சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கியெடுத்த `தொண்டை அடைப்பான்’ எனப்படும் டிப்தீரியா, தொடர் நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சில ஆண்டுகள்கூட ஆகவில்லை. மீண்டும் தலைதூக்கி தமிழ்நாட்டை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், உருளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் மாதப்பனுக்கு, சென்ற ஜூன் மாதம் 15-ம் தேதி டிப்தீரியா தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. எவ்வளவோ போராடியும் மாதப்பனைக் காப்பாற்ற முடியவில்லை. `ஆரம்பத்திலேயே அழைத்துவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்’ என்று மருத்துவர்கள் சொல்ல, மாதப்பனின் குடும்பம் கண்ணீரில் தத்தளித்தது.

இந்தச் சோகம் மறைவதற்குள்ளாகவே அதே ஈரோட்டில் அடுத்து ஓர் உயிரை காவு வாங்கியது டிப்தீரியா.

மல்லியம்மன் துர்க்கம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த காசி பிரசாத் என்கிற பத்து வயது சிறுவன், டிப்தீரியாவுக்குப் பலியானான். ஈரோட்டின் மலைக்கிராமங்களில் ஆரம்பித்த டிப்தீரியா, நாளடைவில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் போன்ற பெருநகரங்களிலும் பரவத் தொடங்கியிருப்பது எல்லோரையும் பதறவைத்துள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு, நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஒருவராவது டிப்தீரியா அறிகுறியுடன் வருகிறார். அங்கு டிப்தீரியா நோயாளிகள் ஐவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பீதி கிளப்புகின்றன மருத்துவமனை வட்டாரங்கள்.

இந்த நோய் இவ்வளவு வேகமாய்ப் பரவுவதற்கு என்ன காரணம்? சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் அறம், இதுகுறித்துப் பேசினார்.

“டிப்தீரியாவால் குழந்தைகள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதைத் தட்டிக்கழிப்பதே இதற்குக் காரணம். பிறந்து இரண்டு வருடத்துக்குள்ளாகவே குழந்தை களுக்கு ஊசிகளாகவும் சொட்டு மருந்து களாகவும் ஒன்பது வகை நோய்களுக்கு அரசு இலவசத் தடுப்பு மருந்துகளை வழங்குகிறது. நாளடைவில் தடுப்பு மருந்தின் வீரியம் குறைந்துவிட்டால், குறிப்பிட்ட வருடத்துக்கு ஒருமுறை `தடுப்பூசி ஊக்குவிப்பு’ (Vaccine booster) மருந்துகளையும் அரசு இலவசமாக வழங்குகிறது. இந்தத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் குழந்தைகள், நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளை மட்டும் தாக்கும் நோயாக இருந்தது, டிப்தீரியா. இப்போது, 18 வயதைத் தாண்டியவர்களையும் தாக்குகிறது. ஆகவே, தடுப்பூசிகளின் அவசியம்குறித்து மக்களிடம் விழிப்புஉணர்வை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, மலைப்பிரதேசங்கள், தொலைத்தொடர்பு குறைவாக உள்ள இடங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவச் சந்தையில் டிப்தீரியாவைத் தடுக்கும் DTP (Diptheria, Tetanus Toxoids and Pertussis) என்ற தடுப்பூசி 17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதை இலவசமாக்கினால், மலைவாழ் மக்கள் பயனடைவார்கள்” என்றார்.

மருத்துவர் எழிலனிடம் பேசினோம், “டிப்தீரியா, காற்றுமூலம் பரவக்கூடிய நோய். ஒருவருக்கு டிப்தீரியா இருப்பது உறுதிசெய்யப்பட்டால், ஐந்து பேருக்கு கண்டறியப்படாமல் இருக்கிறது என்றே அர்த்தம். தமிழகத்தைவிட வடகேரளத்தில்தான் டிப்தீரியா வேகமாகப் பரவுகிறது. கேரளத் திலிருந்து தமிழகத்துக்கு வரும் வியாபாரிகள், தொழிலாளர்களிடம் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு படிநிலையிலும் பணியாற்றினால் தான் டிப்தீரியாவுக்கு முழுமையாக தீர்வுகாண முடியும்” என்றார்.

டிப்தீரியாவைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் தயார் நிலையில் இருக்கின்றனவா என்பதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் பேசினோம்.

“தமிழகத்தில் இதுவரை சுமார் 50 பேருக்கு டிப்தீரியா உறுதிசெய்யப் பட்டு, சிகிச்சையளித்துவருகிறோம். டிப்தீரியாவுக்கான மருந்துகளான ஆன்டி டிப்தீரியா சீரம், ஆன்டி பயாடிக் பென்சிலின், எரித்ரோ பென்சின் ஆகியவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதியளவுக்கு இருப்பு வைக்கப் பட்டுள்ளன. எந்தச் சூழலிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்படாது. மருத்துவப் பணியாளர்கள் அனை வருக்கும், டிப்தீரியா நோய் அறிகுறிகள்குறித்த வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

சமீபகாலமாக டிப்தீரியாவுக்கு பெரியவர்களும் பாதிக்கப்படுவதால், அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளாக வரும் அனை வருக்குமே டி.டி.பி ஊசி போடப் படுகிறது. தவிர, அனைத்து மாவட்ட பள்ளிக் குழந்தைகளுக்கும் கர்ப்பிணி களுக்கும் தடுப்பூசிகள் போடுகிறோம். டிப்தீரியாவை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், சிகிச்சைகள் மூலம் சரிசெய்துவிடலாம். எனவே, பொதுமக்கள் பதற வேண்டாம். தொண்டைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் செல் லுங்கள். இரண்டு நாள்களுக்கு மேலான காய்ச்சல், ஆபத்தின் அறிகுறி” என்றார்.

வரும்முன் காப்போம்!