Published:Updated:

`அங்கீகரிக்கப்படாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை!' - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

அங்கீகரிக்கப்படாத நிறுவனம், ஆறு மாதகால மருத்துவப் பாடத்தை நடத்தி டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வருவது, சமுதாயத்தில் நடந்து வரும் பயங்கரமான விஷயமாகும்.

Published:Updated:

`அங்கீகரிக்கப்படாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை!' - உயர் நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்படாத நிறுவனம், ஆறு மாதகால மருத்துவப் பாடத்தை நடத்தி டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வருவது, சமுதாயத்தில் நடந்து வரும் பயங்கரமான விஷயமாகும்.

சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய அவசர உலகில் முன்பின் தெரியாத ஒருவரை நாம் முழுவதுமாக நம்புகிறோம் என்றால் அது மருத்துவர்கள்தான். இவர்கள் ஆறு மாதகால மருத்துவப்படிப்பை மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படியான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றக் கதவைத் தட்டியுள்ளது.

மருத்துவம்
மருத்துவம்

அனைத்து இந்தியா நிறுவனத்தில் (all-India Institute) ஆறு மாதக் கால 'மாற்று மருத்துவத்தை' படித்த 61 பேர், எந்தவித சட்ட இடையூறுமின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த 61 மனுதாரர்களும் அங்கீகரிக்கப் படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதியரசர் S.M.சுப்பிரமணியம், ``இந்தியா முழுவதும் மாற்று மருத்துவம் பரவலாக இருந்து வந்தாலும், இந்த மருத்துவத்தைத் தேர்ந்த மருத்துவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். ஆறு மாத காலம் மட்டுமே மருத்துவம் படித்துள்ள இவர்கள் கொடுக்கும் சிகிச்சையை நம்ப முடியாது. அது பேரழிவானதாகவும் இருக்கும்.

மாற்று மருத்துவம்!
மாற்று மருத்துவம்!

அங்கீகரிக்கப்படாத ஒரு நிறுவனம் ஆறு மாதகால மருத்துவப் பாடத்தை நடத்தி டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வருவது சமுதாயத்தில் நடந்து வரும் பயங்கரமான விஷயமாகும்.

குறிப்பிட்ட கால இடைவேளைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யாத மருத்துவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், இந்த 61 மனுதாரர்களையும் உரிய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்படக் கூடாது" என்று மனுவை தள்ளுபடி செய்தார்.

சமூக ஆர்வலர் மற்றும் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்
சமூக ஆர்வலர் மற்றும் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்

இதுகுறித்து சமூக ஆர்வலரும் மருத்துவருமான ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறுகையில், ``பொதுவாக மாற்று முறை மருத்துவப் படிப்பும், அதை வழங்கும் கல்வி நிறுவனமும் இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படிப்பை படித்தவர்கள் மட்டுமே, அவர்களுக்கான மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துகொண்ட பிறகு, மருத்துவம் பார்க்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் போலி மருத்துவர்களாகவே கருதப்படுவார்கள். மேலும், இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்" என்றார்.