Published:Updated:

ரெம்டெசிவிர் - ஓராண்டுக்கு முன் தட்டுப்பாடு, இப்போது நிலைமை என்ன?

ரெம்டெசிவிர் ( படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு )

ரெம்டெசிவிர் மருந்துக்குக் காலாவதி தேதி ஆறு மாதங்களே இருந்தது. அந்த மருந்துகளின் காலாவதி தேதி மேலும் 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. பழைய லேபிளின் மீது புது ஸ்டிக்கர் ஒட்டி இவை விற்கப்பட்டன.

ரெம்டெசிவிர் - ஓராண்டுக்கு முன் தட்டுப்பாடு, இப்போது நிலைமை என்ன?

ரெம்டெசிவிர் மருந்துக்குக் காலாவதி தேதி ஆறு மாதங்களே இருந்தது. அந்த மருந்துகளின் காலாவதி தேதி மேலும் 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. பழைய லேபிளின் மீது புது ஸ்டிக்கர் ஒட்டி இவை விற்கப்பட்டன.

Published:Updated:
ரெம்டெசிவிர் ( படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு )
ரெம்டெசிவிர்... எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா? கடந்த ஆண்டு இதே நேரத்தில் இந்தியாவே இந்த மருந்துக்காக அடித்துக்கொண்டது. கொரோனா நோயாளிகளுக்கு இதைச் செலுத்தினால் உடலில் வைரஸ் அளவு குறைந்து நோய்ச்சீற்றம் தணிகிறது என்று மருத்துவ உலகம் சொன்னது. ஒரே ஒரு டோஸ் ரெம்டெசிவிர் வாங்க பல மணி நேரம் மக்கள் க்யூவில் நின்றார்கள். இது கிடைக்காததால் பலர், தாங்கள் நேசித்த உறவுகளை இழந்தார்கள்.

பல ஊர்களில் கள்ளச்சந்தையில் இதைக் கொள்ளை விலைக்கு விற்றார்கள். போலி ரெம்டெசிவிரைச் செலுத்தி பணம் பறித்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலியான மருந்தை ரெம்டெசிவிர் என்று செலுத்திக்கொண்ட சில நோயாளிகள் குணமடைந்த அதிசயமும் நடந்தது.

ரெம்டெசிவிர் விற்பனை
ரெம்டெசிவிர் விற்பனை
தி.விஜய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுவரை ரெம்டெசிவிர் அரிதான மருந்து. சில நிறுவனங்கள் மட்டுமே குறைந்த அளவில் உற்பத்தி செய்தன. அதற்கு புது மார்க்கெட் இருப்பதை மருந்து நிறுவனங்கள் கண்டுகொண்டன. உற்பத்தியும் தாறுமாறாக அதிகரித்தது.

ஓராண்டு முடிந்த நிலையில் இப்போது நிலவரம் என்ன?

சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள ரெம்டெசிவிர், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்கள் ஆகியவை காலாவதி தேதியை நெருங்குகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் சுமார் 60 லட்சம் குப்பிகள் இன்றும் சும்மா கிடக்கின்றன. இவற்றை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த இழப்பை மருந்து நிறுவனங்களே ஏற்க வேண்டும்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக அதிகம் பேருக்குச் செலுத்தியது, மூன்றாவது அலையில் ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிப்பு அதிகம் ஏற்படாதது போன்ற காரணங்களால் நமக்கு அப்போது ரெம்டெசிவிர் தேவை ஏற்படவில்லை. உலகம் முழுக்கவே இந்த மருந்தை வாங்குவார் இல்லை.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்

ரெம்டெசிவிர் மருந்துக்குக் காலாவதி தேதி ஆறு மாதங்களே இருந்தது. பல நிறுவனங்கள் சாமர்த்தியமாக 'stability data' என்ற ஒன்றை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்தன. 'காலாவதி தேதி முடிந்தும் அந்த மருந்து முழுமையான திறனுடன் இருக்கிறது. எனவே, காலாவதி தேதியை நீட்டிக்க வேண்டும்' என்பதற்காகக் கொடுக்கப்படும் தரவுகள் அவை. இதன் அடிப்படையில் அந்த மருந்துகளின் காலாவதி தேதி மேலும் 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. பழைய லேபிளின் மீது புது ஸ்டிக்கர் ஒட்டி இவை விற்கப்பட்டன. 'எக்ஸ்பயரி ஆன மருந்தை ஊசி மூலம் செலுத்துகிறார்கள்' என்ற சர்ச்சை பல இடங்களில் இதனால் எழுந்தது. அந்தத் தேதியும் முடியும்போது இவை அழிக்கப்படும்.

ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இப்படிக் காலாவதி ஆன நிலையில், ரெம்டெசிவிருக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism