Published:Updated:

சிறுநீரகக் கட்டி: காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட் சிகிச்சையில் GGHC சாதனை!

GGHC

சிறுநீரகக் கட்டியால் சிறுநீரக செயலிழப்பு கொண்ட நோயாளிக்கு கதிரியக்கவியல், சிறுநீரகவியல் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுநீரகக் கட்டி: காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட் சிகிச்சையில் GGHC சாதனை!

சிறுநீரகக் கட்டியால் சிறுநீரக செயலிழப்பு கொண்ட நோயாளிக்கு கதிரியக்கவியல், சிறுநீரகவியல் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

Published:Updated:
GGHC

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, நாட்டிலேயே முதலாவதாக, காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட்- வழிநடத்திய சிறுநீரகக் கட்டி சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவமனையாக மாறியுள்ளது!

சிறுநீரகக் கட்டியால் சிறுநீரக செயலிழப்பு கொண்ட நோயாளிக்கு கதிரியக்கவியல், சிறுநீரகவியல் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னையில் உள்ள முன்னணி நான்காம் நிலை பல்நோக்கு மருத்துவமனையாகிய, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியானது (GGHC), நாட்டிலேயே முதலாவதாக, காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட்- வழிநடத்திய சிறுநீரகக் கட்டி சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவமனையாக மாறியுள்ளது.

சிறுநீரகக் கட்டிகளால் அவதிப்பட்ட 76 வயதான திரு. ஆதேஷ்*, கட்டிகளை அகற்ற இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அந்த சிகிச்சைகளில் அவருக்கு ஒவ்வொரு சிறுநீரகத்திலும் பாதி எடுக்கப்பட்டது, இதனால் இருந்த பாதி சிறுநீரகங்கள் குறைந்த அளவில் செயல்பட்டன. கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் ஒரு வழக்கமான பரிசோதனையின் போது, அவரது இடது சிறுநீரகத்தில் மீண்டும் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோயியல் பேராசிரியர் டாக்டர் எஸ் ராஜசுந்தரம், மற்றும் சிறுநீரகவியல் மூத்த ஆலோசகர் டாக்டர் முத்துக்குமார் ஆகியோரின் ஆலோசனையைத் தொடர்ந்து மைக்ரோவேவ் அபிலேஷனுக்கு அவர் கதிரியக்க மருத்துவ நிபுணர் டாக்டர் மோஹ்னிஷுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆரம்ப மதிப்பீடுகளுக்குப் பிறகு, டாக்டர் மோஹ்னிஷ் மற்றும் அவரது குழுவினர் காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட் வழிநடத்திய சிறுநீரகக் கட்டி சிகிச்சையைத் தேர்வு செய்தனர்.

சிறுநீரக பாதிப்புகள்!
சிறுநீரக பாதிப்புகள்!

நோயாளி 76 வயதுடையவர் மேலும் அவருக்கு பல இணை நோய்கள் இருந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலை இருந்தது. தோலின் வழியே கட்டிக்குள் ஒரு சிறிய ஊசியைச் செருகுவதன் மூலம் கட்டியை உள்ளே இருந்து எரிக்கும் மைக்ரோவேவ் அபிலேஷன் என்ற ஒரு குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட சிகிச்சையை மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

அவர் சிறுநீரக செயலிழப்பு நோயாளியாக இருந்ததால், சிகிச்சையானது சி.டி வழிநடத்தும் சிகிச்சையிலிருந்து அல்ட்ராசவுண்ட்-வழிநடத்தும் சிகிச்சைக்கு மாற்றப்பட்டது. மேலும், மருத்துவர்கள் சாதாரண சிறுநீரக திசுக்களில் இருந்து கட்டியின் திசுக்களை அடையாளம் காண நவீன முறைகளைப் பயன்படுத்தினர், பின்னர் மைக்ரோவேவ் அபிலேஷன் மூலம் கட்டி திசுக்களை எரித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் ஹெல்த் சிட்டியின், கதிரியக்க மருத்துவ நிபுணர் டாக்டர். மோஹ்னிஷ், கூறுகையில், “கதிரியக்க மருத்துவ சிகிச்சை என்பது அல்ட்ராசவுண்ட் அல்லது அது போன்ற சரியான முறையைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் செய்யப்படும் மிகக் குறைவான ஊடுருவல் கொண்ட சிகிச்சையாகும். சிறுநீரகம் செயலிழந்த இந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே /சி.டி ஸ்கேன்களுக்கு பதிலாக காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த புதிய நுட்பம் பல சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு கான்ட்ராஸ்ட் அல்ட்ராசவுண்ட் வழிநடத்தும் சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும். கான்ட்ராஸ்ட் மேம்பாட்டு சி.டி இல்லாமல் சிறுநீரகக் கட்டிகளைக் கண்டறிய கான்ட்ராஸ்ட் அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தப்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. கதிரியக்க மருத்துவ சிகிச்சைக்கு உயர்நிலையான, அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டன, விரைவில் பல மருத்துவ நிபுணர்களும் இத்தகைய கதிரியக்க மருத்துவ சிகிச்சை செய்யவிருப்பதால் பலரும் பலன் பெற முடியும்” என்று கூறினார்.

கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர். அலோக் குல்லர், இந்த சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், "சிறுநீரகக் கட்டிகளுக்கு இவ்வளவு துல்லியமாக சிகிச்சையளிப்பது உயர்நிலை தொழில்நுட்பத்துடன் இணைந்த நிபுணத்துவத்தால் மட்டுமே சாத்தியமாகும். டாக்டர் மோஹ்னிஷ் மற்றும் குழுவினர் கட்டிக்கு திறமையாக சிகிச்சை அளித்தது பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று கூறினார்.

*அடையாளத்தைப் பாதுகாக்க பெயர் மாற்றப்பட்டது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism