Published:Updated:

'' கற்களை வீசித் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்!''- விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

கற்களை வீசித் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரால், விருதுநகர் மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொதுமக்கள் ஓட்டம்.

Dhilakeshwaran
Dhilakeshwaran ( ஆர்.எம்.முத்துராஜ் )

விருதுநகர் அரசு மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால், வளாகத்தில் இருந்த பொதுமக்களை கற்களால் தாக்கினார்.

Dhilakeshwaran
Dhilakeshwaran
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே உள்ள செவலூர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர், ஸ்ரீகாந்தன். இவரது மகன் திலகேஸ்வரன் (17) கூலி வேலை செய்துவந்தார். கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரை குடும்பத்தினர் மீட்டு, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சேர்த்து 2 நாள்களாகியும் மருத்துவர்கள் அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று வார்டில் இருந்து வெளியே வந்த திலகேஸ்வரன், அவசர சிகிச்சைப் பிரிவு அருகே மருத்துவமனை வளாகத்துக்குள் கைகளில் கற்களோடு சுற்றித்திரிந்தார். மேலும், அங்கே இருந்த பொதுமக்கள் அனைவர் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளார். இவரின் இத்தகையை செயலைக் கண்டு பொதுமக்கள் பயந்து ஓடினர்.

Dhilakeshwaran
Dhilakeshwaran

இளைஞரின் செயல்குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், திலகேஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், காவல்துறையினர் மருத்துவர்களிடம் பேசி, அந்த இளைஞர்னை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை ஸ்ரீகாந்தன் கூறும்போது, “சில நாள்களாக திலகேஸ்வரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், எங்கள் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். எனவே, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். மனநல பாதிப்புக்கு சிகிச்சையளியுங்கள் என தெரிவித்தோம். ஆனால், மருத்துவர்கள் குளுக்கோஸ் மட்டுமே ஏற்றினர்.

srikanthan
srikanthan
ஆர்.எம்.முத்துராஜ்

நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. நீங்கள் சிகிச்சையளிக்காவிட்டால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புங்கள் எனக் கூறினோம். ஆனால் மருத்துவர்களோ, வீட்டுக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று மட்டும்தான் கூறினர். எங்களிடம் அவ்வளவு பண வசதி இல்லை. மருத்துவர்கள் இப்படி இருந்தால், ஏழைகளான நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்றார் வேதனையோடு.