Published:Updated:

``அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் ரூ.26 லட்சம் மதிப்பிலான காலாவதி மருந்துகள்"-செல்வப்பெருந்தகை

இந்த மருந்துகளைப் பயன்படுத்தியவர்களுக்கு உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டறியப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.

`அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் ரூ 26.17 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் பயன்படுத்தபட்டிருக்கின்ரன' என ஆடிட்டர் ஜெனரல் தணிக்கைக் குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் ஆய்வு செய்த பொதுக் கணக்குக்குழு அமைப்பின் தலைவர் செல்வப்பெருந்தகை இதைத் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆய்வில் செல்வப்பெருந்தகை
ஆய்வில் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2021– 22 -ம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழு அமைப்பின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் தஞ்சாவூரில் பழைய பஸ் ஸ்டாண்ட், அரசு கூர்நோக்கு இல்லம், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடைபெறும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், சரியான நிர்வாகத் திறமையின்மை, அரசுப் பணம் விரயம் உள்ளிட்ட பல தலைப்புகளில், சி.ஏ.ஜி., அமைப்பினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் எந்தெந்தத் தவறுகள் களையப்பட வேண்டும், வரும் காலங்களில் தவறுகள் நடக்காமல் இருப்பது எப்படி, இதற்கு யார் பொறுப்பேற்பது என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம். கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான அரசுக் கட்டடங்கள் தரமானதாக இல்லை. தனியார் கட்டித்தரும் அரசுப் பள்ளி கட்டடம் தனக்காகச் சொந்தமாக கட்டுவதுபோல் தரமானதாகக் கட்டித் தந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியைத் தரக்கூடியது. பாராட்டப்படவேண்டியது. ஆனால் அரசுப் பணத்தை எடுத்துக் கட்டுபவர்கள் தரமாகக் கட்டுவதில்லை. அந்தப் பள்ளியில் அவர்கள் குழந்தை படித்தால் தரமற்ற முறையில் கட்டுவார்களா?

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
காலாவதியான பொருளுடன் ஏன் வேலை செய்ய வேண்டும்? - நேருக்கு நேர் அதிபரை வறுத்தெடுத்த பிரான்ஸ் செவிலியர்

ஒரு பள்ளியில் ஆய்வு செய்ததில் கழிவறை முறையாக இல்லை. தண்ணீர் வசதி இல்லை. புதர்மண்டிக்கிடக்கிறது. விஷப் பூச்சிகள் நடமாட்டம் நிச்சயம் இருக்கும். அதை எப்படி மாணவர்கள் பயன்படுத்த முடியும்? கடந்த ஆட்சியில், மருத்துவத்துறையில் காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆடிட்டர் ஜெனரல் தணிக்கைக்குழு கண்டறிந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்திருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 26.17 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக 2013 –14-ம் ஆண்டுகளில் இவை நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மருந்துகளைப் பயன்படுத்தியவர்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கின்றனவா, உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டறியப்படுவதுடன் தவறு இழைத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு