Published:Updated:

சேலம்: கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு கவனம்... அசத்தும் அரசு சித்த மருத்துவ மையம்

சேலத்தில் உள்ள தற்காலிக அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அக்கறையுடன் கவனித்துக்கொள்வதாகக் கூறுகிறார்கள் சிகிச்சையில் குணம் பெற்றவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரம்பர்ய சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்க சேலம் உத்தமசோழபுரத்தில் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பலர், இந்த மையம் சிறப்பாகச் செயல்படுவதாகவும், இம்மையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறார்கள்.

சண்முகவேல்
சண்முகவேல்

சித்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கும் சண்முகவேல், அவர்களின் பிரதிநிதியாகப் பேசினார். ''நான் புகைப்படக் கலைஞர், ஆவணப்பட இயக்குநர். அதனால வெகுஜன மக்களிடம் நெருங்கிப் பழகுவேன். கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி இரவு கடுமையான உடம்பு வலி, தலைவலி, உட்காய்ச்சல் இருந்தது. ஒரு நிமிஷம்கூட தூங்கலை. கொரோனா பாதித்து குணமானவங்ககிட்ட விசாரிச்சேன்.

'எங்களுக்கும் இப்டிதான் இருந்தது, எதுக்கும் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்துடு'னு சொன்னாங்க. டெஸ்ட் எடுத்ததில், ஆகஸ்ட் 25-ம் தேதி எனக்குக் கொரோனா உறுதியாச்சு. சேலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்ல இடமில்ல. சித்த மருத்துவ சிகிச்சை மையத்துல கேட்டேன். 65 படுக்கைகளும் நிரம்பிட்டதா சொன்னாங்க.

கசாயம் வழங்குதல்
கசாயம் வழங்குதல்

அதையடுத்து கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில ஆங்கில மருத்துவ சிகிச்சை மையத்துக்குப் போனேன். அங்க சுத்தமான குடிநீர் இல்ல. சுகாதாரமான கழிவறை இல்ல. லைட் இல்ல. அசுத்தமான, உடைந்த படுக்கையும், பாதுகாப்பற்ற சூழலும் இருந்தது. மருத்துவர்களோ, ஊழியர்களோ முறையா கவனிக்காததால உளவியல்ரீதியா பாதிக்கப்பட்டேன்.

அடுத்த நாள், உத்தமசோழபுரத்தில் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஒரு படுக்கை காலியா இருப்பதை அறிந்து அங்க போனேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்குள்ள மருத்துவர்களும் ஊழியர்களும் கனிவா பேசி சிகிச்சை கொடுத்தாங்க. 24 மணி நேரமும் நம்மளை கண்காணிச்சு, அர்ப்பணிப்போடு வேலைபார்க்கிறாங்க. சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை இருக்கு. திடீர்னு காய்ச்சல், இருமல், தலைவலி வந்தா உடனுக்குடன் பார்த்து மருந்து, மாத்திரைகள், தைலம், டானிக்னு கொடுக்கிறாங்க.

சத்தான உணவுகள், விளையாட்டு, மூச்சுப்பயிற்சினு கொடுத்து, இந்த இடத்தை நோயாளிகளின் இடமா இல்லாம புத்துணர்வு மையமா வெச்சிருக்காங்க. நான் 7 நாள்களில் குணமாகி வீடு திரும்பினேன். சிறப்பு வாய்ந்த இந்த மையத்தை விரிவுபடுத்தணும்'' என்றார்.

சித்த மருத்துவர்-வெற்றி வேந்தன்
சித்த மருத்துவர்-வெற்றி வேந்தன்

இந்த முகாமின் சித்த மருத்துவரும் தொடர்பு அலுவலருமான வெற்றிவேந்தனிடம் பேசினோம். ''எங்கள் மையத்தில் 65 படுக்கைகள் உள்ளன. இங்கு வென்டிலேட்டர் வசதி இல்லாததால் 60 வயதுக்கு குறைவானவர்களையும், கொரோனா கட்டுக்குள் இருக்கும் நோயாளிகளையும் அனுமதிக்கிறோம். அவர்களுக்கு முதலில் கொரோனா அச்சம் காரணமாக ஏற்பட்டிருக்கும் உளவியல் சிக்கலை நீக்குகிறோம்.

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் மஞ்சள், உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்பளிக்கச் சொல்கிறோம். பிறகு மூச்சுப்பயிற்சி, கபசுரக் குடிநீர், 9 மணிக்குப் பரிசோதனை, உடனே காலை உணவு, 10 மணிக்குத் தேன், இஞ்சி சாற்றில் கலந்து குடிக்கும் பைரவ மாத்திரைகள் என்று தருகிறோம். பிறகு நடைப்பயிற்சி, வாசிப்பு, விளையாட்டு.

நண்பகல் 12 மணிக்கு புரதச்சத்து மிகுந்த சுண்டல், 1.30 மணிக்கு மதிய உணவு, 3.30 மணிக்கு சுவையான மூலிகை டீ, 4 மணிக்கு மீண்டும் சுண்டல், மாலை 5 மணிக்கு பரிசோதனை, அதைத் தொடர்ந்து விளையாட்டு, இரவு 7 மணிக்கு நிலவேம்புக் கசாயம், 8 மணிக்கு இரவு உணவு வழங்குகிறோம்.

பரிசோதனை
பரிசோதனை

இப்படியாக, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பார்வையிட்டு பரிசோதனை மேற்கொள்கிறோம். இதற்கிடையே திடீரெனக் காய்ச்சல், இருமல், தலைவலி எனப் புதிய தொந்தரவு ஏற்பட்டால் 3 நிமிடங்களுக்குள் அட்டண்ட் செய்து தீர்வு காண வேண்டும் என்ற வரைமுறையையும் வைத்திருக்கிறோம்'' என்றார்.

நன்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு