Published:Updated:

15 முதல் 18 வயதுள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வது எப்படி? | Doubt of Common Man

CoWIN இணையதளம்

ஜனவரி 1 முதல் 15 - 18 வயதுக்குப்பட்டோருக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகப் பதிவு செய்து கொள்ளலாம். இன்று முதல் (ஜன. 3) முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

15 முதல் 18 வயதுள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வது எப்படி? | Doubt of Common Man

ஜனவரி 1 முதல் 15 - 18 வயதுக்குப்பட்டோருக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகப் பதிவு செய்து கொள்ளலாம். இன்று முதல் (ஜன. 3) முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

Published:Updated:
CoWIN இணையதளம்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் எழில் தங்கராஜ் என்ற வாசகர், "15 முதல் 18 வயதுள்ளவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்த எப்படி முன்பதிவு செய்வது, அது குறித்த விபரங்கள் கிடைக்குமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 85 சதவிகிதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 56 சதவிகிதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்ட நடவடிக்கையாக 15 முதல் 18 வயது வரை உள்ளோருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தைக் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஜனவரி 1 முதல் 15 - 18 வயதுக்குப்பட்டோருக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இன்று முதல் (ஜன. 3) முதல் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

15 முதல் 18 வயதுக்குப்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு செய்ய வழக்கமான நடைமுறையையே பின்பற்றலாம். 'CoWIN' இணையதளம், 'CoWIN' செயலி அல்லது 'UMANG' செயலியின் மூலம் தடுப்பூசிக்கான முன்பதிவைச் செய்யலாம்.

முதலில் கோவின் இணையதளத்திற்குச் சென்று Register / Sign-up என்பதனை கிளிக் செய்யவும். அதன் பின் நம்முடைய மொபைல் எண் மற்றும் OTP ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் 'Add Member' என்பதனை கிளிக் செய்து பயனாளரின் பெயர், பிறந்த தேதி மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றைக் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இணையத்தின் மூலம் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நேரடியாகத் தடுப்பூசி முகாமுக்குச் சென்றும் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

தடுப்பூசி முன்பதிவு
தடுப்பூசி முன்பதிவு

தற்போது 2007 மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 15 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் ஆவணமாக தங்கள் பள்ளி அடையாள அட்டையையே பயன்படுத்திக் கொள்ளலாம். 15-18 வயது கொண்டவர்களுக்கு இந்தியாவில் கோவாக்சின், சைட்ஸ் கேடில்லா நீடில் இல்லாத வேக்சின் (Zydus Cadila: ZyCoV-D) இரண்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சைட்ஸ் கேடில்லா தடுப்பூசியை இந்தியாவில் இன்னும் பெரியவர்களுக்கே அறிமுகப்படுத்தவில்லை. எனவே, தற்போது கோவாக்சின் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man