பயன்படுத்த முடியும் என்பதால், இந்தியச் சூழலுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் போலவே இதையும் இரண்டு தவணைகளாக செலுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கோவோவேக்ஸ் தடுப்பூசியானது ஒமைக்ரான் உருமாற்றத்துக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிப்பதாக சமீபத்தில் ஓர் ஆய்வு உறுதி செய்துள்ளது. அதன்பின் இந்தத் தடுப்பூசிக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான்
ஒமைக்ரான்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் ஈ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ், 'இந்தியாவின் மிகவும் விலைகுறைந்த கொரோனா தடுப்பூசி' என்ற பெருமையைப் பெறக்கூடும். 'இரண்டு தவணை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு 500 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகும்' என்று இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஹிமா தட்லா பெருமையுடன் சொல்கிறார். 110 ரூபாய் செலவில் ஒரு டோஸ் தயாரித்துவிட முடியுமாம்.

அமெரிக்காவில் உள்ள பாய்லர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இந்தத் தடுப்பூசியை பயாலஜிக்கல் ஈ நிறுவனம் தயாரிக்கிறது. இதை அதிக அளவில் தயாரிக்க வேண்டும் என்பதற்காக பயாலஜிக்கல் ஈ நிறுவனத்துக்கு அமெரிக்காவின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் பெரிய அளவில் நிதியுதவி செய்வதாக அறித்துள்ளது. 2022ம் ஆண்டு இறுதிக்குள் 100 கோடி டோஸ் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹெபாடைடிஸ் பி தடுப்பூசியை உருவாக்கும் பாரம்பரிய முறையில்தான் இதுவும் தயாராகிறது. கொரோனா வைரஸின் புரதமே இந்தத் தடுப்பூசிக்கும் ஆதாரம். இது விற்பனைக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசு 30 கோடி டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்து வைத்திருக்கிறது.

புதிய தடுப்பூசிகள்
புதிய தடுப்பூசிகள்
இதற்கு இன்னமும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் தரவில்லை. என்றாலும் இந்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது. இதை முதல் டோஸ் போட்டுக்கொண்டு 28 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடலாம். எனவே, இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களின் எண்னிக்கையை சீக்கிரமே அதிகரிக்க முடியும்.