கட்டுரைகள்
Published:Updated:

பார்த்தாலே பரவுமா மெட்ராஸ் ஐ?

மெட்ராஸ் ஐ
பிரீமியம் ஸ்டோரி
News
மெட்ராஸ் ஐ

மருந்துக்கடைகளில் விற்கப்படும் சொட்டு மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. வேறு சுய மருத்துவமும் செய்யக்கூடாது.

மெட்ராஸ் ஐ அல்லது ‘பிங்க் ஐ’ எனப்படும் பாதிப்பு, அடினோவைரஸ் (Adenovirus) அல்லது பாக்டீரியா தொற்றினால் ஏற்படுவது. இது மருத்துவத்தில் ‘கன்ஜங்டிவிட்டிஸ்’ (Conjunctivitis) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொற்றானது மழைக்காலத்தில் மிக அதிகமாகப் பரவும்.

அந்தக் காலத்தில் சென்னைத் துறைமுகத்தில் வந்து இறங்கிய கப்பல்களில் பயணம் செய்த வெளிநாட்டவர்களிடம் இருந்து, சென்னை மக்களுக்கு இந்தத் தொற்று பரவியதாம். அதன்பின் அனைத்து ஊர்களுக்கும் பரவிவிட்டாலும், இந்தத் தொற்றுக்கு ‘மெட்ராஸ் ஐ’ என்ற பெயரே நிலைத்துவிட்டது.

இது கண்களின் வெள்ளைப் பகுதியையும், இமைகளின் உட்புறத்தையும் மூடும் ‘கன்ஜங்டிவா’ என்கிற திசுவை வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமி பாதிப்பதால் ஏற்படுகிறது. கண்களுக்குள் மணல் மாதிரி ஏதோ ஒன்று உறுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். கண்கள் சிவந்து, அரிக்கும், வீங்கும், கண்ணீர் வடியும். மருத்துவரை அணுகி சரியான ஆன்டிபயாடிக் சொட்டு மருந்து உபயோகித்தால் சரியாகிவிடும்.

விஜய் ஷங்கர்
விஜய் ஷங்கர்

‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பானது காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாகவும், தொற்று பாதிப்புள்ள நபர் மற்றவர்களைத் தொடுவதாலும், அவருடன் மற்றவர்கள் பொருள்களைப் பகிர்ந்துகொள்வதாலும் எளிதில் பரவும்.

பாதிக்கப்பட்டவர் தன் துண்டு, கைக்குட்டை, தலையணை, போர்வை போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

பலரும் நினைப்பதுபோல், இது தொற்றுள்ள நபரை நேருக்கு நேர் பார்ப்பதால் ஒட்டிக்கொள்வதில்லை. அவரிடமிருந்து தொற்று அடுத்த நபருக்கும் பரவுவதால் பாதிப்பது.

பார்த்தாலே பரவுமா மெட்ராஸ் ஐ?

தொடுகையின் மூலமாகவும் (direct contact), இருமும்போதோ, தும்மும் போதோ காற்றின் மூலமாகவும் (aerosol route) அருகில் உள்ளவருக்குப் பரவலாம்.

கண் மருத்துவரை ஆலோசித்தால் தொற்றின் தீவிரத்தையும் தன்மையையும் பொறுத்து அவர் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

மருந்துக்கடைகளில் விற்கப்படும் சொட்டு மருந்துகளை வாங்கிப்பயன்படுத்தக்கூடாது. வேறு சுய மருத்துவமும் செய்யக்கூடாது.

பார்த்தாலே பரவுமா மெட்ராஸ் ஐ?

தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்தால் ஆன்டிபயாடிக் டிராப்ஸ், கண்களை வறண்டுபோகாமல் வைத்திருக்கும் லூப்ரிகன்ட்ஸ், ஸ்டீராய்டு டிராப்ஸ் போன்றவை தேவையா என்பதையும் கண் மருத்துவர் முடிவு செய்து பரிந்துரைப்பார்.

தகவல்: கண் மருத்துவர் விஜய் ஷங்கர், சென்னை