Published:Updated:

சென்னையில் சர்வதேச தரம்: இதயம் மற்றும் நுரையீரல் & அறுவை சிகிச்சையில் மிளிரும் காவேரி மருத்துவமனை!

காவேரி மருத்துவமனை ( Saeed Al Amri )

நுரையீரல் மாற்று சிகிச்சையில் முக்கியப் பங்காற்றிவரும் சென்னை காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவில் புதிதாக இரண்டு மருத்துவ நிபுணர்கள் இணைந்துள்ளனர்.

சென்னையில் சர்வதேச தரம்: இதயம் மற்றும் நுரையீரல் & அறுவை சிகிச்சையில் மிளிரும் காவேரி மருத்துவமனை!

நுரையீரல் மாற்று சிகிச்சையில் முக்கியப் பங்காற்றிவரும் சென்னை காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவில் புதிதாக இரண்டு மருத்துவ நிபுணர்கள் இணைந்துள்ளனர்.

Published:Updated:
காவேரி மருத்துவமனை ( Saeed Al Amri )

எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் இன்ஜின் போன்றது இதயம். காரில் இன்ஜின் பிரச்னை என்றால், கழற்றி மாட்டலாம். ஆனால் ‘இதயத்தில் பிரச்னை என்றால், இதயத்தை நிறுத்தி, கழற்றி சுத்தம் செய்தெல்லாம் மாற்ற முடியாது!' - இப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம்... ஆனால், பழுதுபட்ட இதயத்தையும் மாற்றி ஆரோக்கியமான இதயத்தைப் பொருத்தி சாதனை படைத்துக் காட்டியது நவீன மருத்துவம். இதயத்தைப் போலவே, சுவாசம் நடைபெற உதவும் நுரையீரலையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா!

நுரையீரல்
நுரையீரல்

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 6,000 நுரையீரல் மாற்று சிகிச்சைகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன, இந்தியாவிலோ வருடத்திற்கு சராசரியாக 150. இதில் முக்கிய பங்காற்றி வரும் சென்னை காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவில் புதிதாக இரண்டு மருத்துவ நிபுணர்கள் இணைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவின் திட்ட இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் டாக்டர் குமுத் குமார் திட்டல். இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற இவர், இதய அறுவை சிகிச்சையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராவார். இதயம், நுரையீரல் மாற்று மற்றும் மெக்கானிக்கல் சர்க்குலேட்டரி சப்போர்ட் தெரபி ஆகிய சிகிச்சைகளில் இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்புகளை எடுத்து நோயாளிகளுக்கு பொருத்துவது வழக்கமான ஒன்று. ஆனால் இதயம் நின்று இறந்தவர்களின் (Circulatory Death) உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து பொருத்துவதில் உலகில் மிகச் சில டாக்டர்கள் மட்டுமே நிபுணத்துவம் பெற்றுள்ளனர். அதில் முன்னோடி என உலகப் புகழ் பெற்றவர் டாக்டர் குமுத். 2014-ல் ஆஸ்திரேலியாவின் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் இவர் செய்த இதுபோன்றதொரு சிகிச்சை உலகம் முழுக்க பேசப்பட்டது. காரணம் இறந்தவரின் இதயத்தை மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதன்முறை.

காவேரி மருத்துவமனை
காவேரி மருத்துவமனை

கடந்த 30 வருடங்களில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் அறுவை சிகிச்சை சார்ந்த முன்னேற்றமாக இது காணப்படுகிறது. இவரின் இந்தச் செயல்முறை இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய மருத்துவ மையங்களில் உள்ள அனைத்து மார்புக்கூடு சம்பந்தப்பட்ட உறுப்பு மாற்று மையங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் சமீபத்தில் அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

காவேரி மருத்துவக் குழுவில், மருத்துவ நிபுணரான டாக்டர் ஸ்ரீநிவாஸ் ராஜகோபாலாவும் இணைந்துள்ளார். மாற்று நுரையீரல் மற்றும் நுரையீரல் செயலிழப்பு பிரிவின் இயக்குநராகவும், இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் தூக்கம் தொடர்பான மருத்துவத்தில் மூத்த ஆலோசகராகவும் இவர் பொறுப்பேற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாக்டர் ஸ்ரீநிவாஸ் ராஜகோபாலா நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 19 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவராவார். ஆதாரத்தின் அடிப்படையிலான, நுரையீரல் நோய்கள் மேலாண்மையில் தேசிய அளவில் புகழ் பெற்றவர் இவர். கனடா நாட்டின் டொராண்டோ பகுதியில் பணியாற்றிய போது பல நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டவர் இவர். PGIMER சண்டிகர், JIPMER புதுச்சேரி, ராயல் அடிலெய்ட் மருத்துவமனை, மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், ஹாமில்டன் மற்றும் டொராண்டோ பொது மருத்துவமனை போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிறுவனங்களில் நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் மாற்று நுரையீரல் சிகிச்சை ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவங்களைப் பெற்றவர் இவர்.

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அவற்றின் செயல்பாட்டுக்கு உதவும் ஆதரவு சாதனங்களை நிர்வகித்தல் எனும் பொறுப்புகளை ஆற்றி வருகிறது காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சை குழு.

காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு
காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு
Saeed Al Amri

“டாக்டர் குமுத் குமார் திட்டல் மற்றும் டாக்டர் ஸ்ரீநிவாஸ் ராஜகோபாலா காவேரி மருத்துவமனையில் இணைந்துள்ளதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தேர்ந்த மருத்துவ வல்லுநர்களான இவர்களின் மொத்த அனுபவம் 40 வருடங்களுக்கும் மேலானது! சிக்கலான இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைகளில், இவர்கள் படைத்துள்ள உலகளாவிய சாதனை உலகின் பல்வேறு மருத்துவர்களுக்கும் மருத்துவ மையங்களுக்கும் ஊக்கமாக இருந்து வருகிறது.

இவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் மூலம் காவேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டங்கள் மூலம் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டுள்ளோம்!” என்கிறார் காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநரான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism